சரியான
திட்டமிடலின் ஊடாக ஆசிரியர்களை நெறிப்படுத்தி இந்த ஆண்டிலும் பாடசாலையை அபிவிருத்தியடைச்
செய்யும் நோக்குடன் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம்.
தாஹாநழீம் அவர்களின் தலைமையில் பாடசாலை தொடங்கிய முதல் நாளே ஆசிரியர்களுக்கான மேற்படி
கருத்தரங்கு 2014.01.02 ஆந் திகதி காலை 11.00 மணியளவில் பாடசாலையின் கனணி வள நிலையத்தில்
நடைபெற்றது.
இந்
நிகழ்விற்கு வளவாளராக இப்பாடசாலையின் PSI இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான Mrs. KK.
அகமட் கலந்து கொண்டார்.
இக்கருத்தரங்கின்
முக்கிய விடயமாக பாடசாலை மைய ஆசிரியர் அபிவிருத்தி
(SBTD) தொடர்பாகவும் இவ்வாண்டிற்கான செலாற்றுகை திட்டமிடல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு
சிறந்த முறையில் விளக்கம் வழங்கினார்.
இக்கருந்தரங்கில்
இப்பாடசாலையின் சகல ஆசிரியர்களும் கலந்து பயன்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment