January 2014 - Tamil News January 2014 - Tamil News
Headlines News :

Hottest List

புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்

Written By Tamil News on Saturday, January 18, 2014 | 4:35 PM

ஆரோக்கியமான வாழ்வே, மனிதனின் சந்தோஷமே, மனிதனை மிரட்டும் இந்த நோயானது ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடோ, வயது வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு தீர்வு உண்டு.

நம் உடல் கோடானு கோடி செல்களால் ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக் கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது கரு பாதிக்கப்பட்டு விடும்.

இந்த பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில் இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் அந்த பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில் உண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும்.

செல்களும், தான் எப்படி செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால் செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.

நல்ல செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி புரோகிராமை செயல் இழக்க வைத்து விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம், செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.

நல்ல செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம் சிதைத்து விடும். எந்த நோய் வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.


உடனே டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின்... மேலும்

உலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியுமா?

 அதிக மனித மனங்கள்களை  கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகையின் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது.

இக்கருத்துக் கணிப்பு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.


30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டீன் 3ஆவது இடத்திலும் போப் பிரான்சிஸ் நான்காவது இடத்திலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் 5ஆம் இடத்திலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 6 ஆம் இடத்திலும், பா.. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்திலும் அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் 8ஆம் இடத்திலும் பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 9 ஆம் இடத்திலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் (10) ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர்.

உங்களுக்கு ஞாபக சக்தியை வளர்த்து சிந்தனைத் திறனை வளர்க்க

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும்

உணவிலிருந்து கிடைக்காததே காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன.
இதற்குக்

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.
...
இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.

இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, , ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.

மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள்.

இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.


சம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில்

 கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக பாடசாலையில் தரம் -1ற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் போது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, புதிய ஆண்டுக்கான ஆளுமையையும், ஆற்றலுக்கமான ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கையாக இம்முறை இச் செயற்திட்டம் சம்மாந்துறையின் கல்வி வலயத்தில் விசேடமான வைபவமாக 2014.01.16ஆந் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆகியோரினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.


மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு தரம் – 1ற்கு 200 மாணவர்களை உள்வாங்கி அம்பாறை மாவட்டத்திலே சாதனை படைத்தது. இம்முறையும் இம்மாவட்டத்திலே அதிகளவான மாணவர்களாக 215 மாணவர்களை உள்வாங்கி சாதனை படைத்துள்ளது.

இவ்விழாவிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர், ULM. ஹாசிம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் SMMS. உமர் மௌலானா மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


தகவல்- ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர் 

சம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கருத்தரங்கு

Written By Tamil News on Friday, January 3, 2014 | 6:25 AM


சரியான திட்டமிடலின் ஊடாக ஆசிரியர்களை நெறிப்படுத்தி இந்த ஆண்டிலும் பாடசாலையை அபிவிருத்தியடைச் செய்யும் நோக்குடன் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் தலைமையில் பாடசாலை தொடங்கிய முதல் நாளே ஆசிரியர்களுக்கான மேற்படி கருத்தரங்கு 2014.01.02 ஆந் திகதி காலை 11.00 மணியளவில் பாடசாலையின் கனணி வள நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு வளவாளராக இப்பாடசாலையின் PSI இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான Mrs. KK. அகமட் கலந்து கொண்டார்.
இக்கருத்தரங்கின் முக்கிய விடயமாக  பாடசாலை மைய ஆசிரியர் அபிவிருத்தி (SBTD) தொடர்பாகவும் இவ்வாண்டிற்கான செலாற்றுகை திட்டமிடல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் வழங்கினார்.
இக்கருந்தரங்கில் இப்பாடசாலையின் சகல ஆசிரியர்களும் கலந்து பயன்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger