நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும் - Tamil News நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்

நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்

Written By Tamil News on Sunday, December 29, 2013 | 5:48 AM

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-


டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!

டீச்சர்: இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்"
வாண்டு பாபு: "தெரியலை"
டீச்சர்: "இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?"
வாண்டு: "என் காலைப் பார்த்து நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்!!"
டீச்சர்: ???

ஆசிரியர் : விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய் பாபு?
வாண்டு பாபு : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்!
டீச்சர்: ???

கணக்கு டீச்சர்: பாபு, உன்கிட்ட முதல்ல 2 முயல் தர்றேன், அப்புறம் 2 முயல் தர்றேன், கடைசியா 2 முயல் தர்றேன். இப்போ உன்கிட்ட எத்தனை முயல் இருக்கும்?
வாண்டு பாபு: 7 முயல் இருக்கும் டீச்சர்!
டீச்சர்: என்ன? நல்லா கூட்டிப் பாரு 6 முயல் இருக்கும்.
பாபு: இல்ல டீச்சர், 7 முயல் இருக்கும்!
டீச்சர்: எனக்கு கோபம் வருது பாபு... எப்படி 7 இருக்கும்?
பாபு: எங்க வீட்ல ஏற்கனவே ஒரு முயல் இருக்கு. நீங்க கொடுக்குற 6 முயலோட அதையும் சேர்த்தா 7 தானே இருக்கும்....!
டீச்சர்: ???

ஆசிரியர்: டேய் பாபு.. டீச்சர்னு மரியாதை இல்லாம என் மேல சைக்கிளால மோதுன?
வாண்டு பாபு: பிரேக் புடிக்கல சார்
ஆசிரியர்: பிரேக் புடிக்குதே...
வாண்டு: பிரேக்கை நான் புடிக்கல சார்!
ஆசிரியர்:???

டீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு?
வாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
டீச்சர்: ???

ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

ஆசிரியர்:???
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger