December 2013 - Tamil News December 2013 - Tamil News
Headlines News :

Hottest List

நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்

Written By Tamil News on Sunday, December 29, 2013 | 5:48 AM

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-


டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!

டீச்சர்: இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்"
வாண்டு பாபு: "தெரியலை"
டீச்சர்: "இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?"
வாண்டு: "என் காலைப் பார்த்து நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்!!"
டீச்சர்: ???

ஆசிரியர் : விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய் பாபு?
வாண்டு பாபு : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்!
டீச்சர்: ???

கணக்கு டீச்சர்: பாபு, உன்கிட்ட முதல்ல 2 முயல் தர்றேன், அப்புறம் 2 முயல் தர்றேன், கடைசியா 2 முயல் தர்றேன். இப்போ உன்கிட்ட எத்தனை முயல் இருக்கும்?
வாண்டு பாபு: 7 முயல் இருக்கும் டீச்சர்!
டீச்சர்: என்ன? நல்லா கூட்டிப் பாரு 6 முயல் இருக்கும்.
பாபு: இல்ல டீச்சர், 7 முயல் இருக்கும்!
டீச்சர்: எனக்கு கோபம் வருது பாபு... எப்படி 7 இருக்கும்?
பாபு: எங்க வீட்ல ஏற்கனவே ஒரு முயல் இருக்கு. நீங்க கொடுக்குற 6 முயலோட அதையும் சேர்த்தா 7 தானே இருக்கும்....!
டீச்சர்: ???

ஆசிரியர்: டேய் பாபு.. டீச்சர்னு மரியாதை இல்லாம என் மேல சைக்கிளால மோதுன?
வாண்டு பாபு: பிரேக் புடிக்கல சார்
ஆசிரியர்: பிரேக் புடிக்குதே...
வாண்டு: பிரேக்கை நான் புடிக்கல சார்!
ஆசிரியர்:???

டீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு?
வாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
டீச்சர்: ???

ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

ஆசிரியர்:???

தமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள்

Written By Tamil News on Saturday, December 28, 2013 | 7:40 AM

தமிழ் மொழிக்கு செம்மொழியென்று ஒரு பெயராகும். இந்த வகையில் ஆங்கில மொழி வந்த பிறகு ஆங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றது ஆங்கில மொழியால் அந்த அளவுக்கு எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் ஊடுறு இருக்கிறது.

உதாரணம் ஒருநாளைக்கு நாம பேசுற தமிழில் மொழியில் நமக்கே தெரியாம எத்தனை ஆங்கில சொற்களை தமிழோடு கலந்து பேசுகிறோம் யோசித்து பாருங்க, இப்படிதான் ஒவொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவிடும் நம் மொழியில் காரணம் இப்ப உள்ள தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள், தமிழ் மொழிமேல் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை தன் பிள்ளைகளை ஆங்கில மயத்தில் தான் படிக்க வைக்கிறாங்க பேச வைக்கிறாங்க. 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவிடும் என்பதை உறுதியா சொல்ல முடியும். இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் மொழி எப்படி இருக்கும் என்று என்னால் இப்பவே யூக்கிக்க முடிகிறது

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா (ஸ்மித் ஜோனெஸ்") என்ற பெண்மணி இறந்து விட்டார். இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது காரணம், அவர் இறந்து போகும் போது, ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார்.

அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்

உலகின் பெரும்பாலான மொழிகள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளதாம்

ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டு இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. இன்றைய சன்னதியினரும், அடுத்த சன்னதியினரும் தமிழை படிக்கவோ, எழுதவோ, ஆர்வம் காட்டுவதில்லை தற்போது எல்லாம் ஆங்கில மோகத்தில் போய்கொண்டு இருக்கிறார்கள். என்று அந்த அறிக்கையில் சொள்ளபட்டு இருக்கிறது

தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்துவிடும் என்பார்கள். எனவே தமிழை பற்றி பேசுவது எம் இனம் அழிவதை காப்பற்ற என்று புறிந்து கொள்ளுங்கள்

முதல் முறையாக செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை

Written By Tamil News on Thursday, December 26, 2013 | 9:19 PM

முதல் முறையாக உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை பிரான்ஸ் வைத்தியர்களால் 75 வயதான ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளதுடன் இந்த செயற்கை இதயம் 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயற்படக்கூடியது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.


அது மட்டும்லாது இந்த இதய செயற்பாட்டுக்கான மின்கலத்தை உடலுக்கு வெளியில் அணிய வேண்டும் என தெரிவிக்கப்படுவதுடன் இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிக பயன்பாட்டுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சாதாரணமான இயற்கை இதயத்தை விட செயற்கை இதயத்தின் எடை அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு்ள்ளனர்.

மலேசியாவில் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த தடை

முஸ்லிம் நாடாக இருக்கும் மலேசியாவில் கடவுளை குறிப்பதற்கு "அல்லாஹ்" எனும் சொல்லை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு என்று கோரி அங்குள்ள கத்தோலிக்கத் திருச்சபையினர் நாட்டின் அதியுயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

மலேசியாவின் பேராயர் இந்த விஷயத்தை ஃபெடரல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டுமே இறைவனை குறிக்க அல்லா எனும் வார்த்தையை பயன்படுத்த உரிமை உண்டு என பிரதமர் நஜீப் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும்,சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும் பேராயர் மர்ஃபி பாக்கியம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மலேசிய உயர்நீதிமன்றம் "அல்லாஹ்" என்னும் சொல்லை அனைத்து மதத்தினரும் பயனபடுத்தலாம் என மலேஷிய உயர்நீதிமன்றம் நீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக, ஆளும் அம்னோ அரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றதைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பு ரத்தானது.

இப்போது அதற்கு எதிராக நாட்டின் அதியுயர் நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றுள்ளது.

பல மதங்களின் நூல்களில் அல்லா எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கத்தோலிக்கத் திருச்சபையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாக இந்த வழக்குடன் தொடர்புடையவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சார்லஸ் சந்தியாகோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சவுதி அரேபியா, இந்தோனேஷியா, இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மற்ற மதத்தவர் அல்லா எனும் சொல்லை பயன்படுத்தத் தடையில்லை என்று கூறியிருந்தாலும், மலேசியாவை ஆளும் கூட்டணி இதை அரசியலாக்குகின்றனர் எனவும் சந்தியாகோ சுட்டிக்காட்டினார்.


இதனிடையே கத்தோலிக்கத் திருச்சபை செய்துள்ள மேல்முறையீட்டை அந்த ஃபெடரல் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசியாவின் ஆறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மன்றங்களும் ஒரு சீன முஸ்லிம் அமைப்பும் கோரியுள்ளன.

சாதனைக்காக சந்தர்ப்பத்தை தோற்றுவிக்கும் துபாய்!

ஏதாவது ஒரு வனோதத்தை வித்தியாசமாகச் செய்தால் அவை சாதனையாகும் என்பதை பல சம்பவங்கள் சான்று பகிர்கின்றன. வினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை குவிக்க துடிக்கும் பகுதியாகும்.



எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த துபாய் நகரம் வரும் புத்தாண்டு தினத்தன்று மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவெடிக்கை வீரர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளனர். இதில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு ரசிக்கமுடியும்.



வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று துபாய் நிர்வாகம் கூறியுள்ளது.

மிகப்பெரிய மிதக்கும் புத்தகசாலை இலங்கையைத் தொட்டது!

உலகில் மிகப்பெரிய மிதக்கும் புத்­த­கச்­சாலை எனக் கூறப்­படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் இன்று முதல் எதிர்­வரும் ஜன­வரி 7 ஆம் திகதி வரை காலி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இந்த மிதக்கும் புத்­தகச்­சாலை 09 மாடி­களை கொண்­ட­துடன் 132 அடி நீள­மா­னது. இது­வரை 164 நாடு­களில் ஆயி­ரத்து 400 துறை­மு­கங்­களில் இந்த கப்பல் நங்­கூ­ர­மிட்­டுள்­ளதுடன் இதில் 45 நாடு­களை சேர்ந்த 400 பேர் தொண்டர் ஊழி­யர்­க­ளாக பணி­யாற்றி வரு­கின்­றனர்.

ஜேர்­ம­னியில் பதிவுசெய்­யப்­பட்­டுள்ள தொண்டர் அமைப்பின் கீழ் இந்த கப்பல் செயற்­பட்டு வரு­கி­ற மேற்­படி கப்­பலில் 5 ஆயிரம் புத்­த­கங்­களை கொண்ட நூலகம் ஒன்றும் உள்­ளது.

காலி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும் இந்தக் கப்­பலை பார்­வை­யிடச் செல்­வோரில் 12 வய­துக்கும் மேற்­பட்­ட­வர்­க­ளிடம் 100 ரூபாவைக் கட்­ட­ண­மாக அற­வி­டவும் லோகோஸ் ஹோப் கப்­பலின் அதி­கா­ரிகள் எதிர்­பார்த்­துள்­ளனர்.

கிழமை நாட்­­களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரையும், சனிக்­கி­ழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழ­மை­களில் பிற்­பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் கப்­பலை பார்­வை­யிட முடியும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


புது­வ­ரு­டத்தை முன்னிட்டு ஜனவரி முதலாம் திகதி மட்டும் கப்பலை பார்வையிட முடியாது என தெரிவிக்கப் பட்டு ள்ளது.

உலகயே உலுக்கிய சுனாமி நினை நாள் 26.12.2013

பி.எம்எம்..காதர்-
'சுனாமி' உள்ளங்களை உலுக்கி உணர்;வுகளை உறங்கச் செய்து உயிர்களைப் பலி கொண்ட நாள் 2004-12-26ம் திகதியாகும்இந்த நாளை யாராலும் மறக்க முடியாது. நம்மை அறியாமலேயே இன்று (2013-12-26) ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இந்த சுனாமியில் வீழ்ந்தவர்களும் உண்டு எழுந்து நின்றவர்களும் உண்டு. சுனாமி இழப்பில் இன்று வரை மீளாமல் இருப்பவர்களும் உண்டு. ஜாதி மதம் இனம் என்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரையும் சுனாமி ஒற்றுமைப்படுத்தியது.
சுனாமி அனர்த்தம் சிலரை வாழ்விழக்கச்; செய்தாலும் சிலரை வாழவைத்தும்

இருக்கின்றது. சிலர் சுனாமியைச் சொல்லிச் சொல்லி இன்று வரை கையேந்தி வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் சிலர் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து எங்களாலும் வாழ முடியும் என்பதை நிரூபித்தும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் என்பதை கடந்த ஒன்பது ஆண்டுகள் நமக்குப்புரிய வைத்திருக்கின்றது.

சுனாமி அனர்த்தத்தில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப்

பிரதேசத்தில்; மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் கல்முனையாகும் இங்கு பெரும் தொகையான முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் உயர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதே போன்று கோடிக் கணக்கான சொத்துக்களும் பொருட்களும் உயிரினங்களும் அழிந்தன,

கணவனை இழந்த மனைவி மனைவியை இழந்த கணவன் பிள்ளைகளை

இழந்த பெற்றோர் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் சகோதரனை இழந்த சகோதரி சகோதரியை இழந்த சகோதரன் என பலதரப்பட்ட உறவுகளால் பின்னிப் பிணைந்த உடன் பிறப்புக்கள் மற்றும் நட்புடன் கூடிய சொந்த பந்தங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தமை பலரின் வாழ்வில் மறக்க முடியாத தடயங்களாய் இன்றும் இதயச் சுமையாகிப் போய்விட்டது.

இயற்கையாய் மரணிப்பதற்கும் அனர்த்தம். விபத்து, காணாமல் போகுதல் கொலை போன்றவற்றால் மரணிப்பதற்கும்  இடையில் வித்தியாசமான மனோநிலை உருவாகும். சிலர் தைரியமான மன நிலையல் இழப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள் சிலர் மன வேதனையுடன் மன நோயாளிகளாக மாறி அந்த நிலையிலேயே மரணித்தும் பொய்விடுகின்றார்கள. இது சுனாமியின் கண்டறியப்பட்ட உண்மையாகும்.


இந்த நிலையில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் பலர் கல்வி கற்க வசதி இல்லாத நிலையிலும் அவர்களை ஒழுங்காகப் பராமரிக்க ஆள் இல்லாத நிலையிலும்  கல்வியைத் தொடர முடியாமல் இடைநடவே விட்டு  விட்டு திசை மாறிச்செல்கின்ற நிலைக்குள்ளாகி இருக்கின்றனர். பல சிறுவர்கள் வீட்டு வேலை மற்றும் கடைகளிலும் தொழில் புரிவதையும்  அவதானிக்க முடிகின்றது. இன்னும் சிலர் சமூகச்சீர் கேடுகளுக்குள்சிக்கி போதைவஸ்துப்பாவனைக்கு  அடிமையாகி தங்களை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.






மறுபக்கத்தில் சுனாமியில் கணவனை இழந்த சில விதவைகள் தங்கள் குடும்ப வாழ்வை முன்னெடுக்க முடியாமல் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா.; விதவை வாழ்வு என்பது முள்ளில் நடப்பதைப் போன்ற தாகும் இந்த நிலையில் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் உணவு மற்றும் உடை ஏனைய செலவுகள் போன்றவை பாரிய சுமையாகவே அமைந்த விடுகின்றன இவ்வாறான சுமைகளுடன் எத்தனையோ விதவைகள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


இவ்வாறான சூழ்நிலையில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இன்னும் வீடுகளை கட்டிக்கொடுக்காத நிலையும் கட்டிய வீடுகளைக் கொடுக்காத நிலையும் கானப்படுகின்றது. பல குடும்பங்கள் இன்றுவரை கொட்டில் களிலும், குடிசைகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக வயது வந்த பல பெண்பிள்ளைகள் திருமணவாழ்வில் இணைய முடியாமல் முதிர் கன்னிகளாக வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள 500 வீட்டுத்திட்டமானது சமூக விரோத செயற்பாடுகளின்  உறைவிடமாகவும்  பற்றைக் காடுகளாகவும் காட்சியளிக்கின்றன. இதற்கு காரணம் சுனாமியால் பாதிக்கப்படாத சிங்கள மக்களுக்கும் அதில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அரசியல் வாதிகள் முரண்டு பிடிப்பதே ஆகும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென அவர்களின் கலை, கலாசார அடையாளங்களை பிரதிபடுத்தக்கூடியவாறு இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கபபடாத சமூகம்; உரிமை கோருவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும். தற்போது இவ்வீட்டுத்திட்ட விவகாரம் நீதி மன்ற விடயத்தில் இருப்பதனால் அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை;.

 இதனால் உறவுகளை, வீடுகளை இழந்த மக்கள் அகதிகளாகவே உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காலம் தாழ்த்தாது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். சில அரசியல் வாதிகள் இதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தி ஏழைகளின் வயிற்றெரிச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
இதே போன்று கல்முனை தமிழ் பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென  அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்ங்களும் அரையும் குறையுமாகவே காணப்படுகின்றன. இதில் பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் இன்றும் வசதிகள் அற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இங்கும் சில வீடுகள் முழுமை பெறாத நிலையில் உள்ளன.
2004 டிசம்பர் 26 இற்கு முன்னர் தனித்தனி வீடு , வாசல்களில் சுதந்திரமாய் வாழ்ந்த இப்பகுதி மக்கள் இன்று தொடர் மாடி வீட்டுத் திட்டங்களில் சொல்லொண்னா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் கல்முனை பெரியநீலாவணை பகுதிகளிலுள்ள  குறித்த தொடர் மாடிகளில் நீர், மின்சாரம் சுகாதாரம் மற்றும் கலைகலாசார ரீதியிலான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக இவர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு மத்தியிலே காலத்தை கடத்தி வருகின்றனர்.


மேலும் மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்தில் பல வீடுகள் இன்னும் வழங்கப்படாமல் மாவட்டச் செயலாளரினால் இன்று வரை  இழுத்தடிக்கப்பட்ட வருகின்றது. மேலும் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பல குடும்பங்களுக்கு பூரணமாக இன்னும் வீடகள் வழங்கப்படவில்லை இதனால் பல குடும்பங்கள் நிர்க்கெதியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.



ஓவ்வொர வருடமும் சுனாமி நினைவுநாளில் இழந்த உறவுகளை நினைத்து அழுது புலம்பி ஆர்ப்பரித்து தங்கள் மனச்சுமைகளை குறைத்துக் கொள்வதைத்;தவிர வேறு வழியில்லை எனபதே யதார்த்தமாகும். சுனாமி நமக்குக் கற்றுத் தந்த பாடங்களை அடிப்படையாக வைத்து எம்மைப் படைத்த இறைவனை முன்னிறுத்தி வாழ்வதே மறுமை வாழ்வுக்கு வழிகோலும்

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger