இஸ்லாம் வலியுறுத்தும் கல்வி என்ன? - Tamil News இஸ்லாம் வலியுறுத்தும் கல்வி என்ன? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இஸ்லாம் வலியுறுத்தும் கல்வி என்ன?

இஸ்லாம் வலியுறுத்தும் கல்வி என்ன?

Written By Tamil News on Sunday, November 10, 2013 | 4:36 PM


மனிதனுடைய வாழ்வினை நல்வழிப்படுத்துவதற்கு அறிவு முக்கியமானது. அதன் நிமிர்த்தம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான புனித குர்ஆன் இறைவனால் தன் திருத்தூதருக்கு அருளப்பட்ட போது அதன் ஆரம்ப வசனம் ஒதுவீராக வாசிப்பீராக எனும் பொருள் படும் வண்ணம்இக்ரஃஎன்றே கட்டளையை பிறப்பித்தது. இதன் மூலம் கல்விக்கு இஸ்லாம் எத்துணை முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.


கல்வியின் மேன்மை பற்றி சிறப்பித் துக் கூறுகையில் அண்ணல் நபியவர்கள்யார் அறிவைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கிறாரோ அவருக்கு சுவனம் செல்லும் பாதையை இறைவன் இலகு படுத்தி விடுகிறான்என்று மொழிந்து ள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

அறிவியலுக்கும், கல்விக்கும் இஸ்லாம் பெற்றுக் கொடுத்துள்ள பெருமைகளை அல்குர்ஆனும், அல் ஹதீஸ¤ம் அற்புதமாக, மகத்துவமாக, சிறப்பாக தெளிவுபடுத்தியுள்ளன.

கல்வி ஒரு சமுதாயத்தின் கண்ணாடி. அது அளப்பரிய செல்வம் அது இளம் இதயங்களிலேயே துளிர்க்க வேண்டும். அதற்கு உறுதுணை புரிய வேண்டியவர்கள் அவர்களை உயிர்ப்பித்த பெற்றோர்களே. குழந்தைகள் என்போர் விலை மதிக்கவொண்ணாத சொத்துக் கள். நமது வாழ்வின் மூலதனமும் இவர்களே. எனவே அவர்களை கல்வியில் சிறக்க வைத்து நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற உயரொழுக்க சீலர்களாக வளர்த்தாளாக்க வேண்டியது பெற்றவர்களின் பெரும் கடனாகும்.

அண்ணலாரின் பொன்மொழியொன்று இவ்வாறு கூறுகிறது. “ஒரு தந்தை தனது குழந்தைக்கு நல்ல பெயர் இடுவதும் நல்- அறிவைக் கற்றுக் கொடுப்பதும் அவசியம்என்று (அல்-ஹதீஸ்) பள் ளிக்கு அனுப்பி விட்டால் போதும் தானா கவே கற்றுத் தேறி வருவான் என்று எதிர்பார்த்திருக்கும் பெற்றோர் இன்றும் இல்லாமல் இல்லை. எழுத்தைக் கற்பது மட்டும் கல்வியல்ல. இறைவன் படைப்பிலுள்ள அனைத்தையும் பற்றி அறிவு பெறுவதையும் கல்வி அறிவு எனக்கொள்ளலாம்.

ன்மீகம்- லெளகீகம் என்பது இரு துறைக் கல்விகள் ஆன்மீகத்தை மட்டும் கற்குமாறு இஸ்லாம் இயம்பவில்லை. லெளகீகத்தை மறக்குமாறும் இஸ்லாம் வலியுறுத்தவில்லை. இந்த இரு துறைக் கல்விகளிலும் வேறுபாட்டை உருவாக்காமல் ஆன்மீக- லெளகீக அறவுகளுக்கு சம அந்தஸ்தை வழங்கிய இதே இஸ்லாம் கற்பது இறை திருப்தியை ஏற்படுத்தும் வணக்க வழியாடுகளைச் சார்ந்தது எனவும் கூறுகிறது. எனவேவஇந்த வழிபாட்டு வழிமுறைக்கு வழி செய்து கொடுப்பது பெற்றார் என்ற முறையில் எம் பொறுப்பு அல்லவா?

எனவே இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படையில் கல்வியை நோக்கும் போது அங்கு எப்போதும் ஒழுக்கத்துடனேயே பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. ஆகவே மாணவர்களாக இருக்கும் போதே அவர்களிடம் நற் பண்புகளை யும், நல்லொழுக்கங்களையும் நற்பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்த முயல வேண்டும். மாணவப் பருவத்திலேயே அவர்களை நன்கு கண்காணித்து வழிப்படுத்தும் வகை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களது ஆளுமையை நெறிப்படுத்த முடிகிறது. அன்றேல் அபாயகரமான எதிர்விளைவுகளை நாம் எதிர் கொள்ள வேண்டி ஏற்டபலாம்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனது கப்றிலே பயன்படக்கூடிய மூன்று விடயங்கள் உள்ளன அவையாவன; 1. நிந்தரமான தர்மம். 2 பிரயோசனமான கல்வி 3. நல்லொழுக்கம் நிறைந்த பிள்ளையின் துஆ ஆகிய மூன்றுமே அவை. ஒரு குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே கவனிப்பது போதியதல்ல உள ஆரோக்கியமும் சிறப்பாக பேணப்பட வேண்டிய ஒன்றே.

கல்வி பயிலும் மாணவனின் உள்ளம் கூறுவதே சரியெனக் கருதும் பக்குவம் அங்கு ஏற்படும் முன் நல்லன பற்றியும் தீயன பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்துவது பெற்றோரின் முக்கிய கடமையாகும். வாய்ப்பைத் தவற விட்டு விட்டால் அந்த மனதை இனியொரு நாளும் கட்டுப்படுத்த முடியாது போய்விடலாம் அந்த விளைவு வாழ்நாள் முழுவதையுமே வீணாக்கியும் விடலாம்.


எனவே இஸ்லாம் முக்கியத்துவம் வழங்கியுள்ள கல்வியினால் சமூகம் ஒரு போதும் பயன் பெற இயலாமல் போகவும் இடமுண்டு. எனவே பெற்றோர்களே இளம் உள்ளங்கள் பக்குவப்பட வேண்டுமானால் அங்கே ஏகத்துவம்நிலைகொள்ள வேண்டும், ஏகத்துவம் பற்றிப் பேசும் மறை வசனங்கள் இளம் உள்ளங்களை பசுமரத்தாணியாகக் கவர்ந்து விடும். ‘அந்த ஏக தெய்வக் கொள்ளை உணர்த்தும் படிப்பினைகள் இளம் இயதங்களில் ஆளுமை வளரவும் எதிர்காலம் சீர் பெறவும் வழி கோலும் எனவே பெற்றோர் ஒரு மாணவனது அறிவு வளர்ச்சிக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் பெரும்பங்காளிகள்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger