இளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா ? - Tamil News இளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா ? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா ?

இளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா ?

Written By Tamil News on Thursday, August 22, 2013 | 6:21 AM

இங்கிலாந்து இளவரின் டயனாவின் இரகசியமான படுகொலை தொடர்பான தகவல் தற்போது இன்னும் முடிவடையவில்லை.
இளவரசி டயானாவின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை டயனா உயிரிழந்த 1997 ம் ஆண்டிலிருந்து ஸ்கொட்லாந்து பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  ஸ்கொட்லாந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான மேலதிக தகவல்களை சேகரித்து வழங்கியுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் 31-8-1997 அன்று காதலர் டோடி ஃபயீத்துடன் பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் காரில் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

டயானாவை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, இங்கிலாந்து அரசு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பிரான்ஸ் அரசு நடத்திய விசாரணையின் முடிவில் கூறப்பட்டது போல் டயானாவின் கார் டிரைவர் அதிக போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்தில் சிக்கி டயானா உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியிடம் அரச குடும்பத்தாரின் உத்தரவின்படிதான் டயானாவை இங்கிலாந்து ராணுவத்தினர் கொன்று விட்டனர் என ரகசியமாக கூறி வைத்துள்ளார்.

ரகசியத்தை கூறிய ராணுவ வீரர் தற்போது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதால் மனைவின் பெற்றோர் இவ்விவகாரத்தை ராணுவ உயரதிகாரிகளுக்கு கசிய விட்டு, ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் மருமகனைபோட்டுக் கொடுத்துபழி வாங்க தற்போது முன்வந்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் மேற்படி புதிய தகவல் தொடர்பாக விசாரனை நடத்த ஸ்காட்லேண்ட் யார்ட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


இதற்காக ரகசியத்தை கசியவிட்ட ராணுவ வீரரின் முன்னாள் மனைவியை தொடர்பு கொண்டுள்ள போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றனர்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger