பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா? - Tamil News பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா?

பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா?

Written By Tamil News on Thursday, August 22, 2013 | 6:07 AM


அதிசயங்கள் ஆயிரம் நடக்கிறது அவைகள் எங்களுடைய கற்பனைக்கு எட்டாதது. வயிற்றில் பாம்பை சுமந்த பெண். "டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில்  உறைந்து போயினர்" அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப்பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம்
எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும்  மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள். அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான். உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப்பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.
அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது. ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.


இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger