மனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம் - Tamil News மனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » மனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம்

மனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம்

Written By Tamil News on Sunday, July 21, 2013 | 2:53 AM

மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எல்லா போதைகளும் அவனுக்கு எதிரியே எனவே, உலக சுகாதார ஸ்தாபனம் ஒவ்வொரு நிமிடமும் உலகில் 6 பேர் புகையிலையினால் ஏற்பட்ட நோய்களினால் மரணிக்கிறார்கள் என்றும் இதன்படி ஒவ்வொரு வருடமும் 30 இலட்சம் பேர் மரணிக்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறது. இளம் வயது முதல் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையானவரின் ஆயுட் காலம் 8 முதல் 10 வருடங்களால் குறைந்து விடுகிறது.

இந்தப் புள்ளிவிபரங்களின் படி அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஆண்கள் 50 சதவீதமானோரும் பெண்கள் 8 சதவீதமானேரும் புகைத்தலுக்கு அடிமையாகி உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி புகைப்பழக்கம் உடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும் போது சிலருடைய கண்பார்வை முழுமையாக இல்லாமல் போய் விடும். என்றும் சிலருடைய பார்வை குறைந்து விடும் என்றும் தெரியவந்துள்ளது.

50 வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே இவ்விரு தீய பழக்கங்களினால் புற்றுநோய் மற்றும் ஈரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதனால் பல்தேச புகையிலை நிறுவனங்களும் மதுபானங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இப்போது பாடசாலை விட்டு வெளியேறும் மாணவச் செல்வங்களை இலக்கு வைத்து அவர்களை இவ்விரு தீய பழக்கங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கு உகந்த வகையில் விளம்பரங்களையும், பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

சிகரட் புகைத்தல் உயிராபத்தை ஏற்படுத்தும் என்ற அறிவித்தல் சிறிய எழுத்துக்களில் சிகரெட் பக்கட்களில் அச்சிடப்பட்டுள்ள போதிலும் புற்றுநோயளிகளின் புகைப்படங்களை அவற்றில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை புகையிலை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதனால் தொடர்ந்தும் இதுபற்றி நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக்கூடாது பொதுஇடங்களில் புகைத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றெல்லாம் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும் இன்றும் கூட இலங்கையில் சரியான பொலிஸ் கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தல் பொது இடங்களில் புகைத்தல் போன்ற சட்ட விரோத குற்றச் செயல்கள் நடந்த வண்ணம் இருக்கிறது.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் புதைத்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளின் போது புகைத்தலும், மது அருந்துதலும் உயிராபத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆயினும் தொடர்ந்தும் சிகரட் விற்பனையும் மதுபான விற்பனையும் இலங்கையில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஜே.வி.பி 1971ம் ஆண்டிலும் 89,90ம் ஆண்டுகளிலும் மேற்கொண்ட ஆயுதக் கிளர்ச்சியினாலும் எல்.ரி.ரி. பயங்கரவாத இயக்கம் நடத்திய 30 ஆண்டு யுத்தத்தினாலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நம் நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் உயிர் துறந்தார்கள்.

இவ்விரு ஆயுத போராட்டங்களில் இறந்தவர்களை விட இப்போது கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர்கள் புதைத்தலுக்கும், மதுவுக்கும் அடிமையாகி உயிர்துறக்கிறார்கள்.

புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு பக்கவாதம் ஆகியன ஏற்படுவதற்கு பிரதான காரணமாகவும் அமைந்திருக்கிறது.

புகைத்தலால் ஆஸ்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால் ஆஸ்மாவை தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத் தன்மையும் குறைகிறது.

இதுபற்றி ஒரு தடவை ஒரு பொது நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் போயா தினத்திற்கு முன்தினம் சாராயக் கடைகளில் மக்கள் க்யூ வரிசையில் இருந்து மதுபோத்தல்களை வாங்கிச் செல்வதுடன் சிகரட் பக்கட்களையும் எடுத்துச் செல்கிறார்கள்.

மறுநாள் போய தினத்தன்று பெரும்பாலானோர் மதவழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பிரார்த்திப்பதற்குப் பதில் தங்கள் இருப்பிடங்களில் இவற்றை பயன்படுத்தி மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் அப்போது தான் எங்கள் நாட்டில் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டி எழுப்பலாம் என்று ஜனாதிபதி அவர்கள் மறைமுகமாக புகைப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கண்பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரைநோய் (பூவிழுதல்) வருவதற்கான வாய்ப்பும் புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகமாக ஏற்படும். மற்றவர்கள் முன் நாணி நிற்கவேண்டிய கரைப்படிந்த பற்களுக்கும் அசிங்கமாக தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புதைத்தல் முக்கிய நோயாகும்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் மக்களின் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்கள் எவ்வளவுதான் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்தும் புகைப்பிடித்தலின் மூலம் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.

புகைத்தலினால் வருடத்திற்கு 6 மில்லியன் மக்கள் மரணிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலா னோர் குறைந்த நடுத்தர அளவிலான பொருளாதார நிலையில் சிக்குண்டு இருக்கும் வறிய நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை வலியுறுத்துகிறது.

முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய் நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகும். புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் சாத்தியமும் அதிகரிக்கிறது.

இன்றைய போக்கில் புகைத்தலினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தால் 2030ம் ஆண்டளவில் 8 மில்லியன் மக்கள் புகைத்தலினால் மரணிப்பார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மாக்ரெட் சேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனைவி சமிஞ்சை காட்டினாலும் கணவன் தாம்பத்திய உறவுக்கு தயக்கம் காட்டும் அளவிற்கு ஆண்மைத் தன்மை ஆண்களிடையே குறைந்து விடுவதற்கு புகைத்தலே முக்கிய காரணமாகும்.

ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் புகையிலை மற்றும் மதுபான விற்பனையின் மூலம் கணிசமான அளவு வருமானத்தைப் பெறுகின்ற போதிலும் இலங்கை உட்பட அவ் அரசாங்கங்கள் தங்கள் தேசிய வருமானம் இதன் மூலம் வீழ்ச்சி அடைந்தாலும் புகைத்தலையும் மது அருந்துவதையும் ஒழித்துக்கட்டுவதற்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

புகைத்தல் மற்றும் மதுபான பழக்கம் இதயநோய், புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.

பனாமா நாட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றி டாக்டர் மாக்ரெட் சேன் புகைத்தலினாலும் மது அருந்துவதினாலும் நோய்வாய்ப்படும் மக்களைக் கொண்ட ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களை காப்பாற்றுவதற்கு அரும்பாடுபடுகின்றன என்று குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் மாத்திரம் புகைத்தலினால் 5 மில்லியன் பேர் மரணித்திருக்கிறார்கள் இவர்களை விட மேலும் 6 இலட்சம் பேர் புகையிலையுடன் தொடர்புடைய நோய்களினால் மரணித்துள்ளார்கள்.

புகைப்பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது. புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் இரத்தொட்டத்தை ஒரு மணிநேரம் குறைக்கின்றது. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் ஏற்பட்டு உண்மையான வயதைவிட முதிய தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

20ம் நூற்றாண்டில் மாத்திரம் புகையிலை பாவணையினால் 100 மில்லியன் மக்கள் மரணித்திருக்கிறார்கள். ஆயினும் 21ம் நூற்றாண்டில் புகையிலை மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியன் ஆக அதிகரிக்கும் ஆபத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் எச்சரிக்கை செய்கின்றார்.

தொற்றாத நோய்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டுமாயின் புகையிலை மற்றும் மதுபானங்களின் விளம்பரங்கள், பிரசார நடவடிக்கைகள் அவற்றிற்கான அனுசரணை அளித்தல் போன்ற அனைத்தையும் முற்றாக தடைசெய்ய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரான டாக்டர் வெச்சட் அறிவித்துள்ளார்.


இத்தகைய ஆபத்துக்கள் எங்கள் நாட்டை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ள எங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்காக அயராது உழைத்து வரும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாண்டில் நாம் தொற்றாநோய் தடுப்புக்கான பாரிய பிரசாரங்களை மேற்கொண்டு எங்கள் நாட்டின் இளைஞர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு திடசங்கட்பம் பூண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger