ஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Tamil News ஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Written By Tamil News on Sunday, July 21, 2013 | 3:20 AM

ஆனந்த குமாரசுவாமி இங்கிலா ந்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற தகுதி பெற்ற முதல் இலங் ;கையர். முத்து குமாரசுவாமியினதும் பிரித்தானிய நாட்டவரான எலிசபெத்க்ளே பிபீயினதும் புதல்வராக 1877ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டியில் பிறந்தார்.

ஆயினும் ஆனந்த கெந்திஸ் குமாரசுவாமி சிறுவனாக இருக்கும்போதே அவரின் தந்தை முத்துக்குமாரசுவாமி காலமானார். அதனையடுத்து ஆனந்த குமார சுவாமியை அவரின் தாயார் எலிசபெத் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார்.

வைக்லிப் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த இவர் பின்னர் லண்டன் பல் கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற் ;கொண்டார்.

தனது 23ஆவது வயதில் பு+கற்பவியல் துறையில் முதல்தர கௌரவப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற அவருக்கு அப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

அத்தோடு மேலும் அங்கேயே தனது உயர் கல்வியை மேற்கொண்ட ஆனந்த குமாரசுவாமி பு+கற்பவியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். அத்து றையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலா வது இலங்கையர் அவரே.

நாடு திரும்பிய இவர் இலங்கை கனிப்பொருள் திணைக்களத்தின் அத்தி யட்சகராகப் பதவியேற்றார். இந்தப் பதவியானது நாட்டின் நாலா திசைக்கும் செல்லும் வாய்ப்பை பெற்றுக் கொடு த்தது.

நாட்டின் நாலாபுறங்களுக்கும் பயணம் மேற்கொண்ட அவர் பல்வேறு ஆராய ;ச்சிகளை மேற்கொண்டார். அத்தோடு பெறுமதிமிக்க புராதன பௌத்த விஹா ரைகள் சிலை சிற்பங்கள் ஆகியன மேற்கத்தேய ஆட்சிக்காலத்தில் கவனிப் ;பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டி ருந்ததை உணர்ந்த அவர் அவற்றின் பெறுமதியை வெளிக்கொணரும் வகை யில் திட்டமொன்றை வகுத்தார்.

அவரின் உயர்கல்வி புவிகற்பவியல் துறை சார்ந்ததாக இருந்த போதிலும் கலை, சிற்பக்கலை, செதுக்குக்கலை, தத்துவம் ஆகியன தொடர்பில் அவரின் ஆர்வம் மிக உச்ச நிலையில் இருந்து வந்தது. அதன் விளைவாகவே அவர்மத்திய காலத்தில் சிங்களக்கலைஎன்ற அரிய நூலை அவர் படைத்தார்.

சிங்கள சமூகத்தின் பண்டைய பாரம்பரிய கலைத்துவங்கள் பற்றி மிகப் பெறுமதியான தகவல்களை இந்நூல் மூலம் எடுத்துக் கூறினார்.

சமூகத்தில் காணப்பட்ட அணிமணி அலங்காரம், சிற்பக்கலை, மரவேலைப்பாடுகள், கல் சிற்பக்கலை, சிலை வடிப்பு, ஓவியம், தந்தம், எலும்பு, கொம்பு, சிப்பி ஓடு, சாயம் போடுதல், மட்பாண்டம், நெசவு மற்றும் சித்திர தையல் வேலை ஆகிய வற்றை அவர் தெளிவுபடுத்தினார்.

இந் நூலுக்காகவே லண்டன் பல்கலை க்கழகம் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது.

நமது நாட்டிற்கும் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என்பதனை அனுப வபூர்வமாக அறிந்த குமாரசுவாமி அதன் அவசியத்தை வலியுறுத்தி வந்த துடன், கல்வி கற்பித்தல் தாய்மொழி மூலம் மாத்திரமே மேற்கொள்ள வேண ;டும் என்பதை தொடர்ந்தும் வலியுறு த்தினார்.

1911இல் மீண்டும் லண்டன் சென்ற குமாரசுவாமி புத்தர் சிலையின் பிறப்பு, பௌத்த சிற்ப க்கலை உட்பட பல அரிய நூல்களை வெளியிட்டார்.

சிறந்த ஓவியராக விளங்கிய அவர், இலங்கை மற்றும் இந்திய சுவர் ஓவியக்கலை தொடர்பான பல ஆராய்ச்சிகளையும் நடத்தினார். இந்தியா மத்திய ஆசிய மற்றும் இலங்கையின் சுவர் ஓவியம் எனும் நூல் அவ் ஆராய்ச்சியின் பலனா கும்.

அவரின் அறிவையும் திறமையையும் அறிந்த அமெரிக்காவின் பு+ஸ்டன் பல்கலைக்கழகம் அதன் நூதனசாலை யின் பராமரிப்பாளர் பதவியை அவ ருக்கு வழங்கியது.


தான் பிறந்த நாட்டிற்கும் உலகிற்கும் அரும்பணியா ற்றிய ஆனந்த குமாரசுவாமி 09.09.1947இல் அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் காலமானார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger