இந்த உலகம் அழிந்து போகுமா? போகாதா? - Tamil News இந்த உலகம் அழிந்து போகுமா? போகாதா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இந்த உலகம் அழிந்து போகுமா? போகாதா?

இந்த உலகம் அழிந்து போகுமா? போகாதா?

Written By Tamil News on Sunday, July 21, 2013 | 2:42 AM

இந்த உலகமும், அதல் உள்ள சகல அங்கிகளும் அழியுமா? அழியாதா? என்ற பிரதிவாதங்களின் முடிவிகளிலிருந்து நாங்கள் எடுக்கும் முடிவுக்கு முன்னர் இந்தக் கட்டுரையை வாசிக்கவும். 

பூமியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்திய மெக்ஸிக்கோவிலுள்ள ஓர் இடம் இது.

உலகிலுள்ள மனிதர்களும், சகல விலங்கினங்களும், தாவரங்களும் முற்றாக அழிவுற்ற பின்னர் உலகை சிறிய நுண்ணுயிர்கள் ஆக்கிரமிக்கும் என்றும் அதற்குப் பின்னரே உயிரினங்கள் தோன்றும் என ஸ்கொட்லாந்தின் சென் என்றூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான் உயிரியில் நிபுணரான ஜெக் மெலே ஜேம்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சுற்றாடலில் காபனீரொட்சைட் குறைவாக இருப்பதனால் ஆமர்கேடன் என்ற இன்னுமொரு நச்சுத்தன்மை கலந்துவிடுகிறது. இதனால், உலகம் உஷ்ணமடைவதை தடுப்பதற்காக பச்சைவீட்டை வலுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் இப்போது பெருமுயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.


 பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த பாரிய பாராங்கல் விண்வெளியில் எரிந்து சிறுதுண்டுகளாக விழும் காட்சி
சூரியன் இப்போது வயோதிபத்தை அடைந்து வருவதனால் அதன் உஷ்ணம் உச்சக்கட்டத்துக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், மழைநீர் ஆவியாக மாறி மேல் எழும்போது மேலும் கூடுதலான காபனீரொட்சைட் மேல்மட்ட வலயத்தில் சூழ்ந்து கொள்கிறது.

இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் இதன் அளவு மிகவும் குறைந்துவிடும் என்றும் அதனால் உலகில் தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடுமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 யூஜின் மேர்லின் மார்க்கர் (உலகம் அழிந்தமைக்கான ஆதாரங்களை முதலில் கண்டுபிடித்த விஞ்ஞானி
இரண்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் தாக்கத்தின் காட்சி

இன்னும் இரண்டு பில்லியன் வருடங்களில் உலகிலுள்ள சமுத்திரங்கள் அனைத்திலும் உள்ள நீர்த்தன்மை நீராவியாக மாறி அழிந்துவிடும் என்றும் பின்னர் இந்த சமுத்திரங்களில் களிமண்களைப் போன்று மண் திடல்கள் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


இரண்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் தாக்கத்தின் காட்சி

இந்த நிலை வரும் போது உலகில் தாவரங்களோ, மனிதர்களோ, ஏனைய விலங்குகளோ முற்றாக அழிந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

மனிதர்களும் விலங்குகளும் இயற்கையின் தாக்கத்தினாலும் அழிவார்கள். பசிப்பிணியினால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று மனித மாமிசத்தை புசிப்பதனாலும் மிருகங்களும் அவ்விதம் மிருகங்களை கொன்று மாமிசத்தை சாப்பிட்டு உயிர்வாழ்வதாலும் படிப்படியாக உயிர்வாழ் இனங்கள் அனைத்துமே அழிந்துவிடும்.

இதையடுத்து நுண்ணுயிர்கள் உலகை ஆக்கிரமிக்கும். அவையும் காலப்போக்கில் அழிந்துவிடும். அந்த காலகட்டத்தில் பூமியில் எவரும் உயிர்வாழ முடியாது.

உலக அழிவுக்கு முன்னர் உயிரினங்களையும் தாவரங்களையும் அழித்து வந்த டைனோசரஸ்கள் உலகின் அழிவுடன் முற்றாக அழிந்து விட்டன
மானிடர்களும், மிருகங்களும், தாவரங்களும் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். அப்படியான சூழ்நிலையில் தண்ணீர் தேங்கியிருக்கும் பிரதேசங்களிலேயே மனிதர்களும், மிருகங்களும் உயிர்வாழும் சூழ்நிலை ஏற்படும்.

அன்றைய காலகட்டத்தில் உயிரோடு இருக்கும் உயிரினங்கள் பூமியில் உள்ள அதிகூடிய உஷ்ணத்தை தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தன. அதன் போது அதிஉயர் கதிரியக்கமும் உயிர்வாழ் இனங்களை தாக்கி தீங்கிழைக்கும். இவ்விதமே உயிர்வாழ் உயிரினங்களும் அழிந்துவிடும்.

அடுத்த ஒரு பில்லியன் ஆண்டில் சூரியன் பிரகாசமாக வெளிச்சத்தை வெளிப்படுத்தும் என்றும் இதன் மூலம் பூமியின் மீது அதன் கதிரியக்கச் சக்தி அதிகமாக விழுமென்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


உலக அழிவுக்கு முன்னர் உயிரினங்களையும் தாவரங்களையும் அழித்து வந்த டைனோசரஸ்கள் உலகின் அழிவுடன் முற்றாக அழிந்து விட்டன

இந்த சூரிய வெப்பத்தை தாங்க முடியாமல் பூமியில் உள்ள சமுத்திரங்களின் நீர் முழுவதும் ஆவியாகி மறைந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்களில் உயிர்வாழ் இனங்கள் இருக்கின்றனவா என்ற ஆய்வுகளை இப்போது மனிதர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய விஞ்ஞான ஆய்வுகள் பூமி இன்னும் இரண்டு பில்லியன் வருடங்களில் முற்றாக அழிந்துவிடும் என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளன.

இது ஒரு விஞ்ஞான ரீதியில் தெரிவித்த கருத்து கணிப்பாகும். இரண்டு பில்லியன் வருடங்களில் உலகம் அழிந்துவிடும் என்று கூறும் போது நாம் அனைவரும் அதைப்பற்றி பயப்படுவதில்லை. உலகம் அழியும் போது நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் என்ற நம்பிக்கையின் காரணமாக நாம் அதிகம் அச்சமின்றி நிம்மதியாக இருக்கின்றோம்.

இதற்கு முன்னர் ஒரு தடவை உலகம் முற்றாக அழிந்ததனால் உலகில் உயிர்வாழ்ந்த மனித இனமும் டைனோசரஸ் போன்ற தரையிலும் நீரிலும் வாழும் உயிரினமும் முற்றாக அழிந்துவிட்ட நிகழ்வை பலரும் மறந்திருப்பார்கள்.

65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உலகம் இவ்விதம் முற்றாக அழிந்துவிட்டது. 10 கிலோமீற்றர் விட்டத்தைக் கொண்ட ஒரு ட்ரில்லியன் தொன் (ட்ரில்லியன் என்பது ஒரு மில்லியன் மில்லியன் வருடங்களாகும்) பாரத்தைக் கொண்ட பாரிய விண்கல் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் மோதி மெக்சிக்கோ நாடு இப்போது இருக்கும் பகுதியின் மீது வீழ்ந்து பேரனர்த்தத்தை ஏற்படுத்தி உலக அழிவுக்கு அடிதளத்தை அமைந்தது.

இதைப்பற்றி பேசுவதற்கு முன்னர் நாம் இன்றும் கூட வெளி உலகத்தில் இருந்து எமது பூமியில் வந்து விழும் பாறாங்கற்களைப் பற்றி சற்று ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.


பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த பாரிய பாராங்கல் விண்வெளியில் எரிந்து சிறுதுண்டுகளாக விழும் காட்சி

இன்றும் கூட நாளாந்தம் ஆயிரக்கணக்கான விண்கற்கள் ரஷ்யாவை அண்டியுள்ள வடதுருவப் பிரதேசத்திலும் அவுஸ்திரேலியாவைச் சார்ந்த தென்துருவப் பகுதிகளிலும் விழுந்து கொண்டிருக்கின்றன.

அவை பூமியை நோக்கி வரும் போது பெரும் பாரிய பாறாங்கற்களாக இருக்கின்றன. ஆயினும் அவை வரும் வேகத்திற்கும் பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ணத்திற்கும் தாக்குப் பிடிக்காமல் அந்தக் கற்கள் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி அவற்றின் எச்சங்களே சிறு கற்களாக பூமியில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

இயற்கை அன்னை பூமிக்கு கொடுத்த ஒரு பாதுகாப்பாக இது விளங்குகிறது. இவற்றைவிட பெரிய பாறாங்கற்கள் எத்தனையோ தடவைகள் பூமிக்கு அருகில் கடந்து சென்றுள்ளன. அவை பூமியின் மீது மோதினால் நிச்சயம் பூமியில் பேரனர்த்தமும், பேரழிவும் ஏற்பட்டிருக்கும்.

பூமியை நோக்கி இனம்தெரியாத பாரிய கற்கள் வருவதை ஓரிரு வருடங்களுக்கு முன்னரே எமது விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்துள்ளார்கள். அவர்களின் மதிப்பீடு சிறிதளவேனும் தவறாக இருப்பதில்லை.

கடந்தாண்டில் பூமியில் இருந்து 30 ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் ஒரு பெரிய பாறாங்கல் பூமியை கடந்து சென்றது. இது 30 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் என்பது பூமியில் உள்ள தூரத்தை நாம் எடை போடும் போது சுமார் 10 மீற்றர் தூரத்துடன் ஒப்பிடலாம்.

இதிலிருந்து ஆபத்து எங்களை எவ்வளவு நெருங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இன்றைய விஞ்ஞானிகள் தங்கள் அரசாங்கங்களின் பெருமளவு பணத்தை செலவிட்டு பூமியை நோக்கிவரும் இத்தகைய பாறாங்கற்களை விண்வெளியில் வைத்தே தாக்கி நாசமாக்குவதற்கான நவீன ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முயற்சி நிச்சயம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.


பூமியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்திய மெக்ஸிக்கோவிலுள்ள ஓர் இடம் இது.

பூமி, சூரியன், சனி போன்ற கிரகங்கள் அனைத்துமே அண்டவெளியில் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெடிப்பின் மூலமே உருவானதாக விஞ்ஞானிகள் இப்போது ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் டைனோசரஸ் என்ற விலங்கினம் கொடிகட்டிப் பறந்தது. டைனோசரஸ் விலங்கினம் ஒரு இராட்சத மிருகம். அவை பலவகையானவை.

பறக்கும் டைனோசரஸ்களே இவற்றில் மிகவும் பெரியதும், கொடியனவுமாகும். அப்போது உலகில் உயிர்வாழ்ந்த மனித குலத்தையும், ஏனைய பாலூட்டிகளையும், நீர்வாழ் மிருகங்களையும் டைனோசரஸ் முற்றாக அழித்து நானே ராஜா என்ற அகங்காரத்துடன் உலகை ஆக்கிரமித்து வந்தன.

அதனால் தான் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உலகம் அழிந்த போது மனிதர்கள் அழிந்துவிட்டார்கள் என்றோ, வேறு விலங்கினங்கள் அழிந்துவிட்டன என்றோ விஞ்ஞானிகள் கூறுவதில்லை.

டைனோசரஸ்கள் மாத்திரமே அழிந்துவிட்டதாக கூறுகிறார்கள். டைனோசரஸ் வகையைச் சேர்ந்த நீரில் வாழும் உடல் முழுவதும் உரோமம் நிறைந்த யானை இனம் ஒன்றும் உலகில் இருந்தது.

நாம் இப்போது குறிப்பிடும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உலக அழிவை ஏற்படுத்திய அந்த விண்கல் பூமியில் விழுந்த போது சமுத்திரங்களில் இருந்த நீர் அனைத்தும் ஆகாயத்தை நோக்கி எழுந்தன. அதையடுத்து ஏற்பட்ட தாக்கத்தினால் பூமி ஒரு தீப்பிழம்பாகியது.

இதனால் ஏற்பட்ட தீ ஓராண்டுகாலம் தொடர்ந்தும் அணையாமல் எரிந்து டைனோசரஸ்களையும், ஏனைய உயிர்வாழ் உயிரினங்களையும் முற்றாக அழித்து சாம்பலாக்கியது. அவ்விதம் அழிந்த சில டைனோசரஸ்களில் எலும்புக் கூடுகள் சமீபகாலமாக உலகின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாம் கண்டெடுத்துள்ள எலும்புக்கூடுகள் சிறிய குட்டி டைனோசரஸ்களின் எலும்புக்கூடுகள் என்றும் பெரிய டைனோசரஸ்கள் சுமார் 300 மீற்றர் நீளமும் 250மீற்றர் அகலமும் கொண்டவை என்றும் அவற்றுக்கு பெரிய சிறகுகள் இருப்பதனால் விமானங்களைப் போன்று ஆகாயத்தில் நொடிப்பொழுதில் உயர்ந்து பறந்தன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இவற்றைவிட பறக்காத ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசரஸ்களும் இருந்தன. அன்று அழிவுற்ற டைனோசரஸ்களின் வழித்தோன்றல்களாகவே முதலை, உடும்பு மற்றும் பாம்பினங்கள், பல்லி, ஓணான் போன்றவை இன்று உலகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

டைனோசரஸ்கள் அறிவு குறைந்த விலங்குகள் என்றும் அவற்றின் ஒரே விருப்பம் பாலியல் சேர்க்கை மூலம் இனவிருத்தி செய்வதும் தன்னினத்தையே கொன்று அவற்றின் மாமிசத்தை புசிப்பதும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மீண்டும் நாம் 65 மில்லியன் வருடத்திற்கு முன்னர் உலகிற்கு ஏற்பட்ட அழிவைப் பற்றி ஆராய்வோம். 10 கிலோ மீற்றர் விட்டத்தைக் கொண்ட அண்டவெளியில் இருந்து ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து பெயர்ந்து வந்த ஒரு பாறாங்கல் தற்போது மெக்ஸிக்கோ இருக்கும் இடத்தின் மீது விழுந்த போது பூமியில் ஒரு பேரனர்த்தம் ஏற்பட்டது.

இவ்விதம் ஒவ்வொரு ஆயிரம் வருடத்திற்கு ஒரு தடவை பூமியில் 50 மீற்றர் விட்டத்தைக் கொண்ட விண்கற்கள் வந்து விழுந்து பேரனர்த்தத்தை ஏற்படுத்துவதுண்டு. 2880ம் ஆண்டில் ஒரு கிலோ மீற்றர் விட்டத்தைக் கொண்ட (29075) 1950ளிதி என்ற விண்கல் பூமியில் வந்து விழுந்து பேரனர்த்தத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

மீண்டும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தத்தைப் பற்றி நாம் ஆராய்வோம். இதனால் கடல் நீர் ஆகாயத்திற்கு உயர்ந்து பூமி ஒரு வருடத்திற்கு எரிந்து முற்றாக சாம்பலாகியது.

இதனால் 10 மைல் உயரத்திற்கு எழுந்த கரும்புகை அதே நிலையில் பூமிக்கு மேல் ஒரு திரையைப் போன்று மூடியிருந்ததனால் சூரிய வெளிச்சம் பூமியின் மீது படாமல் பத்தாண்டு காலம் பூமி கடும் இருளில் மூழ்கியிருந்தது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் படிப்படியாக கரும்புகை பூமியின் மேல் எழுந்து நீங்க ஆரம்பித்ததை அடுத்து சூரிய ஒளி பூமியின் மீது விழுந்தது. அப்போது பூமி ஒரு ஐஸ்கட்டியைப் போன்று இருந்தது. படிப்படியாக சூரிய வெப்பத்தினால் அதிலிருந்த குளிர்ச்சி நீங்கி, பனிக்கட்டிகள் உருகி, கண்டங்களும், சமுத்திரங்களும் மீண்டும் தென்பட்டன.

அப்போது பூமியில் உயிரினங்கள் எதுவும் இருக்கவில்லை. படிப்படியாக மனிதனும், விலங்குகளும், தாவரங்களும் உயிர்பெற ஆரம்பித்தன. அந்தப் புதிய உலகில் டைனோசரஸ் விலங்கு முற்றாக அழிந்திருந்தது.

மனிதனும் விலங்குகளைப் போன்றே அன்று தோன்றினான். படிப்படியாக உலகம் வளர்ச்சியடைய மனிதன் ஆடைகளை அணிய ஆரம்பித்து, மிருகங்களை வேட்டையாடி உண்பதுடன் விவசாயத்திலும் ஈடுபட்டான்.

இதனையே வரலாற்று ஆசிரியர்கள் நைல்நதிக்கரையில் தோன்றிய மனித நாகரீகம் என்று கூறுகிறார்கள். சராசரியாக ஒவ்வொரு 5 இலட்சம் வருடங்களுக்கு ஒரு தடவை அரை விட்டம் கொண்ட விண்கல் ஒன்று பூமியுடன் மோதி பூமியில் பேரனர்த்தத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கடந்தகால நிகழ்வுகளைக் கொண்டு தெரிந்து கொண்டுள்ளார்கள்.

அதே வேளையில், 13 அடி விட்டத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியில் வருடத்திற்கு ஒரு தடவை வந்து விழுகின்றன. சராசரியாக 7 மீற்றர் விட்டத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியின் மீது வந்து விழும்போது அதில் 98 சதவீதமான பகுதி விண்ணிலேயே எரிந்து அது சிறுகற்களாக உடைந்து பூமியில் வந்து விழுகின்றது.

ஈரேழு உலகங்கள் அண்டவெளியில் இருப்பதாக இந்துக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் மறு உலகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவ்விதம் நம்பிக்கை வைக்கும் போது நாம் அண்டவெளியில் தனித்திருக்கவில்லை என்ற ஒரு தைரிய உணர்வு எமக்கு ஏற்படும்.

பிறப்பும் இறப்பும் இயற்கையான நிகழ்வுகள். நாம் உலகில் நிரந்தரமாக இருக்க வந்தவர்கள் அல்ல. சில காலத்திற்கு பின்னர் நாமும் இவ்வுலகை விட்டு மறைந்துவிடுவோம். ஆகவே இயற்கை அனர்த்தங்களைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையில்லை.


நாம் அனைவரும் மனசுத்தியுடன் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் அமைதியான வாழ்க்கையை நடத்தினால் எவ்வித அச்சமும் இன்றி நிம்மதியாக எங்கள் கண்களை மூடி சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய வகையில் எங்கள் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger