எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார் - Tamil News எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார்

எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார்

Written By Tamil News on Tuesday, July 23, 2013 | 6:18 PM


சென்னை: எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஒல்லியான உடலமைப்பின் மூலம் திறையுலக ரசிகர்களை கலக்கிக் கொண்டிருந்த மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.59 வயது மஞ்சுளா தனது ஆலப்பாக்கம் பங்களாவில் கட்டிலில் விழுந்து படுகாயமடைந்ததால், இன்று காலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கலைமாமணி விருது பெற்ற மஞ்சுளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

 அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. தெலுங்கு மற்றும் கன்னட படவுலகினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மற்றும் அவர்களின் கணவர்கள், மஞ்சுளாவின் மகன் முறையாகும் நடிகர் அருண்குமார், அவரது சகோதரி கீதா, பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் கண்ணீர்விட்டு கதறினர்.

இயக்குநரும் மஞ்சுளாவின் மருமகனுமான ஹரி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மருத்துவமனைக்கே நேரில் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார் லதா ரஜினி. இன்று ஐஸ்வர்யா தனுஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் பி வாசு, நடிகர்கள் செந்தில் மற்றும் நடிகைகள் பலரும் வந்து மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.


மஞ்சுளாவின் இறுதிச் சடங்கு நாளை காலை ஆலப்பாக்கத்தில் நடக்கிறது. வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger