வயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்குமா? - Tamil News வயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்குமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » வயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்குமா?

வயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்குமா?

Written By Tamil News on Monday, July 22, 2013 | 9:03 PM

பிள்ளைப் பேறு இல்லாமல் எத்தனை தாய்கள் வைத்தியரிடம் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் வயதான பருவத்தில் அதாவது 35 வயதிற்கு பின்னர் திருமணம் முடிப்பதனால் இந்த சந்தர்ப்பத்தை இழந்தவர்கள் எத்தனை குடும்பம் ஏக்கத்திலிருக்கிறது அவர்களின் ஏக்கத்திற்கு மருந்தாக இந்த விடயம்.


இன்றைய காலத்தில் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள் கின்றனர். ஆனால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடா து.
ஆனால் 35 வயதிற்கு மேல் கர்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சிலவற்றை பின்பற்றினால் போதும். இதனால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம். அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்களின் மூலம், வயதானாலும் பிரச் சனையின்றி குழந்தை பெற்றெடு க்க முடியும்.
ஆரோக்கியமான டயட்
எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
போலிக் அசிட்
குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிகும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் அசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந் தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அது மட்டுமல்லாமல், இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் அசிட் மாத்திரைகளை எடுத்து க் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.
சரியான நேரத்தில் முயற்சிக்கவும்
குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் முயற்சிக்க வேண்டும். அதற்கு ஓவுலேசன் கால் குலேட்டரைப் பயன்படுத்தினால், எப்போது உறவு கொண்டால், கர்பமாகக் கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம்.
உணர்ச்சிகளை கவனிக்கவும்
பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இருக்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல் களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.
வாழ்க்கை துணையையும் கவனிக்கவும்
கருத்தரிக்க வேண்டுமெனில், அப்போது வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் நிறை உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் விந்தணுவின் உற்பத்தியானது அதிகரித்து, எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
மருத்துவ ஆலோசனை
35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்து வரைச்சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத் தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட் டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
நேர்மறை எண்ணங்களைக் கைவிடவும்

35 வயதானப் பின்பு தாய்மை அடைய நினைக்கும் போது, முதலில் மனதில் தைரியம் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, நேர்மறை எண்ணங்களுடன் உறவில் ஈடுபட வேண்டும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger