July 2013 - Tamil News July 2013 - Tamil News
Headlines News :

Hottest List

எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார்

Written By Tamil News on Tuesday, July 23, 2013 | 6:18 PM


சென்னை: எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஒல்லியான உடலமைப்பின் மூலம் திறையுலக ரசிகர்களை கலக்கிக் கொண்டிருந்த மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.59 வயது மஞ்சுளா தனது ஆலப்பாக்கம் பங்களாவில் கட்டிலில் விழுந்து படுகாயமடைந்ததால், இன்று காலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கலைமாமணி விருது பெற்ற மஞ்சுளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

 அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. தெலுங்கு மற்றும் கன்னட படவுலகினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மற்றும் அவர்களின் கணவர்கள், மஞ்சுளாவின் மகன் முறையாகும் நடிகர் அருண்குமார், அவரது சகோதரி கீதா, பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் கண்ணீர்விட்டு கதறினர்.

இயக்குநரும் மஞ்சுளாவின் மருமகனுமான ஹரி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மருத்துவமனைக்கே நேரில் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார் லதா ரஜினி. இன்று ஐஸ்வர்யா தனுஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் பி வாசு, நடிகர்கள் செந்தில் மற்றும் நடிகைகள் பலரும் வந்து மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.


மஞ்சுளாவின் இறுதிச் சடங்கு நாளை காலை ஆலப்பாக்கத்தில் நடக்கிறது. வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது

ஆண்களை பெண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக் வைத்துக் கொள்ள வேண்டுமா?

Written By Tamil News on Monday, July 22, 2013 | 9:15 PM

ஆண்கள், பெண்களை கைவிட பல காரணங்கள் உள்ளன. பெண் களின் மேல் ஈடுபாடு குறைதல், வேறு ஒரு பெண்ணின் மீது ஈடு பாடு, அல்லது மீண்டும் காதலில் விழுதல் என சில உதாரணங்கள். அடக்கியாளுகின்ற பெண்கள், ஆண்களை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் பெண்கள் மற்றும் திரு மணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத பெண்கள், இந்த நிலைக்கு ஆளாவது உண்டு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பெண்களையும் ஆண்கள் கைவிட வாய்ப்புகள் அதிகம்.
 .

பெண்கள், ஆண்களை புரிந்து கொள்ளாமல் அவர்களை அடக்கி ஆள முயற்சி செய்யும் போது திருமண பந்தம் உடைகிறது. இப்படிப்பட்ட உறவுகளில் கணவன் மனைவிக்கிடையே காதல் என்னும் உணர்வு கண்டிப்பாக இருக்காது. இப்படி இந்த உறவு தோல்வியடைவதால், ஒரு ஆண் இன்னொரு பெண்ணை தேடி போகும் சூழல் ஏற்படுகிறது.
 .
தங்களுக்கு திருமணம் ஆன போதும் கூட இன்னொரு பெண்களை தேடும் சுபாவம் உடையவர்கள் ஆண்க ள். இப்படி அலைபாயும் குணத்தோடு இருக் கும் ஆண்களுக்கு மனைவியுடன் ஒத்துப் போகவில்லை என்றால் கேட்கவா வேண்டும்; உடனே மற்றொரு பெண் ணை தேடிக்கொள்வர். ஏன் இப்படி நடக்கிறது? இதை முழுமையாக அறிவோம்.
 .
பொறாமை
 .

பெண், தன் கணவனை இழக்க, அவளின் பொறாமை குணம் கூட காரணமாக அமையலாம். தன் கணவன் மேல் அடிக்கடி சந்தேகப் பட்டு, இல்லாததை கற்பனை செய்து கொள்வார்கள். இத்தகைய செயல் கணவனையோ அல்லது காதலனையோ எரிச்சல் அடைய செய்து உறவையே முறியடிக்கச் செய்யும்.
 .
உணர்வுகள்
.
தன் உணர்வையும், கருத்தையும் புரிந்து கொள்ளாத மனைவியை கைவிட்டு, தன்னை நன்கு புரிந்து தன் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் பெண்ணை நாடிச் செல்வர். தன் மீது மனதார நம்பிக்கை வைக்கும் ஒரு பெண்ணை தான் ஆண்கள் எப்பொழுதும் விரும்புவார்கள்.
 .

மன தடுமாற்றம்
 .
ஒரு ஆண் மற்றொரு பெண்ணால் ஈர்க்கப்பட்டால் பழைய உறவை கைவிடலாம். ஒரு சிறு வயது பெண்ணையோ அல்லது கவர்ச்சி கரமான பெண்ணை பார்த்தாலோ மனதை பறி கொடுக்கும் நிலைமை வரலாம். மற்றொரு பெண்ணோடு புது உறவை வளர்க்க காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்க லாம். அப்படி பட்ட தருணத்தில் எந்த ஒரு ஐய உணர்வும் இல்லாமல் தன் மனைவியையோ அல்லது காதலியை யோ அவர்கள் கைவிட கூடும்.
 .
திருமணம்
 .
தன் திருமண வாழ்வை அலட்சியப்படுத்தும் பெண்களே கைவிடப் படுகின்றனர். ஒரு பெண் தன்னை, தன் அழகை மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இவை அனைத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தால், தன் கணவன் ஈர்ப்புத் தன்மையுள்ள மற்றொரு பெண்ணை நாடிச்செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் திருமண வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
 .
அடக்கி ஆளும் பெண்களை
 .

அடக்கியாளுகின்ற பெண்களும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எப்பொழுதும் தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஆண்கள் விரும்பமாட்டார்கள். இத்தகைய காரணத்தாலும் பெண்களை கைவிடுகின்றனர்.
.
சுவாரசியம்
 .
பெண்கள் எப்போதும் சுவாரசிய மாகவும் எழுச்சியுடனும் இருக்க வேண்டும். கணவனோ அல்லது காதலனோ பெண்களின் உரையாடலில், செய்யும் அனைத்து செயல் .ளிலும் ஈர்க்கப்பட வேண்டும்.
.
அறிவுள்ள பெண்கள்
 .
அமைதியான பெண்களும் கைவிடப் படுகின்றனர். ஒரு ஆண், பெண்கள் எப் போதும் கலகலவென்று சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். கவர்ச்சியான பெண்ணை விரும்பினாலும் அந்த பெண் அறிவுள்ளவளாக இருக்க எண்ணுவர்.
 .
புதுமைப் பெண்
 .

பெண்கள் அதிகமாக ஆண்களை நம்பி வாழ்வதையும் அவர்கள் விரும்ப மாட் டார்கள். முழுமையாக ஆண்களை நம்பி வாழும் பெண்களிடம் ஆண்கள் கோப த்தை வெளிக்காட்டுவார்கள். இன்றைய காலக்கட்டத்தில், பொருளா தார ரீதியா பல பிரச்சனைகள் உள்ளதால், நிதி சுமையை சேர்ந்து சுமக்கும் பெண்களை தான் ஆண்கள் விரும்புகி ன்றனர்.

வயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்குமா?

பிள்ளைப் பேறு இல்லாமல் எத்தனை தாய்கள் வைத்தியரிடம் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் வயதான பருவத்தில் அதாவது 35 வயதிற்கு பின்னர் திருமணம் முடிப்பதனால் இந்த சந்தர்ப்பத்தை இழந்தவர்கள் எத்தனை குடும்பம் ஏக்கத்திலிருக்கிறது அவர்களின் ஏக்கத்திற்கு மருந்தாக இந்த விடயம்.


இன்றைய காலத்தில் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள் கின்றனர். ஆனால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடா து.
ஆனால் 35 வயதிற்கு மேல் கர்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சிலவற்றை பின்பற்றினால் போதும். இதனால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம். அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்களின் மூலம், வயதானாலும் பிரச் சனையின்றி குழந்தை பெற்றெடு க்க முடியும்.
ஆரோக்கியமான டயட்
எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
போலிக் அசிட்
குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிகும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் அசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந் தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அது மட்டுமல்லாமல், இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் அசிட் மாத்திரைகளை எடுத்து க் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.
சரியான நேரத்தில் முயற்சிக்கவும்
குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் முயற்சிக்க வேண்டும். அதற்கு ஓவுலேசன் கால் குலேட்டரைப் பயன்படுத்தினால், எப்போது உறவு கொண்டால், கர்பமாகக் கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம்.
உணர்ச்சிகளை கவனிக்கவும்
பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இருக்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல் களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.
வாழ்க்கை துணையையும் கவனிக்கவும்
கருத்தரிக்க வேண்டுமெனில், அப்போது வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் நிறை உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் விந்தணுவின் உற்பத்தியானது அதிகரித்து, எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
மருத்துவ ஆலோசனை
35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்து வரைச்சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத் தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட் டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
நேர்மறை எண்ணங்களைக் கைவிடவும்

35 வயதானப் பின்பு தாய்மை அடைய நினைக்கும் போது, முதலில் மனதில் தைரியம் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, நேர்மறை எண்ணங்களுடன் உறவில் ஈடுபட வேண்டும்.

உங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய வேண்டிய சிகிச்சை

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ….?

வேலை பளுவின் காரணமா , மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர் கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிகவலிஏற்படுவதை உணர்கி றீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள் பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.உங்கள் வீட்டில் இருந்து மருத்துவ மனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இரு ப்பதாக வைத்துக் கொள்வோம், ஆனா ல் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலா ம்…??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனி யாக இருந்திருப்பவராக உள்ள னர்..! உங்கள் இதயம் தாறு மாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள் ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வே ண்டும், இருதயம் இயல்பு நிலை திரும் பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச் சை இழுத்து விட்டு இரும்பி க்கொண் டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்து க்கொண்டே இருக்க உதவும்இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக் கும்”..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக் கு செல்லலாம்..


உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங் கள்….!

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger