சூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள் - Tamil News சூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்

சூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்

Written By Tamil News on Tuesday, May 7, 2013 | 8:05 AMசூழல் மாசடைதல் என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும். மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும்.


சூழலுக்கும் அங்கே வாழ்கின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக் கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகின் றன. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழல் சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

சூழல் மாசானது சில இரசாயனப் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.

பல்வேறு வகையான இரசாயனப் பொருட்களும், தூசியும் வளிமண்டலத் துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது.

தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைட் கந்தக ஈரொக் சைட், குளேரோ புளோரோ கார்பன்கள், நைதரசன் ஒக்சைட்டுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

தொழிற்சாலைகள், வயல் நிலங்கள், பண்ணைகள், நகர்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்து விடுவதால் நீரின் தரமும் நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின் றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுக்கள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்து க்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந் தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.

மண் மாசடைதலிலும் தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பி னும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், களை கொல்லிகள் முதலியவற்றின் பெருமளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற விஞ்ஞான நிகழ்வு களால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சூழல் மாசடைகிறது.

ஒலிசார் மாசடைதல் என்பது சாலை களில் ஏற்படும் வண்டி ஒலி, வண்டி ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, வானூர்தியின் ஓசை முதலியவற் றால் ஏற்படுகிறது. ஒளி அத்துமீறுகை, அதிகப்படியான ஒளியூட்டம், வானியல் சார் குறுக்கீட்டு விளைவு போன்றவை ஒளி வகை மாசில் அடங்கும்.

வளி மாசடைதல் அல்லது காற்று மாசடைதல் என்பது மனிதனால் உருவாக் கப்பட்ட இரசாயனப் பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும்.

இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்து வதுடன், சூழலுக்கும் கெடுதல் விளை விக்கின்றது. வளி மாசடைதல், இறப்பை யும், சுவாச நோய்களையும் ஏற்படுத்து கின்றது. புவி சூடாதலுக்குக் காரணமான காபனீரொட்சைட் போன்ற வளிமங்களும் மாசுப் பொருள்களே என்று அண்மைக் காலங்களில் காலநிலை அறிவியலாளர் கள் கூறிவருகிறார்கள். அதேவேளை தாவரங்களின் ஒளித்தொகுப்புக்குக் காபனீரொட்சைட்டின் தேவையையும் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

வளிமண்டலம் ஒரு சிக்கலான இயங்கியல், இயற்கை வளிமங்களின் தொகுதியாகும். இது புவியிலுள்ள உயிரினங்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது. வளி மாசடைதலால் ஏற்படுகின்ற ஓசோன் அழிவு மனிதரின் உடல்நலத்துக்கும், புவியின் சூழல் மண்டலத்துக்கும் கெடுதியானது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger