பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள் - Tamil News பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள்

பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள்

Written By Tamil News on Wednesday, May 22, 2013 | 4:54 PM


அமெரிக்காவில் பயங்கர சூறாவளி
மற்ற மனிதர்களை தண்டிக்கும் சன்டியர்களை இறைவன் தண்டிப்பது இயல்பே

சிறுவர்கள் உட்பட 91 பேர் பலி: பல குடியிருப்புகள் முழுமையாக தரை மட்டம்
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் 20 சிறுவர்கள் உட்பட குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.


மணிக்கு 200 மைல் வேகத்தில் தாக்கிய சுழற்காற்றினால் பல குடியிருப்பு பகுதிகளும் மொத்தமாக தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. இதில் நகரின் தென் பகுதியான மூர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்று தாக்கப்பட்டதில் பல சிறுவர்களும் பலியாகினர்.

அமெரிக்க ஊடகச் செய்திகளின்படி, ஆரம்பப் பாடசாலையின் மேற்கூரையை காற்று பெயர்த்துச் சென்றது. இதில் கட்டடம் இடிந்து விழுந்தது. பாடசாலையிலிருந்த 24 மாணவர்களை காணவில்லை. கழிவறையில் இருந்த 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஒக்லஹோமாவில் பாரிய அனர்த்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். அழிவடைந்த பகுதிகளில் பங்கேற்க மத்திய நிர்வாகத்திற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவு முழுவதும் தீவிர மீட்புப் பணிகள் இடம்பெற்றன.

2 மைல்கள் அகலத்துடன் மணிக்கு 250 கி. மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் பல ஒக்லஹாம் புற நகர்ப்பகுதிகள் ஏறக்குறைய தரைமட்டமாயின என்றே கூறப்படுகிறது. வானத்திற்கும் பூமிக்குமாக 2 மைல்கள் அகலத்தில் 250 கி. மீ. வேகக்காற்றுடன் இந்த சுழற்காற்று தாக்கியுள்ளது. அமெரிக்க நேரம் திங்கள் மதியப்படி இந்த டோர்னாடோக் காற்று தாண்டவமாடியது.

பல இடங்களில் கார்களை தூக்கிக்கொண்டுவந்து ஒரே இடத்தில் போட்டுள்ளது. கார்கள் உடைந்து சின்னாபின்னமாகின. வீடுகள் மரங்களாக உதிர்ந்து பெயர்ந்து விழுந்துள்ளன. மெக்சிகோ வளைகுடாவின் உஷ்ணமான ஆனால் ஈரப்பதம் நிரம்பிய காற்றுடன் மேற்குப் பகுதியின் வானிலைக் கோளாறுகளும் பல டொர்னாடோக்களை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் 9 டொர்னாடோ சூறைக்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாக சூறைக்காற்று கணிப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூர், மெக்ளைன் ஆகிய இடங்களில் பல கட்டிடங்கள், வீடுகள், பாடசாலைகள் தரைமட்டமாகியுள்ளன. பலத்த பொறுக்க முடியாத சப்பதத்துடன் அந்தக் காற்று நகர்ந்து சென்றுள்ளது.

உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும் அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இந்த டொர்னாடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர்.

மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக்குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டி ருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர்.

சுமார் 120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சுழற்காற்றிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் கூறும் போது, “காற்று வருவதைக் கண்டதும் நாம் நிலரையில் பதுங்கிக் கொண்டோம். பயங்கர வேகத்துடன் வந்த காற்று நிலவறையின் கதவையும் சுழற்றிச் சென்றதோடு எம்மீது கண்ணாடித் துண்டுகள் மற்றும் குப்பைகள் வந்து குவிய ஆரம்பித்தது.

இறந்து விடுவோம் என்றே நினைத்தோம்என்று ரிக்கி ஸ்டொவர் என்பவர் குறிப்பிட்டார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger