துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையிலுள்ளது - Tamil News துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையிலுள்ளது - Tamil News
Headlines News :

Hottest List

Home » » துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையிலுள்ளது

துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையிலுள்ளது

Written By Tamil News on Tuesday, May 7, 2013 | 8:26 AMசமூகத்தில் ஒழுக்கம் இன்று சீர்குலைந்து போயுள்ளது. பாடசாலை களில் ஆரம்பிக்கும் ஒழுக்கக்குறைவு படிப்படியாக விடலைப் பருவத்தைச் சார்ந்தவர்களின் ஊடாக சமூகத்தில் உள்ள இளம் சந்ததியினரின் ஒழுக்கத்தையும் சீர்குலைத்துள்ளது. பாலியல் சம் பந்தமான வீடியோ காட்சிகளை முன்னர் தொலைக்காட்சிகள் மூலம் தான் பார்த்து தங்கள் பாலியல் வேட்கையை சில இளை ஞர்களும், யுவதிகளும் தீர்த்துக் கொண்டார்கள். ஆனால், விஞ் ஞான அபிவிருத்தி என்ற போர்வையின் கீழ் கையடக்கத் தொலை பேசிகளில் கூட பாலியல் காட்சிகளை பார்ப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.


தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்ற பாரிய அரசாங்க நிறுவனம் இவற்றை தணிக்கை செய்யும் பொறுப்பை கொண்டுள்ளது. இன்று 12 வயது பாடசாலை பிள்ளைகளின் கைகளில் கூட கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன. இந்த ஆணைக் குழு எவ்வளவுதான் திறமையாக இந்த பாலியல் சம்பந்தப்பட்ட, இளம் சந்ததியினரின் உணர்வுகளை தூண்டிவிடக்கூடிய தொலைக் காட்சி படங்களை தணிக்கை செய்தாலும் கூட, நவீன தொழில் நுட்பம் இந்த தணிக்கைகளை திசைமாற்றிவிட்டு தாங்கள் விரும் பும் இணையத்தளங்களின் ஊடாக இந்த பாலியல் ரீதியிலான உண்மையான நிகழ்வுகளை பார்க்கும் வழிகள் காணப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி நாம் சிறிதளவு செய்திகளையே கேட் கக்கூடியதாக இருக்கின்றது. ஓரிடத்தில் ஒரு வயோதிபர் சிறு பிள்ளையை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்ற செய்தியும், ஒரு காமுக இளைஞன் ஒரு பிள்ளையை பாலியல் ரீதியில் துஷ் பிரயோகம் செய்துவிட்டு மனமுடைந்த நிலையில் அப்பிள்ளையை கழுத்துப் பட்டியால் நெரித்து கொலை செய்தான் என்ற செய்தியும் இப்போது வெளியாகியிருக்கிறது.

இந்த சிறுமி இதற்கு முன்னரும் அந்த காமுகனினால் துன்புறுத்தப் பட்டிருக்கிறாள். அந்த சிறுபிள்ளை பெற்றோரிடம் இது பற்றி முறைப்பாடு செய்த போதிலும் அது குறித்து பெற்றோர் பொருட் படுத்தாமல் இருந்துவிட்டார்களாம். அதனால் அந்த காமுகன் தொடர்ந்தும் அந்தப் பிள்ளையின்மீது குற்றம் புரிந்து இறுதியில் அவளது உயிரையும் பறித்துவிட்டான் என்று அறிவிக்கப்படுகிறது.

பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளை அவர்கள் ஆண்களாக இருந் தாலும் பெண்களாக இருந்தாலும் 24 மணி நேரமும் தங்கள் நேர டிப் பாதுகாப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகி வாழ்நாள் பூராவும் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதி கார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பெற்றோருக்கு அபாய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

இன்று தொலைக்காட்சிகள், கையடக்கத் தொலைபேசிகள் ஊடாகவும் அனைவருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சமூகத்தில் தற்போது ஒழுக்கம் சீர்குலைந்து போயுள்ளது.

10 முதல் 12 வயதான சிறுவர்கள் கூட இந்த தொலைக்காட்சி படங் களைப் பார்த்து தங்கள் அயல்வீட்டு தங்கைமாரை, தம்பிமாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் அளவுக்கு இன்று நிலைமை மோசடைந்துள்ளது என்று திருமதி திஸாநாயக்க தெரிவித்தார்.

இப்போது நடைமுறையில் உள்ள சட்டம் வலுவில்லாமல் இருப்ப தனால் தான் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதி கரித்து வருகின்றது என்று தெரிவித்த அனோமா திஸாநாயக்க, தற்போதைய சட்டத்தின் படி பாலியல் குற்றமிழைத்த ஒருவர் இரண்டு வாரங்களில் பிணையில் செல்வதற்கு சட்டம் இடமளிக் கிறது. சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றமிழைத்தவர்களை கைது செய்து அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கால தாமதப்படுத்துவதை விட நேரடியாக உயர்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு எவ்வித தயவு தாட்சண்ய மும் இன்றி மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தெரிவித் தார். அதன் மூலமே எமது நாட்டின் சிறுவர் சமுதாயத்தை பாலி யல் ரீதியில் காமுகர்களிடம் இருந்து காப்பாற்ற முடியுமென்றும் அனோமா திஸாநாயக்க கூறினார்.

தற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ள சிறு பிள்ளைகளை பிடித் துச் செல்லும் காமுகர்களின் கொட்டம் அதிகரித்திருக்கிறதென்றும், இந்தப் பிள்ளைகளை ஏற்றிச் சென்று அவர்களை பாலியல் ரீதி யில் துஷ்பிரயோகம் செய்த பின்னர் பாதைகளில் இறக்கிவிட்டு செல்கிறார்கள் என்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித் தார். இத்தகைய கொடியவர்களிடம் இருந்து பிள்ளைகளை பாது காப்பது பெற்றோரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

பிள்ளை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற கூற்றுக்கு அமைய தாய்மாரும் தந்தைமாரும் தங்கள் பிள்ளை களை கண்காணிப்புடன் கண்டிப்பாக வளர்த்தால் அவர்களின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமானதாக அமையும். எனவே, பிள்ளை களை எந்தவொரு பரிச்சயமற்ற ஆண்மகனுடனும் நெருங்கிப் பழக பெற்றோர் இடமளிக்கக்கூடாது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger