பூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா? - Tamil News பூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » பூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா?

பூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா?

Written By Tamil News on Wednesday, May 22, 2013 | 5:44 PM


 பல்வேறு சம்பவங்ள் நாளுக்கு நாள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே தான் சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது வரும் மே 31-ந்தேதி பூமியை மிக அருகே கடந்து செல்லப் போகிறது.


'1998 கியூஇ2' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விண்கல் எங்கிருந்து வந்தது என்பதை உறுதி செய்ய முடிய வில்லை. பெரும்பாலான விண்கற்கள் செவ்வாய் கிரகத்துக்கும் ஜூபிடர் கிரகத்துக்கும் இடையிலான விண்மீன் தினைமண்டலம் எனப்படும் பகுதியில் தான் சுற்றி வருகின்றன.

ஆனால், 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி அமெரிக்காவின் மசாசூ செட்ஸ் பல்கலைக் கழகத்தின் விண்வெளி மையத்தால் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது எங்கிருந்து வந்தது என்பதில் பல சந்தேகங்கள் எழுந்தன. இதன் மேல் பகுதி கருப்பு நிறத்தில், வளவளப்பான திரவம் படிந்த நிலையில் உள்ளது.

இதனால் சூரியனுக்கு மிக அருகே சென்று உடைந்து சிதறிய வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதியாக இந்த விண்கல் இருக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் ஜெட் புரபல்சல் லேபரட்டரியின் ஆய்வாளரான ஆமி மெய்ன்ஸர் கூறியுள்ளார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க சிறிய கிரக மையம் தான் இந்த விண்கல்லின் திசையை வேகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வருகிற (மே) 31-ந்தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த விண்கல் பூமியிலிருந்து 5.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல 15 மடங்காகும். இது மிகப்பெரிய இடைவெளி மாதிரி தோன்றினாலும் அண்ட சராசரங்களோடு ஒப்பிடு கையில் ஒரு கல் எறி தூரம் தான்.

இந்த அளவிலான ஒரு விண் கல் தான் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதி மாபெரும் அழிவை ஏற்படுத்தி டைனோசர்களை அழித்து ஒழித்ததாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்தமுறை இந்த விண்கல் பூமியை எட்டிப்பார்த்துவிட்டு சென்றுவிடப் போகிறது.

இதே விண்கல் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூமிக்கு அருகே வருமாம்! இதற்கிடையே பூமிக்கு மிக அருகே வரும் விண்கற்களை விண்வெளியிலேயே எதிர் கொண்டு உடைக்கும் அல்லது திசை திருப்பும் திட்டத்தை தயாரித்து வருகின்றன நாஸாவும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஎஸ்ஏவும் (ஐரோப்பிய விண் வெளி ஏஜென்சி).

இந்தத் திட்டத்தின் கீழ் முதன் முதலாக வருகிற 2022 ஆம் ஆண்டில் விண்கல்லை விண்வெளியில் சந்தித்து உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் 2022 ஆம் ஆண்டில் பூமிக்கு 11 மில்லியன் கி.மீ. அருகே வரப்போகிறது.

இது இரட்டை கற்களைக் கொண்ட விண்கல். 800 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல்லும் அதை 150 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நிலா சுற்றி வருவது மாதிரி சுற்றிக் கொண்டிருக்கிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger