உலக ஆஸ்மா தினம் மே, 7 - Tamil News உலக ஆஸ்மா தினம் மே, 7 - Tamil News
Headlines News :

Hottest List

Home » » உலக ஆஸ்மா தினம் மே, 7

உலக ஆஸ்மா தினம் மே, 7

Written By Tamil News on Friday, May 10, 2013 | 7:56 AMஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது என்பது ஒரு சாதாரன விடயமாகவுள்ளது என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி இன்று (7-ந்தேதி) ஆஸ்துமா தினமாக கொள்ளப்படுகிறது.

70 சதவீதம் வாய்ப்பு………. உலகத்தில் மனிதன் தோன்றியது முதலே ஆஸ்துமா நோயும் உள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது, சிறிதாக சளி இருமல் தாக்கி நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயை கிருமிகள் தாக்குகிறது.

இதனால் மூச்சுக்குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி பாதிப்பு அடைகிறது. அந்த இடத்தில் வீக்கமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. அதனால் சுத்தமான காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளிவர முடியாமலும் தடைபடுகிறது.

நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. காற்று, மூச்சுக்குழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொண்டு போவதும், கிழித்துக்கொண்டு வெளியே வரும் போதுதான் `வீசிங்எனப்படும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

30 கோடி பேர் பாதிப்பு…………..

ஆஸ்துமா நோய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆஸ்துமா நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆஸ்துமா நோயானது பரம்பரையாகவும் (மரபணு கோளாறு), சுற்றுச் சூழல் பாதிப்புகளாலும் ஏற்படுகிறது.

பெரும்பாலும் சிகரெட் புகையினாலும், காற்று மாசுபாட்டினாலும் ஆஸ்துமா நோய் தாக்குகிறது. மேலும் மாறிவரும் வாழ்க்கை முறைகளான பாஸ்ட்புட் உணவு வகைகள், உடலில் பவுடர் மற்றும் வாசனை திரவியங்களை பூசிக்கொள்வதாலும் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை தெரிந்துகொண்டால் முடிந்தவரையில் கட்டுப்படுத்தலாம்.

இந்த நோயினை முழுமையாக குணப்படுத்த முடியாது. உடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பதன் மூலமாகவும் ஆஸ்துமாவை தவிர்க்கலாம். உதாரணமாக குளிர்ச்சியான பழங்கள், தயிர் போன்ற உணவு பொருட்களையும், செல்ல பிராணிகள் வளர்ப்பதையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தூசு பறக்கும் ஆலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும், தூசு மற்றும் வாகன புகை பறக்கும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் மூக்கினை மூடாமல் அதிகமாக பயணம் செய்பவர்களை ஆஸ்துமா நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ளது. சரியான, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் நீண்டநாள் வாழலாம்.

இந்த நோய்க்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டில் மட்டும் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆஸ்துமா நோய் நாட்டிற்கும், மருத்துவத் துறைக்கும் பெரும் சவாலாக பெரிய சவாலாக இருந்து வருகிறது.

குறிப்பாக தற்போது பெரியவர்களை விட இளைஞர்கள்தான் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களால் (வைரஸ் கிருமிகள்) அவர்களின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் குழந்தைகள் சுவாசிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு நெஞ்சிலே சளி தங்கி விடுகிறது. இதனால் குழந்தைகள் எளிதில் ஆஸ்துமா நோய்க்கு ஆளாகுகிறார்கள். மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 10 சத வீதம் குழந்தைகள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களையும், சிகரெட் பழக்கம் உள்ளவர்களையும் ஆஸ்துமா நோய் எளிதில் தாக்கும். சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா நோய் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆரம்ப நிலையிலேயே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம்.

ஆஸ்துமா முற்றிவிட்டால் பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். எனவே ஆஸ்துமா நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம்.

ஆஸ்துமா வகைகள்………. நுரையீரல் பாதிப்பினால் ஏற்படுவது பிராங்கியல் ஆஸ்துமா, இதயம் பாதிப் பினால் ஏற்படுவது கார்டியாக் ஆஸ்துமா, சிறுநீரகம் பாதிப்பினால் ஏற்படுவது ரீனல் ஆஸ்துமா என்று வகைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக சித்த மருத்துவத்தில் குறி குணங்கள், ஆய்வக பரிசோதனைகள், தக்க நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சை, சரியான பழக்கவழக்கங்கள் மூலமாக எந்தவகை ஆஸ்துமா நோயையும் குணப்படுத்த முடியும்.

அற்புத மருந்துகள்……… சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணம், தாளிசபத்திரி, இலவங்கம், இலவங்கபத்திரி, இலவங்கபட்டை, சாதிக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஓமம், சோம்பு, அதிமதுரம், கொத்தமல்லி, பெருங்காயம் சேர்ந்த தாளிசாதி சூரணம், பூங்கர்ப்பூரம், அன்னாசிப்பூ, சாதிக்காய், சிறுநாகப்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கர்ப்பூராதி சூரணம், தாளிசாதி வடகம், தூதுவளை, கண்டங்கத்திரி, நஞ்சறுப்பான் சேர்ந்த லேகியங்கள், நெல்லிக்காய் லேகியம், பவளம், முத்து சிப்பி, மான் கொம்பில் இருந்து தயாரிக்கப்படும் பற்பங்கள் போன்ற கூட்டு தயாரிப்பு மருந்துகளை மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொண்டால் ஆஸ்துமா நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்.

மூலிகை குடிநீர்……… ஆடாதொடை, தூதுவளை, கண்டங்கத்திரி, துளசி, ஓமவள்ளி, கறிவேப்பிலை, வேப்பிலை, எலுமிச்சை இலை, நஞ்சறுப்பான், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் ஆகியவற்றை ஓர் எடை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து 200 மில்லி நீரில் 1 டீஸ்பூன் போட்டு கொதிக்கவைத்து, 100 மில்லியாக காய்ச்சி காலை, மாலை சாப்பாட்டிற்கு 45 நிமிடம் முன்பு குடித்து வரலாம்.

சர்க்கரை நோயாளி தவிர மற்றவர்கள் வேண்டிய அளவு தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம். ஆக மொத்தத்தில் பக்க விளைவுகள் இல்லா மருந்துகள் மூலம் ஆஸ்துமா நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம். உணவே மருந்தாக இருந்த நிலை மாறி இன்று மருந்தே உணவாக மாறி வருகிறது. சமைக்கவும் நேரமில்லை, சாப்பிடவும் நேரமில்லை. உடனடி மற்றும் ரெடிமேட் உணவு பொருள் கலவைகள் வந்துவிட்டன.

பரிசோதனை…….. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் நுரையீரல் பரிசோதனை செய்துகொள்ள இந்த உலக ஆஸ்துமா தினத்தில் உறுதிகொண்டு நோயை கட்டுப்படுத்தி வாழ்வோம்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger