May 2013 - Tamil News May 2013 - Tamil News
Headlines News :

Hottest List

காத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் நகருமா?

Written By Tamil News on Saturday, May 25, 2013 | 10:43 PMஇலங்கையின் அரசியல் சுதந்திர வரலாற்றில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதி அளவு கோலாக கண்டுபிடிக்கப்பட்டவையே மாகாணசபை முறைமையாகும். அந்த அளவு கோள் குறைகள் - நிறைகள் இருப்பதாக அல்லது விமோசனம் தராத விமர்சனம் என்றாகியிருக்கலாம். அதிகாரம் அற்று விடும் என்றடிப்படையில் அதனை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற கோஷமிருக்கலாம். ஆனால் அளவு கோல் பரிமாணம் அழிந்துபோக முயற்சிக்காதிருத்தல் சிறந்ததாகும். 13ஆவது திருத்தத்தை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதற்காக மாகாண சபை முறைமைகளை மறைமுகமாக இல்லாமல் செய்துவிடுவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கண்டுபிடிப்பும் தந்திரோபாயமும்
ஜனநாயக சிந்தனைகளை விபரிக்கின்ற எந்த நாட்டிலும் குறித்த காலப் பகுதியில் நிலைகொண்டுள்ள அரசாங்கம் மற்றும் செயல்படு நிறுவனங்களின் உருவாக்கம் ஊடாக பிரஜைகள் தங்களது தேவைகளை சமாளித்துக்கொள்ளவும், பூர்த்தி செய்து கொள்ளவும் இடமளிக்கப்படுகின்றனர். அந்தடிப்படையில் மத்திய அரசாங்கத்துடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்வதற்காகவும், சிறுபான்மை மக்களின் கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்குமான கருத்திற்கொள்ளத்தக்க ஒரு கண்டுபிடிப்பே 13ஆவது திருத்தத்தின் கீழ் 1988இல் தாபிக்கப்பட்ட மாகாண சபை முறைமையாகும்.
பங்காற்றுகையும் நம்பிக்கையும்
மாகாணசபை முறைமை மத்தியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள சிறுபான்மை மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான வேலைத்திட்டம் என்பதை அறிவோம். அதிகாரப் பகிர்வு என்பது அடிப்படையில் இனக்குழுமங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதை நோக்காகக் கொண்டுள்ளபோதிலும் குறித்த பிரதேசம் சமூகம் போன்றவற்றின் முன்னுரிமைகளை முகாமைப்படுத்துவதில் ஒரு பங்குதாரராக செயல்பட்டு கிராமியத்துறையை முன்னுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒரு நிறுவனமாகவும் மாகாணசபைகள் பார்க்கப்பட வேண்டும். கிராமியப் பகுதிகளில் அபிவிருத்தியில் இருந்ததும் தொடர்வதுமான இளைஞர் ஈடுபாட்டுக்கான இடைவெளியை சந்தேகத்துக்கு இடமின்றி மாகாண சபைகளுக்கான முழு அளவிலான அதிகாரப் பகிர்வு நிரப்பும் என்பது நம்பிக்கையாகும்.
1971-1987
மாகாண சபை என்ற நிறுவனம் - அதன் ஆணைக்கு அமையவும், ஆணையின் கீழும் சுதந்திரமாக செயலாற்ற வாய்ப்பளிக்கப்படுமானால் மாகாணங்கள் மத்தியில் அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதில் பெரும் ஒருமைப்பாட்டினையும், சீர்பாட்டினையும் கொண்டுவரக்கூடிய முடுக்கியாக செயல்படலாம் என கூறப்படுகிறது.
சமூக மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சமூகப் பங்காற்றுகை ஈடுபாடு ஐயமின்றி மக்களுக்கு திருப்தியைக் கொடுத்து மக்களை எதிரும் புதிருமான அரசியலில் இருந்து தள்ளிவைக்கும். 1971/1987 காலப்பகுதிகளில் நாட்டின் தென்பகுதிக் கலவரங்களால் தோன்றியது போன்ற சமூகத்தகராறுகள் அமைதியின்மை தூர விலகிச் செல்லும். இது இனப்பிரச்சினை தொடர்பான தகராறுகளையும் தகர்த்தெறியலாம்.
வடக்குத்தேர்தலும் நெறிப்படுத்துகையும்
இந்தக் கட்டமைப்பில் வடமாகாணத்துக்கான தேர்தல் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. 13ஆவது திருத்தம் - சிறுபான்மைக் கோரிக்கையை திருப்தி செய்யவும், அதிகாரப் பகிர்வுக்கு அடிப்படையாக இருந்தும், யுத்தத்துக்கு பின்னரான சூழலில் ஏனைய விவகாரங்களையும் முகாமை செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பளிக்கப்படுவது கடினம் மிக்கது என்ற வாதமுண்டு. என்றாலும் தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்கள் அதிகம் விடயங்களை அறிந்தவர்களாகவும், சமூகத்தின் தேவைகளுக்கு செவிசாய்க்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம்.
ஊகமும் ஐதீகமும்
மாகாண சபைகளை ஒழித்துவிடவேண்டும் என்று கடுந்தொனியிலான கோரிக்கைகளும், கோஷங்களும், பல்வேறுபட்ட அரசியல்வாதிகள், தலைவர்கள், கல்விமான்கள், தொழில்சார் ஸ்தாபனங்கள், தனிநபர்கள் என்றடிப்படையில் எழுந்து நிற்கின்றன. சிறுபான்மையினரின் கோரிக்கையை திருப்திப்படுத்த அதிகாரத்தை பகிர்வது முக்கியமல்ல என்று கூறுவோர்,பொருளாதார அபிவிருத்தி, தேர்ச்சியடைந்த கல்வி, சுகாதார வசதிகள் போன்றவற்றை ஸ்திரப்படுத்தினால் போதுமானதென்கின்றனர். பங்கரவாதமும், பங்கரவாத இயக்கத்தின் தலைவரும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை ஏற்கனவே இருந்ததுபோன்ற கூர்மையுடன் இல்லை என்று அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.
பன்மைத்தன்மையும் உள்ளக ஒருங்கிணைப்பும்
யுத்தம் முடிவடைந்த மறுகணமே இடைவெளிகளை கட்டியெழுப்புவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளக தொடர்பாடல்களுக்கான நிலமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டியது அவசியம் என உணரப்படுகிறது. இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான ஒரு முயற்சியாக ஏற்கனவே திட்டமிடப்பட்டதை தகர்த்தெறியும் பொருட்டு காலம் செலவிடப்படக்கூடாது.
பன்மைத்தன்மை கொண்ட சமூகத்தில் உள்ளக இன உறவுகளுக்கு ஒருங்கிணைப்பாகவே அடையாள அரசியல் கருதப்படுகிறது. இவ்வாறான நிலமை, திட்டமான வடிவம் பெறவில்லை மாகாண சபைகளை ஒழித்தல், அரசியல், நிர்வாக முகாமைக்காக அதிகாரப்பகிர்வு கட்டமைப்புக்கான சிறுபான்மை மக்களின் நீணடகாலக்கோரிக்கையை புறந்தள்ளும் ஆத்திரமூட்டக்கூடியதும் சிராய்க்கக்கூடியதுமான நிலைமையையே தோற்றுவிக்கும்.
பிடுங்கி எறியும் எண்ணமும் நியாயப்படுத்தமுடியாமையும்
காலத்துக்குக்காலம் 13வது திருத்தத்தை ஒழிக்கக்கோரும் எண்ணற்ற அரசியல் அறிக்கைகள் வெளிவந்தும் மாகாண சபைகளுக்கு அவை பெரிதாக தெரிவதில்லை. சமீப காலந்தொட்டே மாகாண சபைகளும் அது தொடர்பில் விழித்துக்கொண்டுள்ளன.
இறைமையுள்ள இரு தேசங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் விளைவாக 13ஆவது திருத்தம் தோன்றியதன் காரணமாக சர்வதேச நியமங்களைக் கொண்டே அதனை நோக்கவேண்டும் என்ற கருத்தும் இருந்தது. இதற்கான முக்கியத்துவம் பேச்சுக்களில் முக்கிய இடத்தை பெறவில்லை. எவ்வாறாயினும் 13ஆவது திருத்தத்தை பிடுங்கி எறியும் வாய்ப்பு அரங்கேற வில்லை.
அதே வேளை இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான மாகாண சபைகள் பலவந்தமாக நாட்டில் திணிக்கப்பட்டவை என்பது ஒரு வகை சர்ச்சைக்குரிய விஷயமாகும். எவ்வாறாயினும் இந்தியாவின் அரசியல் நலன்களை மையமாகக் கொண்டு ஊக்கப்படுத்தப்பட்டதே இந்தியத்தலையீடு என்பது மறுக்கப்பட முடியாததாகும் என்று அன்றும் இன்றும் கூறப்பட்டது. கூறப்படுகிறது. ஆனால் குறித்த உடன்படிக்கை கைவிடப்படவேண்டும் என்ற காரணமும், போராட்டமும் நியாயப்படுத்த முடியாததாகும் என்று கூறப்படுகிறது.
உடன் படிக்கையும் உடன்பாடின்மையும்
அன்றைய இந்திய - இலங்கை உடன்படிக்கை மூன்று முக்கியமான தீர்மானங்களை எடுக்கச் செய்தது. அவை இலங்கையின் வரலாற்றில் ஏற்கனவே அங்கீகரிக்கப்படாததாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை ஒரு பல்லின மத கலாசார விழுமியங்களைக் கொண்ட பன்மைச் சமூகம் என்பதற்கான உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தையும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்துவதற்கு அதிகாரப்பகிர்வு ஊடாக அதிகாரப்பகிர்வு செய்தல் என்பதையும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்றன நாட்டின் உத்தியோக பூர்வமொழிகளாக அரசியலமைப்புச்சட்ட அங்கீகாரம் (அதற்கு 16வது திருத்தம் உறுதுணையாகியது) என்பதையும் குறிப்பிட்டுக்கூறமுடியும்.

ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியமானதா?


வாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தமான விடயங்களை தெரிவு செய்யவும் தீர்மானங்கள் மேற்கொள்ளவும் உளவியல் அணுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் உதவியே வழிகாட்டல் எனப்படும்.

தெரிவு செய்தல், பொருத்தப்பாடு காணல், பிரச்சினையைத் தீர்த்தல் ஆகியவற்றில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் உதவி மற்றும் வாழ்க்கையை சீர் அமைத்துக் கொள்வதற்கு உதவி தேவைப்படும் ஒருவருக்கு அதற்கான தகைமையுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவியும் வழிகாட்டலாகும்.

ஆலோசனை எனப்படுவது ஆலோசனை நாடி தனது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு ஆலோசகரை நேர்முகமாக சந்தித்து நுட்பமுறையின் அடிப்படையில் கலந்துரையாடி அப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அணுகுமுறை களைத் தீர்மானித்துக்கொள் வதாகும். மேலும் ஒருவருக்கு அவரைப்பற்றிய சுய விளக்க த்தை ஏற்படுத்தி அதனடிப்படை யில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினையை அவரே தீர்த்துக் கொள்ளுமாறு வழங்கும் உதவியுமாகும்.

வாழ்க்கையில் எதிர்நோக்க வேண்டிய ஒவ்வொரு அனுப வங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை ஒருவரிடத்தில் விருத்தியடைய வழங்கும் உதவி ஆலோசனை எனப்படும். முன்னொரு காலத் தில் பாரம்பரிய கல்வி நிறுவ னங்களும் சமய பெரியார்களும் பிள்ளைகளுக்கும் பிரச்சினைக் குரியவர்களுக்கும் ஏற்ற அறிவு ரையும் ஆலோசனையும் வழங்கி அவர்களுக்கு வழிகாட்டினார்கள். பாரம்பரிய சமுதாயத்தில் இது சாத்தியமானதாக இருந்தது. அன்றைய சமுதாயத்தில் குருவானவர் பெற்றிருந்த மதிப்பும் நெருக்கமான உறவும் வழிகாட்டல், ஆலோ சனை வழங்களில் ஓர் உறுதிப் பாட்டையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், சமுதாயத்தில் ஏற்பட்ட மாற் றம் இந்த உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.

ஆசிரியர், அதிபர் பயிற்றப்பட்ட ஆலோசகர்கள் ஆகியோர்களினால் ஒரு மாணவர் மன நிறைவு சமூகப்பொருத்தப்பாடும் பெற்று தன் ஆற்றல்களின் உச்ச நிலையை அடைவதற்கு அவனது இளமைப் பருவத்தில் வழங்கப்படும் உதவியே பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையுமாகும். மேலும் பிள்ளைகளை உளவியல் ரீதியில் சமநிலைமிக்கவர்களாக மாற்றவும் பிறரால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நடத்தைக் கோலங்களை பிள்ளைகளிடம் உருவாக்கவும் பிறரை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய திறன்களை அவர்களிடம் உருவாக்கி சமூகத் திறன்களை விருத்தி செய்யும் பயிற்சி பெற்றோரால் வழங்கப்படும் உதவியே பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையும் என்று கூறப்படும்.

பாடசாலைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் மட்டுமன்றி கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் உடல் நலம், உளநலம், பூரண ஆளுமை விருத்தி, சமூகத்தொடர்புகள், தொழில் வாய்ப்புக்கு ஆயத்தம் செய்தல், பாடசாலை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்துகின்றன.

கல்வி ஒருவனை நல்ல மனிதப்பண்புடையவனாகவும் நற்குடிமகனாகவும் ஆக்கி அவனைப்போன்றவர்களின் மூலமாக நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று ரூசோ கூறிய கூற்று இதனை வலியுறுத்துகின்றது. அந்த வகையில், பாடசாலைக்கு வழிகாட்டல், ஆலோசனைச் சேவையானது முக்கியமானது என்று உணரப்பட்டுள்ளது.

வழிகாட்டலுக்கும் ஆலோசனை வழங்கலுக்கும் பொருத்தமான இடம் கல்விக்கூடங்களேயாகும். ஆசிரியர்களின் பணி கற்பித்தல் மட்டுமல்ல உள்ளார்ந்த கற்றல்களை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. நல்ல மனப்பாங்குகளை உருவாக்குவதும் நடத்தையில் விரும்பத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதுமேயாகும். இந்த வகையில் கல்வியையும் ஆலோசனை வழிகாட்டலையும் பிரிக்க முடியாது. ஆசிரியர்களின்


கடமைகளுள் ஆலோசனை வழிகாட்டலும் அடங்கியுள்ளது. அவர்கள் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே பாலமாக இருக்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் பாடசாலையின் ஆலோசனையும் வழிகாட்டலும் ஒரு மாணவனின் வாழ்க்கைக்கு முக்கியமானது என்று அறிஞர்களினாலும் ஆய்வாளர்களினாலும் உணரப்பட்டுள்ளது.

ஞி.சி. ணிathலீwson என்பவரின் கருத்துப்படி வழிகாட்டலானது, பின்வரும் 4 நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக பாடசாலையில் முன்னெடுப்பதாக காணமுடிகின்றது.

1. கல்வி சார்பான வழிகாட்டல்

2. தொழில் சார்பான வழிகாட்டல்

3. தனியாள் சார்பான வழிகாட்டல்

4. சமூக வழிகாட்டல்

மேற்படி காரணங்களை ஆராய்ந்து நோக்குமிடத்து தற்போதைய பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு, இடைநிலைப் பிரிவு என்ற வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரிடமும் ஏதோ பிரச்சினைகள் காணப்படுவதையும் அதனால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் வெளிக் கிழம்புவதையும் காண முடிகின்றது. இப்பிரச்சினைகளுக்கு மேற்கூறிய முக்கிய காரணங்கள் மூலமும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் மூலமுமே நிவாரணம் வழங்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதற்கு பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போன்ற சகல தரப்பினர்களதும் ஒத்துழைப்பு பெறப்படுவது அவசியமாகும். அத்தோடு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வளங்களும் வசதி வாய்ப்புக்களும் கிடைக்குமானால் பல்வேறுபட்ட பிரச்சினைகளால் சிக்கிச் சீரழிந்து வாழ வழி தெரியாது அலைந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான கல்விச் செயற்பாடுகள் ஊடாக வழிகாட்டல் செய்வது, மாணவரது ஆளுமை விருத்திக்கு பயனுள்ளதாக அமையும். அத்துடன் இன்றைய நவீன உலகுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றலும் ஆளுமையுமுள்ள மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளுக்கு உண்டு என்பதைதுணிந்து கூறலாம்.

கலண்டர் பிறந்த கதை சொல்லவா?


ஆதி மனிதன் பருவ காலங்களின் சுழற்சியைக் கொண்டு ஆண்டினை உருவாக்கிக் கொண்டான். பாபிலோனியர்கள் சில வேளையில் 13 மாதங்கள் எனவும் கணக்கிட்டனர். யூதரும் கிரேக்கரும் கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் ஆண்டொன்றில் 12 மாதங்கள் என்பதைச் சுமேரியர்களே கணித்தனர். கலண்டர்களை உபயோகிக்கும் யூகத்தை எகிப்தியர்களே அறிமுகம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அதனைத் தொடர்ந்து கி.மு. 44 இல் கிரேக்க வானியலறிஞர் சொசிஜெனிஸ் என்பவரின் விருப்பத்திற்கு இணங்க ரோமானியரால் லீப் நாள் உள்ளடக்கப்பட்டு 1500 ஆண்டுகளுக்கான கலண்டர் கணிக்கப்பட்டது.


தற்போதைய கலண்டர் உருவாக்கப்பட்ட 1582 இல் மேற்கூறப்பட்ட கலண்டரில் குறைகள் போக்கப்பட்டு பாப்பரசர் பதின்மூன்றாம் கிரிகோரியின் மறுசீரமைக்கப்பட்ட கலண்டரே மேற்கத்திய நாடுகளில்கிரிகோரியன் கலண்டர்எனும் பெயரில் விளங்கி வருகிறது. தற்போதைய நடைமுறையில் உள்ளதும் அதுவேயாகும். மாயன்களின் உலக அழிவு பற்றிய எதிர்வு கூறல் இதுவரை காலத்தைப் போலன்றி 2012- டிசம்பர் மாதம் கலண்டர் யுகத்தையே ஆட்டுவித்து விட்டது எனலாம்.

அமெரிக்காவின் மத்திய பகுதியைச் சேர்ந்த மாயன் காலம் 2012 டிசம்பர் 21ஆம் திகதி வரையிலான கலண்டரே பெரும் புரளியை கிளப்பிவிட்டிருந்தது. டிசம்பர் 21ஆம் திகதியுடன் அந்தக் கலண்டர் முடிவுறுவதால். அதன் பின் இவ்வுலகம் இல்லை. அழிந்து விடும் என்ற புரளி கிளப்பப்பட்டிருந்தது. விஞ்ஞான உலகமும் அஞ்ஞான உலகமும் இதுபற்றி சரியான தீர்க்கமான விளக்கத்தை கொடுக்க முடியாத நிலையில் தடுமாற்றம் தொடர்ந்தது. சோதிட ரீதியிலும் பற்பல வியாக்கினங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததன. சமய ரீதியிலும் பல்வகையிலும் விளக்கங்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. உண்மையில் அது ஒரு சகாபதம் முடிவுறுவதாக அடுத்த சகாப்தம் ஆரம்பமாவதாகவும் கருத்துக்கள் முன்னைடுக்கப்பட்டன.


மாதங்கள் உருவானவிதம் பற்றி அலசி ஆராயப் போனால் ஒரு புதுமையும் ரசிப்பும் காணப்படுகிறது. JANUS எனும் தூய ரோமானியக்குட்டித் தேவதையின் பெயரில் இருந்தே நிதினிஸிதிஞிவீ ஜனவரி மாதம் ஆரம்பமானது. FEBRUARY மாதம் ஆனது JANUARY இறந்ததும் உற்றார் உறவினரின் ஈடேற்றும் வேண்டி பலியிடுவது இம்மாதத்தில் தான். இவ்வாறு ஒவ்வொரு மாதத்தின் பெயர் உருவானதிற்கும் ஒரு வரலாறு உண்டு.

SUNDAY - ஞாயிறு என்பது (SUN) சூரியனின் நாள் என்பதாகும்.

MONDAY- திங்களள் (MOOM) சந்திரனின் நாள் என்பதாகும்.

TUESDAY - செவ்வாய் (TUE) போர்க்கடவுளின் நாள் எனப்படும்

WEDNESDAY - புதன் (WODEN) கடவுளின் நாள் எனப்படும்.

THURSDAY - வியாழன் இடிக்கான கடவுள் எனப்படும்.

இதேபோல 7 நாட்கள் உருவானதற்கும் பல்வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன.

FRIDAY - FREYA - வெள்ளி நட்புக்கடவுளின் தினமாகும்

SATURDAY- SATHRN - ஷிதிஹிசிஞினி பாபிலோனியரின் புனித இலக்கம் 7 என்பதால்தான் வாரத்தில் 7 நாட்கள் உருவானது.

பண்டைய பாபிலோனியாவில் 11 தினங்கள் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஜப்பானில் ஜனவரி 1ஆம், 2ஆம், 3ஆம் திகதிகளில் அரிசி கேக் பாயாசத்துடன் கொண்டாடி மகிழ்வர். டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும் இரவினில் பழைய பூட்சை எடுத்து சுத்தஞ்செய்து அதில் வண்ண நிற மலர்களை நிரப்பி இரவில் சென்று தமக்கு வேண்டியவரின் வீட்டு வாசலில் வைப்பர். விடிந்ததும் பூக்களை வீட்டுக்காரர் எடுத்துக் கொண்டால் பரிசளித்தவருக்கும் வீட்டுக்காரருக்கும் அவ்வாண்டு முழுவதும் ஆனந்தம் என்று பொருள்படும் இப்படியான வரலாற்றைக் கொண்டதுதான் கலண்டர் எனப்படும் தினவேடு.

பொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை)பெயர் : பொன்னாடை


தொழில் : மேடைகளில் தோள்களை அலங்கரிப்பது

உண்மையான தொழில் : கெளரவம் அளித்தல்

சைட் பிஸினஸ் : போர்த்தியபின் சுழற்சியாக மீள்

விற்பனையாதல்

வருமானம் : கலைஞர்களுக்கு உதவும் கொடை வள்ளல்களின் தாராள மனது

பொழுது போக்கு : குளிர்கால இரவுகளில் போர்வையாவது

அதிகம் இரசிப்பது : அரசியல்வாதியின் தோள்களில் அமர்ந்திருப்பது

அசைக்க முடியாத பலம் : கலைஞர் கெளரவிப்பு, கட்சி மாநாடு, நூல் வெளியீடுகள்

அசைக்கக் கூடிய பலம் : புரவலர்கள், பிரமுகர்கள் கைகளை விரித்தல்

நண்பர்கள் : தன்னை அதிகமாக வாங்கி பிறருக்குக் கெளரவமளிப்போர்

எதிரிகள : தனக்கு எதிராக விமர்சிப்போர், கட்டுரை எழுதுவோர்

மகிழ்ச்சி : தன்னால் பிரபல்யமாகும் உண்மையான கலையுலக, அரசியல் பிரமுகர்கள்

துக்கம் : தன்னைப் போர்த்திப் பிரபல்யமாகும் தகுதியில்லா கலையுலக, அரசியல் பிரமுகர்கள்

ஏக்கம் : தகுதியில்லாதவர்கள் தோள்களிலும் ஏறும் நிலை ஏற்பட்டமை

தவறவிட்டது: அமரர்களாகிவிட்ட கெளரவமான பலரின் தோள்களை அலங்கரிக்காமை

நிறைவேறாத ஆசை : மரணச் சடங்குகளில் மட்டுமே தனக்கு இடமில்லாமை

நிறைவேறிய ஆசை : ஆலயக் குருமாரின் இடுப்பிலிருந்து தலைக்கும் சென்றமை

மிகவும் பிடித்தது : கண்ணைக் கவரும் ஜரிகைப்பட்டு

சாதனை : தண்ணீரில்லாத ஊர்களிலும் தன்னை விரும்பும் பிரமுகர்கள்

அதிக மரியாதை வைத்திருப்பது : தன் மதிப்பைப் புரிந்து நடப்போர் மீது

மனம் வெதும்பிய சந்தர்ப்பம் : ஒரு மேடையில் ஒரே பொன்னாடையை மூவருக்குப் போர்த்தியமை

எதிர்கால இலட்சியம் : கெளரவமானவர் தோள்களை மட்டும் அலங்கரிப்பது

கோபம் கொள்வது : பொன்னாடை என்று கூறி நூல் வேட்டிச் சால்வையைப் போர்த்துவது

எதிர்பார்த்துக் கொண்டிருப்பது : ஒரே மேடையில் ஆயிரம் பேரின் தோள்களில் அமர்வது

எதிர்பாரா சம்பவம் : மாபெரும் விழாவில் போர்த்தியபோது நடுவே கிழிந்துவிட்டமை.

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger