வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள் - Tamil News வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்

வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்

Written By Tamil News on Friday, April 19, 2013 | 9:12 PM நமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும் கலங்கள் தான் மெலனின் நிறப்பொருட்களை  உருவாக்கும். நிறப்பொருட்கள் அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் தோன்றுவோம்.
ஆனால் சிலருக்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள கலங்கள் ஏதோவொரு காரணத்தால் பாதிப்படைவதால், அவ்விடத்தில்  இருக்கும் நிறப்பொருட்கள்  குறைந்து வெண்புள்ளிகளை ஏற்ப டுத்துகிறது.இந்தக் குறைபாடு உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.


வெண்புள்ளிகளில் இரண்டு வகைகள் உண்டு.
1.`விட்லிகோ'
2.`லூக்கோ டெர்மா'.

இதில் 'விட்லிகோ' எனப் படுவது உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடியது. பெரும்பாலும் உதடு, கைகள், கால்கள், தொப்புள், பிறப்புறுப்புகள், மார்புக் காம்பு, காது போன்ற இடங்களில் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கும். இதில் ஒரு சிலருக்கு உடல் முழுவதும் வேகமாகப் பரவி, வெள்ளைகாரர் போல் மாறிவிடுவதும் உண்டு.

`லூக்கோ டெர்மோ' எனப்படுவது உடலின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும் வகையைச் சேர்ந்தது. உடலில் எங்கேனும் தீயால் சுட்ட புண்கள் இருந்தாலோ அல்லது இறப்பர் செருப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சலைகளில் பணிபுரிந்தாலோ இவ் வகையான வெண்புள்ளி வரும்.

இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. இது ஒரு சிலருக்கு பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம். தைரொய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள், நீரிழிவு வியாதி, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச் சத்துக் குறைவு, கலங்களுக்குக் கிடைக்க வேண்டிய விட்டமின் குறைபாடு ஆகியவைகளால் இவை உருவாகும்.

மேலும் ஒரு சிலருக்கு அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச் சோகை, தைபொய்ட் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின் தாக்குதலாலும் இவை ஏற்படும். அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும் நிறப்பொருள் அணுக்கள் தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது. இதனால் இந்தக் குறைபாடு எப்போது வேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றும்.

உடலியக்கத்தைச் சீராகச் செயற்படவைப்பதுதான் இதற்கான சரியான சிகிச்சை முறை . அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் வந்ததா? பரம்பரையின் காரணமாக ஏற்பட்டதா? வேறு சில நோய்களின் பின்விளை வினால் உருவானதா? என்பதை ஆராய்ந்தறிந்து, உடல் திறனுக்கு ஏற்ப சிகிச்சையளிக்கவேண்டும். உடலின் இயக்கம் சீரடைந்தால், சருமத்தில் உள்ள மெலனோசைட் கலங்கள் பணியாற்றத் தொடங்கும். தோலின் மீது சூரிய ஒளி பட்டால் கூட நிறப்பொருட்கள்  வேலை செய்யும். அதனால் சில மருத்துவ முறைகளில் சில வெளிப் பூச்சுகளை பூசிக்கொண்டு, சூரியனின் ஒளி உடலில் படுமாறு நில்லுங்கள் என்று பரிந்துரைப்பார்கள்.

பொதுவாக உதடுகளில் தோன்றும் வெண்புள்ளிகள் விரைவில் குணமடையும். உடல் முழுவதுமாகத் தோன்றும் வெண்புள்ளிகளுக்கும், ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் வெண்புள்ளிகளுக்கும் சிகிச்சை  பெற்றால்தான் குணமாகும். அத்துடன் பொறுமையுடனும் சிகிச்சையை எடுத் துக்கொள்ளவேண்டும்.

உடலில் எங்கேனும் வெண்புள்ளிகள் தோன்றினால் விட்டமின் C சத்து அதிகமாக இருக்கும் எலுமிச்சை , திராட்சை , ஒரேஞ்ச், ஊறுகாய், மீன், முட்டை, மாமிசம் ஆகிய வற்றைத் தவிர்த்துவிடவேண்டும். அத்துடன் பொதுவாக புளிப்புச் சுவையையே தவிர்த்து விடவேண்டும். அதற்கு மாறாக கரட், பீட்ரூட், முள்ளங்கி, பனை வெல்லம், பேரீச்சை  ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெண் குஷ்டம் என்பது தொழுநோயின் அறிகுறியாகும். இதற்கும், வெண்புள்ளிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழுநோய் ஒருவித வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உருவாகிறது. அதற்கான சிகிச்சை  முறை முற்றிலும் வேறுபட்டது.

வெண்புள்ளிக்கு மற்றைய மருத்துவ முறைகளை விட ஹோமியோபதி மருத்துவ முறைகளில் சிகிச்சை  எடுத்தால் நல்ல பலன், நிரந்தரமாக உண்டு.


-ஹோமியோபதி மருத்துவ நிபுணர் டொக்டர் ஆர். ஞானசம்பந்தம்-
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger