இறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது - Tamil News இறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது

இறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது

Written By Tamil News on Sunday, April 14, 2013 | 3:53 AM


மக்கமா நகரில் அமைந்துள்ள இறை இல்லமான புனித கஃபா ஷரீபை நோக்கி பயணம் மேற்கொண்டு அங்கு சில குறிப்பிட்ட கிரியைகளை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவது ஒவ்வொரு சக்தியுள்ள, வசதிபடைத்த முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அல்குர்ஆன்முன்னைய சமூகங்களின் மீது ஹஜ் கடமையாக்கப் பட்டுள்ள போதிலும் எம்மீது விஷேட கடமையாக்கப்பட்டிருக்கின்றது. அந்த வீட்டை அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சக்தி பெற்ற எல்லோர் மீதும் கடமையாகும்’ (3:97)


ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது இரண்டு வெள்ளை நிறத் துணிகளிலான இஹ்ராம் உடை தரிப்பதற்கு வழமையான ஆடைகளைக் களையும் போது உலக ஆசாபாசங்கள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள் ஆகியவற்றை களைந்தெறியும் உணர்வு ஏற்படுகின்றது.

இஹ்றாம் தரிக்கும் போது தேசியவாதம், நிறவாதம், இனவாதம், ஆண்டான், அடிமை என்ற நிலைமாறி அனைவரும் இறைவனின் அடிமைகள், முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர் என்ற பணிவு ஏற்படுகின்றது.

ஹஜ் கடமையின் போதுலெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக் லாசரீகலக லெப்பைக்எனத் தக்பீர் கூறுவது இப்றாஹீம் (அலை) அவர்களின் அழைப்பிற்கு பதிலாக அமைந்துள்ளது.

எமது இறைவன் நீதான், எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் நீதான் உம்மையே எமது இறைவனாக ஏற்று துதி செய்கின்றோம்எனும் வாக்குறுதி கியாமத்து நாளில் அழைப்பாளர்களின் அழைப்பை ஏற்று தலைவணங்குவதை நினைவுபடுத்துகின்றது.

 இதுபற்றி அல்-குர்ஆன்அந்நாளில் எல்லா மக்களும் அல்லாஹ்வின் சார்பாக அழைப்பாளர்களின் அழைப்பைக் கேட்டு அதனை பின்பற்றிக் கொள்வார்கள். (20:108)

ஹஜ் கடமையில் தவாபு செய்வதில் பல்வேறு தத்துவங்கள் பொதிந்து காணப்படுகின்றன.

ஜாஹிலியாக்கால மக்கள் புனித கஃபாவில் 360 விக்கிரகங்களை வைத்து வணங்கினார்கள். மக்கா வெற்றியுடன் மக்களது உள்ளத்திலும் கஃபத்துல்லாஹ்விலும் ஏகத்துவம் நிலைநாட்டப்பட்டதை உணர்த்தி கஃபாவை தவாபு செய்கின்றனர்.

இது எந்தப் பொருளையோ, எந்த வஸ்தினையோ வலம்வர மாட்டோம் என்றும் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் திருப்தியைப்பெறுவதை உறுதி கூறுவதாக அமைகின்றது.

அது மட்டுமன்றி அர்சைச் சுற்றி மலக்குகள் தவாபு செய்து கொண்டிருப்பதை நினைவுபடுத்துகின்றது. தவாபின் போது ஹாஜிகள் தங்கள் பாவங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டுவது மறுமையில் தனது பாவங்களை எண்ணி இறைவனிடம் அழும் நிலையை உணர்த்துகின்றது.

சபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவது மஹ்ஷர் மைதானத்தில் மனிதர்கள் அங்குமிங்கும் வெருண்டோடுவதையும் நினைவு படுத்துவதாக அமைகின்றது. எந்தவொரு நிழலோ, நீர் வசதியோ, ஆறுதலோ இல்லாமல் தமது தலைகளுக்கு மேல் சூரியனின் வெப்பத்தால் மக்கள் துடித்துக் கொண்டிருப்பதை அறபா மைதானத்தில் ஒன்று கூடும் நிகழ்வு ஞாபகமூட்டுகின்றது.

 மேலும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய களமாக அறபா மைதான ஒன்றுகூடல் அமைகின்றது.

அல்லாஹ்விற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகவுள்ளோம். இரவு பகலாக கண் விழித்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் கட்டளைக்காக பலியிடத் தயார் என்பதனை குர்பான் கொடுக்கும் நிகழ்வு புலப்படுத்துகின்றது. ஜம்றாக்களில் கல்லெறிவதானது இஸ்மாயில் (அலை) அவர்களின் மகன் நபி இப்றாஹீம் (அலை) அவர்களை அறுக்க முனைந்த போது இடைமறித்த ஷைத்தானை விரட்டுவதற்காக கல்லெறியப்பட்டதை நினைவூட்டுகின்றது.

இதேபோன்று அசத்தியத்தை ஒழித்து சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக தீயசக்திகளை தூக்கி வீசிடுவோம் என உறுதி மொழி எடுப்பதற்கும் இஸ்லாமிய உணர்வுகளுக்கு எதிராக வளரும் பிரதேசவாதம், தேசியவாதம் போன்றவற்றை மறந்து சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்துவதாய் வருடாந்த ஒன்ற கூடலான ஹஜ் விளங்குகின்றது.

மேற்கூறப்பட்ட போதனைகளையும், நோக்கங்களையும் உள்ளடக்கியிருக்கும் புனித ஹஜ்ஜை இறைவனுக்காக செய்கின்றேன் என்ற நிய்யத்துடன் நிறைவேற்றி அன்னை வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப்போல் பாவங்கள், ஆசைகள் இல்லாத தியாகிகளாக ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவோம்.

கஸ்பியா எம். முஜாஹித்,
நற்பிட்டிமுனை 02
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger