பாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி - Tamil News பாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி - Tamil News
Headlines News :

Hottest List

Home » » பாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி

பாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி

Written By Tamil News on Friday, April 19, 2013 | 8:10 PMபுவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப் பொழிவைப் பெறுகிறதோ அதுபாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப் பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை.


பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங் களை விட அதிகமாக நீர் வெளியேறும் புவியியற் பிரதேசங்களே பாலைவனம் எனக் கருதப்படும். தனியே மழை வீழ்ச்சியை மாத்திரம் கொண்டு பாலைவனங்களை வரையறுக்க முடி யாது. இவ்வரையறை வெப்பநிலையா லும் ஈரப்பதத்தாலும் செல்வாக்கு செலுத்தப்படுகின்றது. சில வேளைகளில் பாலைவனங்களை குளிர்ப் பாலை வனங்கள் என்றும் சூடான பாலைவனங்கள் என்றும் பாகு படுத்துவர். குளிர்ப்பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினர். தற்போது அனுமதிக்கப்பட்ட பாகுபாடாக வறண்ட மற்றும் அரை உலர் வலயப் பாகுபாடு உள்ளது. வறண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 25 மி.மீ (10 அங்குலங்கள்) விட குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250 –500 எம்எம் (10-20 அங்குலங்கள்) வரை இருக்கும்.

புவியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (33%) பாலைவனங்களாகும். சூடான பாலைவனங்களின் பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். இவற்றின் குளிர்கால கோடைகால வெப்பநிலை வேறுபாடும் அதிகமாகக் காணப்படும். சூடான் பாலைவனங்களின் கோடைக்கால வெப்பநிலை 45சி/113 எவ் வரை உயரும். அதேவேளை குளிர்கால வெப்பநிலை 0 சி/32 எவ் அல்லது அதை விடக் குறைவடையும். இங்கு ஈரப்பதம் குறைவென்பதால் இதனைச் சுற்றியுள்ள வளி சூரியனால் பகலில் வேகமாக சூடாக்கப்படுவதுடன் இரவு வேளையில் வேகமாகக் குளிர்வடைந்து விடும். எனவே இங்கு பகல்- இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும்.

பாலைவனங்களின் காலநிலை தாவரங்களுக்கு ஏற்றதல்லவென்றாலும், உண்மையில் பாலைவனங்களின் உயிர்ப்பல்வகைமை அதிகமாகும். இங்கு வாழும் தாவரங்கள் ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் வகையில் இசை வாக்கமடைந்துள்ளன. கள்ளிபோன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக்கூடியன (அடகாமா, அன்டார்க்டிக்கா போன்றவற்றைத் தவிர்த்து) இவற்றின் வேர்த்தொகுதி அரிதாகக் கிடைக்கும் நீரை சரியான முறையில் விநியோகிக்கக் கூடியவாறு விருத்தியடைந்துள்ளன.

தாவரங்களைப் போலவே விலங்குகளிலும் பாலைவனச் சூழலுக்கு சிறப்பாக இசை வாக்கம் அடைந்தவை உள்ளன. பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகம் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

புவியிலே வறண்ட இடமாக அட்டகாமா பாலைவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஏனைய பாலைவனங்களில் சிறிதளவேனும் மழை பொழியும். இங்கு சிலவேளைகளில் அடைமழை கூடப் பொழிந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும்.

கோள்களில் உள்ள பாலைவனங்கள்

புவியைத் தவிர சூரியக் குடும்பத்தில் செவ்வாயிலேயே பாலைவனம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உள்ள பாலைவனங்கள் புவியில் உள்ளவற்றை விடப் பெரியனவாகும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger