நீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப்பாக்கிறார்கள் - ஒபாமா - Tamil News நீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப்பாக்கிறார்கள் - ஒபாமா - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » நீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப்பாக்கிறார்கள் - ஒபாமா

நீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப்பாக்கிறார்கள் - ஒபாமா

Written By Tamil News on Wednesday, April 17, 2013 | 5:20 AM


அமெரிக்காவில் மஸ்சாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான பாஸ்டன் நகரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம், 3–வது திங்கட்கிழமை தேச பக்தர்கள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் மிகப்பிரமாண்டமான மராத்தான் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம்.


இந்த வழக்கப்படி  42 கி.மீ. தொலைவிலான மராத்தான் போட்டி நடந்தது. இந்த பந்தயத்தை காணவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் சாலையின் இருவோரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். மராத்தான் போட்டியில் 27 ஆயிரம் பேர் பங்கேற்று பந்தயத்தை நிறைவு செய்யும் இறுதிக்கட்டத்தில் இருந்தனர்.

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு


அப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிற வகையில் ஆடம்பர கடைகள், மது விடுதிகள், உணவு விடுதிகள், ஓட்டல்கள் அமைந்துள்ள நகரின் இதயம் போன்ற மையப்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

பலத்த சத்தத்துடன் கூடிய இந்த குண்டுவெடிப்பால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. எங்கும் மரண ஓலம் கேட்டது. அந்த பகுதியே புகை மண்டலமாக மாறிப்போனது.இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி ஒரு சிறுவன் உள்பட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 8 குழந்தைகள் உள்பட 150 பேர் இதில் சிக்கி படுகாயம் அடைந்தனர். பலர் கை, கால்கள் என உறுப்புகளை இழந்து, ரத்த வெள்ளத்தில் துடித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.மீட்பு பணி

அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.


அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்த நிலையில் பாஸ்டன் நகரில் உள்ள பொது நூலகம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு மூன்றாவது குண்டு வெடிப்பு நடந்து விட்டதோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு குண்டு வெடிப்பு நிகழவில்லை என்பதை பாஸ்டன் போலீஸ் கமிஷனர் எட் டேவிஸ் உறுதி செய்தார்.

தீவிரவாதிகள் செயல்

அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களும் தீவிரவாதிகளின் நாசவேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு அரங்கேற்றியது உள்நாட்டு தீவிரவாதிகளா, வெளிநாட்டு தீவிரவாதிகளா என கண்டறிய தீவிர புலன் விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே இரண்டு இடங்களில் வெடிக்காத நிலையில் 2 சக்திவாய்ந்த குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை வெடிக்கும் முன்பாக கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச்செய்யப்பட்டன. இதனால், மேலும் உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் தவிர்க்கப்பட்டன.

குப்பைத் தொட்டிகளில் வைக்கப்பட்ட குண்டுகளே வெடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் ஏராளமானோரை படுகாயப்படுத்தும் நோக்கத்துடன் பெருமளவு வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.குண்டு வெடிப்பை தொடர்ந்து அமெரிக்க தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிட்ட காட்சி

ஒபாமா கண்டனம்

அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ”இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் முட்டாள்தனமானவை. சதிகாரர்கள் பிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நீதியின் பலத்தை அவர்கள் உணர்கிற நிலை வரும்என எச்சரித்தார்.

 அரேபிய நபருக்கு தொடர்பு?

நடந்த குண்டுவெடிப்புகளில் சவூதி அரேபியாவை சேர்ந்த ஒருவரது தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது. ஒரு காலில் காயம் அடைந்த அந்த நபர் பாஸ்டன் மருத்துவமனை ஒன்றில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவங்களில் கறுத்த நிறம் உடைய நபர் ஒருவரது தொடர்பும் சந்தேகிக்கப்படுகிறது. முதல் குண்டு வெடிப்பு நடப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிக்குள் அந்த நபர் நுழைய முயற்சித்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நபரைப் பிடிப்பதற்கான வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சம்பவ பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகள், சம்பவத்தின் புகைப்பட காட்சிகளை அமெரிக்க உளவுப்படை (எப்.பி..) தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger