ஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி? - Tamil News ஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி?

ஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி?

Written By Tamil News on Saturday, April 13, 2013 | 10:00 PMநோய்க்காவியான பெண் அனோஃ பிலிஸ் நுளம்பு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனோஃபிலிஸ் நுளம்புக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.

நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும் போது அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ் மோடியம் ஒட்டுண்ணியைப் பெற்று வேறொரு நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோய் கடத்தப்படுகிறது. நோய்த் தொற்றுடைய நுளம்பு ஒரு நபரைக் கடிக்கும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது. அந்த இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன.


சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அந்த நுளம்பு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு நபரைக் கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகள் நுளம்பின் உமிழ் நீரில் கலந்து அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து ஏற்படுத்தும் அறிகுறிகளாவன:

இரத்த சோகை, தலை இலேசாக இருப்பது போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகைப்பு

மற்ற பொது அறிகுறிகளாவன: காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், உடல் நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம்.

நுளம்பு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் நுளம்பு கடிக்காமல் தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் நுளம்புகள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம்.

பல வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடுத்தன. நுளம்புகளுக்கு ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக நுளம்புகளுக்கு மரபியல் ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டன. சில தடுப்பு மருந்துகள் உருவாக்கத்திலிருந்தாலும் மலேரியாவிலிருந்து முழுவதுமாக பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை.

நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நோய் வருவதற்கு முன்னதாகவே தடுக்கும் மருந்துப் பொருள் மருந்து சிகிச்சைகள் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் வயது வந்தவர்கள் பலருக்கு நீண்ட கால நோய்த்தொற்று இருக்கிறது. இந்த நோய் திரும்ப திரும்ப ஏற்படுவதனால் இவர்களுக்கு அந்நோய்க்குரிய நோய் எதிர்பாற்றல் முறைமை (நோய் எதிர்ப்பு திறன்) ஏற்படுகிறது. சில நாட்கள் கழித்து இந்த தடுப்பாற்றல் குறைந்துவிடும்.

இந்த வயது வந்தவர்கள் ஆண்டு முழுவதும் நோய் தோன்றாத பகுதிகளில் சில நாட்கள் கழித்திருந்தார்களானால் இவர்களுக்கு கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளுக்கு இவர்கள் திரும்பவும் வருவதாக இருந்தால் நோய் வராமல் தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

குயினைன் அல்லது ஆர்டிமிஸினின் மூலம் செய்யப்பட்ட மருந்துகள் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் இது போன்ற பல மருந்துகளை எதிர்க்கும் தன்மையுடையதாக ஒட்டுண்ணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் உலகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவிலான மருந்துகளே மலேரியாவின் சிகிச்சைகளில் பயனுள்ளதாக இருக்கிறது.

மலேரியாவின் அறிகுறிகளாவன: காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி, வாந்தி, இரத்தச் சோகை, ஈமோகுளோபின் நீரிழிவு, விழித்திரை சேதமடைதல், மற்றும் வலிபுகள், சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும். இவை மலேரியாவின் முதல் நிலை அறிகுறிகளாகும்.

அறிவாற்றலை மலேரியா பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் காலத்தின் போது இரத்த சோகையையும் நேரடி மூளை பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிப்படையக் கூடிய பெருமூளைச்சிரைக்குரிய மலேரியாவினால் நரம்பியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது.

மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இளம் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எளிதில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மண்ணீரில் பிதுக்கம், கடுமையான தலைவலி, பெருமூளைச் சிரையில் குருதியோட்டக் குறைவு ஏற்படுதல், ஈரல் பெருக்கம் (ஈரல் விரிவடைதல்), சிறுநீரக செயலிழப்புடன் ஈமோகுளோபின் நீரிழிவு ஏற்படலாம்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger