பரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் உற்சாகம் - Tamil News பரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் உற்சாகம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » பரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் உற்சாகம்

பரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் உற்சாகம்

Written By Tamil News on Friday, April 19, 2013 | 8:27 PM



கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீசில் அடுத்த மாதம் (மே) 26ம் திகதி முதல் ஜூன் 9ம் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகை 17.6 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.


இதன்படி இந்த ஆண்டுக்கான போட்டியில் மொத்தம் ரூ. 157 கோடி பரிசுத் தொகையாக வழங்கப் படுகிறது. இது 2012ம் ஆண்டை விட ரூ. 23 கோடி கூடுதலாகும். ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 10 3/4 கோடி வீதம் (கடந்த ஆண்டு ரூ. 9 கோடி) கிடைக்கும்.

மேலும் 2வது 3வது, 4வது சுற்றுகளில் தோற்று வெளியேறும் வீரர்களுக்கான பரிசுத்தொகையும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2016ம் ஆண்டு பிரெஞ்ச் பகிரங்கத்திற்குள் மேலும் ரூ. 71 கோடி பரிசுத்தொகை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger