அமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெளியிட்டது - Tamil News அமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெளியிட்டது - Tamil News
Headlines News :

Hottest List

Home » » அமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெளியிட்டது

அமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெளியிட்டது

Written By Tamil News on Tuesday, April 9, 2013 | 8:07 AM


அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று மேலும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை அம்பலப்படுத்தியது.


1970 களைச் சேர்ந்த அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் உளவுப் பிரிவு ஆவணங்களே வெளியிடப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியின் அசாஞ்ச் தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் கேபிள்கள், உளவு அறிக்கைகள் மற்றும் கொங்கிரஸ் அறிக்கைகள் மூலம் பெறப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் இக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அசாஞ்ச் இந்த ஆவணங்களை வெளியிடுவதற்கான செயற்பாடுகளை அங்கிருந்தே முன்னெடுத்துள்ளார்.

இந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்கா சர்வதேச அளவில் ஏற்படுத்திவரும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அசாஞ்ச் . பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அசாஞ்ச் பிரிட்டனில் இருந்து சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை தவிர்க்க கடந்த 9 பாதங்களாக அங்கிருக்கும் இக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா தொடர்பான இராணுவ மற்றும் இராஜதந்திர ரகசியங்களைக் கொண்ட 250,000 கும் அதிகமான ஆவணங்களை அம்பலப்படுத் தியதைத் தோடர்ந்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger