செத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (படம்) - Tamil News செத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (படம்) - Tamil News
Headlines News :

Hottest List

Home » » செத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (படம்)

செத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (படம்)

Written By Tamil News on Friday, April 19, 2013 | 5:50 AM


இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச்சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பயங்கர இறுதிசடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின்போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசிகடல் சமாதிஎன்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். ‘இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வருவார்கள்என்ற நம்பிக்கையில் பெட்டியில் உடலை வைத்து அதை அப்படியே தூக்கி கொண்டு போய், ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில், இடுக்குகளில், பொந்துகளில் வைக்கும் வழக்கம் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சீனாவில் இறந்தவர்களின் உடலை அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் அப்படியே உடலை வெட்டி கழுகுகளுக்கு இரையாக்கி இறுதி சடங்கு நடத்தும் பயங்கரம் நடக்கிறது. இதைஸ்கை பரியல்அதாவது, ஆகாய புதைப்பு என்கிறார்கள்.சீனாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. உடலை எரிக்க மரங்கள் கிடைக்காததாலும், புதைப்பதற்காக நிலத்தை தோண்டுவது மலைப்பாங்கான பகுதிகளில் கடினம் என்பதாலும்ஆகாய புதைப்புமுறையை பின்பற்றி வந்தனர். இது மிகவும் அருவருப்பானது, சுகாதாரமற்றது என்பதால் 1960&களில் சீன அரசு இதற்கு தடை விதித்தது. ஆனால், 1980&களில் இருந்து சீனாவின் சில இடங்களில் மட்டும் இதை புத்தமத இறுதி சடங்கு என்ற பெயரில் மீண்டும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


திபெத்திலும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலும்ஆகாய புதைப்புஅதிகளவில் நடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம், மயானம் போல உள்ளது. இறந்தவர்களின் உடல் துணியால் கட்டப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறது. உடலுக்கு புத்தமத பிட்சு ஒருவர் முதலில் வழிபாடு செய்கிறார். அதன் பின்னர், ‘ரோக்யபாஸ்என்பவர் வெட்டும் சடங்கை செய்கிறார். உடலை ஆங்காங்கே கத்தியால் கிழித்து கூறு போடுகிறார். பின்னர் உடலை அங்கேயே வீசிவிடுகின்றனர். இதற்காகவே காத்திருக்கும் ராட்சத கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் ஆகியவை கூட்டம் கூட்டமாக குவிந்து உடல்களை கிழித்து தின்கின்றன. இது அடிக்கடி நடக்கும் காட்சி என்பதால் அப்பகுதியினருக்கு பழகிவிட்டது. ஆனால், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger