இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை! - Tamil News இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை! - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை!

இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை!

Written By Tamil News on Saturday, April 20, 2013 | 7:15 PM


எந்த விடயமும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். ஆனால், இந்த நங்கை உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார்.

பிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார்அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது.
  
இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டதுஅளவுக்கதிகமான வளர்ச்சி காரணமாக பாடசாலைக் கல்வியையும் அவர் இடையில் கைவிட்டார்.

அதன்பின்னர் காதல் வலையில் விழுந்த எலிஸானி, காவல்ஹோவின் நடவடிக்கைகள் பிடித்ததால் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் காதல் பறவையாக பறந்து திரிவதை நாம் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ள முடியும். 
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger