சித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா? - Tamil News சித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா?

சித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா?

Written By Tamil News on Friday, April 12, 2013 | 9:12 AM


உயர் இரத்த அழுத்தம் ஒரு மௌனமான கொலையாளி
உப்புத்தூள் தூவிய மரவள்ளி, உருளைக் கிழங்கு பொரியல், உப்புக் கட்டிகளுடன் பச்சை மாங்காய் என உப்பு, மிளகாய்த் தூள் தூவிய நொருக்குத் தீனிகளை விரும்பி உண்பவர்கள் எம்மிடையே அதிகம் உள்ளனர்.
சிறுபிள்ளை முதல் பெரியோர் வரை கண்டதும் இவற்றை விரும்பி சாப்பிடாமல் இல்லை. இவற்றின் பின்னால் எவ்வளவு ஆபத்து காத்திருக்கிறது என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அதிகளவு உப்பு பாவனையின் மூலம் எமக்கு எத்தகைய ஆபத்து வரப்போகிறது என்பது எமக்கே தெரியாது. மருத்துவ துறையில் மெளனமமான கொலையாளி (ஷிilலீnt றிillலீr) என்றழைக்கப்படுகின்ற உயர் இரத்த அழுத்த நோய்க்கு நாம் ஆளாகிறோம்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக 62 வீதமானவர்கள் பக்கவாத நோய்க்கு (ஷிtrokலீ) ஆளாகிறார்கள். 49 வீதமானவர்கள் மாரடைப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த இரு தரப்பினரிலும் 30 வீதமானவர்கள் அதிகரித்த உப்பு பாவனையினால்தான் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்பார்கள். அதற்காக எல்லாவற்றுக்கும் உப்பை அளவுக்கதிகமாக பயன்படுத்தக் கூடாது. என்பது தான் வைத்தியர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

உயர் இரத்த அழுத்த நோய் என்பது தொற்றா நோய்களில் ஒன்று. தொற்றா நோய்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவையாக இருக்கின்றன. இவற்றை எமது பழக்க வழக்கங்களினால், கட்டுப்பாடுகளினால் தவிர்த்துக்கொள்ள முடியும்.

புகைத்தல், மது அருந்துதல், எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுதல், காபோவைதரேற்று அடங்கிய மாப்பொருள் உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல், உடற் பயிற்சிகளை செய்யாமை போன்ற காரணங்களினால் இந்த தொற்றா நோய்கள் எம்மை வாட்டி வதைப்பதற்கு ஏதுவாகின்றன.

நாக்கில் சுவை ஒட்டிக் கொண்டதன் பின் உப்பின் பாவனையை குறைக்கலாம் என்பது கொஞ்சம் கடினமானதுதான். என்றாலும் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு குறைத்துத் தான் ஆக வேண்டும்.

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 3 இலட்சத்து 85 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தை 2.5 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமான குழந்தை.

ஆனால் இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் 17 வீதமானவை நிறைகுறைந்த குழந்தைகளாக உள்ளன. இவர்களில் 17 வீதமானோர் அதாவது 64,000 குழந்தைகள் தொற்றா நோய்க்கு உள்ளாகலாம்.

ஒரு தேக்கரண்டி தண்ணீர் கூட கொடுக்காமல் 6 மாதங்கள் வரையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

முடியுமான வரை குழந்தைக்கு மூன்று நான்கு வயது வரையிலும் தாய்ப்பால் கொடுப்பதில் தவறில்லை. இதனூடாக தொற்றா நோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க முடியும்.

குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது உப்பு பயன்படுத்தக்கூடாது. உப்பு சுவை நாக்கில் ஒட்டிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. இதனால் உப்பு முழுமையாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது பொருளல்ல.

ஒருவர் தினமொன்றுக்கு 5 கிராம் உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இலங்கையில் ஒருவர் இன்று 12.5 கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறார். இது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நான்கு பேருள்ள குடும்பம் ஒன்று 20 நாட்களுக்கு 400 கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் போதுமானது என்றே சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 400 கிராம் எடைகொண்ட உப்புத் தூள் பக்கற்றில் ‘4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 20 நாட்களுக்கு போதுமானதுஎன அச்சிடப்பட வேண்டும் என்ற ஒரு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஒரு ஆலோசனையையும் முன்வைத்திருக்கிறார்.

உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் இதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் நொருக்குத் தீனிகள் உட்பட உலர் உணவு வகைகளில் சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவு குறித்து பக்கற்றின் மேல் பாகத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை சுகாதார அமைச்சு விரைவில் அமுல்படுத்த உள்ளது....

(தொடரும்)
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger