இலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு - Tamil News இலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு

இலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு

Written By Tamil News on Friday, April 19, 2013 | 8:36 PM


* doxycycillin மாத்திரையை பயன்படுத்த சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
* 1281 பேர் பாதிப்பு: 20 பேர் உயிரிழப்பு


நாட்டில் எலிக்காய்ச் சல் அச்சுறுத்தல் காணப் படுவதால் வயல் வேலை களில் ஈடுபட முன்னர் டொக்ஸிசைக் கிளின் doxycycillin மாத்திரையைப் பாவித்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.


அதேநேரம் கடும் காய்ச்சல், கண்கள் சிவப்பாதல், உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதியாது அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகி ச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் பபா பலிகவர்தன குறிப்பிடுகையில், இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இற்றை வரையும் எலிக்காய்ச்சலுக்கு 1281 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நோய்க்கு இவ்வருடம் ஜனவரி மாதம் 230 பேரும், பெப்ரவரி மாதம் 268 பேரும், மார்ச் மாதம் 680 பேரும், ஏப்ரல் மாதத்தில் முதல் 15 நாட்களில் 98 பேரும் ஆளாகியுள்ளனர். களுத்துறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், அநுராதபுரம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்நோய்க்கு அதிகளவில் உள்ளாகியுள்ளனர்.

எலிக்காய்ச்சலுக்கு வயல் வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்நாட்டில் உள்ளாவது வழமை. அதனால் வயல் வேலைகளில் ஈடுபட முன்னர் பிரதேசத்திலுள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று டொக்ஸிசைக்கிலின் மாத்திரைகளைப் பெற்றுப் பாவித்துக் கொள்ள வேண்டும். எலிக்காய்ச்சலுக்குரிய நோய்க்காரணியின் தாக்கத்தைத் தவிரித்துக் கொள்வதற்கு இம்மாத்திரை பெரிதும் உதவக்கூடியதாகும். அதனால் வயல் வேலைகளில் ஈடுபடுபவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger