காகித மலர்கள் இலங்கையில் அறிமுகம் - Tamil News காகித மலர்கள் இலங்கையில் அறிமுகம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » காகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்

காகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்

Written By Tamil News on Friday, March 8, 2013 | 4:49 AM


இலங்கையின் முன்னணி மலர் விற்பனை நிறுவனமான லஸ்ஸன ஃபுளோரா (Lassana Flora) வானது, மலர்களின் இதழ்களில் அச்சிடப்பட்ட எழத்துக்கள் மற்றும் புகைப்படங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், இப்போது இலங்கையின் மலர் விற்பனைசார் துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனிச்சிறப்புமிக்க இச்சேவையை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முதலாவாது மலர் விற்பனை நிறுவனமாக திகழ்வதன் ஊடாக, மற்றுமொரு முதன்முதலான முன்னெடுப்பை நிகழ்த்திய சாதனையை லஸ்ஸன ஃபுளோரா தமதாக்கிக் கொண்டுள்ளது.

லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர். லஸந்த மாளவிகே கூறுகையில்...

´உண்மையாகவே இலங்கையின் வெற்றிகரமான மலர் விற்பனைத் துறையில் மிக நீண்டகாலமாக உணரப்பட்ட ஒரு தேவையாக இது காணப்படுகின்றது. அச்சுப் பொறிக்கப்பட்ட மலர்களை சந்தைக்கு அறிமுகம் செய்யும் முதலாவது மலர் விற்பனை நிறுவனமாக முன்னிலை வகிப்பதையிட்டு லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தினராகிய நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இதிலுள்ள சாத்தியக்கூறுகள் முடிவற்றவை. அழகான உருவங்களை அச்சிடுவதன் மூலம் அத்துடன்ஃஅல்லது பிரத்தியேகமான எழுத்துருக்கள் அல்லது புகைப்படங்களை அச்சிடுவதன் ஊடாக ஒருவரது மலர்களை மிகச் சரியாக தனிச்சிறப்புள்ளதாக இப்போது மாற்றியமைக்கலாம்´ என்றார்.

லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெறும் மலர்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் மிக விரைவாக தாக்கம் செலுத்தும் என்று டாக்டர் மாளவிகே நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ´யாராவது ஒருவர் தொடர்பான அல்லது வருடம் முழுவதும் இடம்பெறுகின்ற அனைத்து விஷேட நிகழ்வுகள் குறித்த ஒரு நபரின் தனிப்பட்ட விருப்ப உணர்வை மிகச் சரியாக வெளிப்படுத்துவதற்கு இது வழிவகுக்கின்றது.

பிறந்த தினங்கள், ஆண்டுநிறைவு விழாக்கள், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவை இவ்வாறான விஷேட நிகழ்வுகளின் மிக நீண்ட பட்டியலில் ஒரு சிலவாகும்´ என்று வலியுறுத்தினார்.

அதி முன்னேற்றகரமான அச்சியந்திரங்கள், இயற்கையான மற்றும் செயற்கையான மலர்களில் நேரடியாகவே உயிரோட்டமுள்ள புகைப்படங்களை அச்சிடும் ஆற்றல் கொண்டவையாகும். இதன்மூலம் இலங்கையின் மலர் விற்பனைத் துறை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

மலரானது அதனைப் பெற்றுக்கொள்பவருடன் நேரிடையாக உரையாடக் கூடிய வகையிலமைந்த ஒரு தனிச்சிறப்புள்ள அழகுபடுத்தல் உபாயமாக இது காணப்படுகின்றது.

நாவல, கோல்பேஸ் ஹோட்டல், கண்டி சிற்றி சென்டர், KZone மொரட்டுவ மற்றும் நுகேகொடை ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டியங்கும் லஸ்ஸன ஃபுளோரா ஆனது, இன்று இலங்கையின் முன்னணி மலர் விற்பனை நிறுவனமாக உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகின்றது.

மிக விரைவாக வளர்ச்சியடைந்து செல்லும் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் தளம் - ராஜதந்திரிகள் மற்றும் கூட்டாண்மை நிறுவன அதிகாரிகள் முதல் மணமக்கள், ஹோட்டல்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் பிரிவினரை உள்ளடக்கியதாக பரவலாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் தென்னாசிய பிராந்தியத்திலும் ISO தரச் சான்றிதழைப் பெற்ற ஒரேயொரு நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ள லஸ்ஸன ஃபுளோரா ஆனது, SLIM வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள் 2012´ (SLIM Brand Excellence Awards 2012) நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர (SME) பிரிவின் கீழ் தங்க விருதினைப் பெற்று வெற்றிவாகை சூடிக்கொண்டது.

2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட லஸ்ஸன ஃபுளோரா நிறுவன ´பேஸ்புக்´ பக்கமானது இன்றுவரைக்கும் கிட்டத்தட்ட 130,000 இரசிகர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்துள்ளதுடன், சமூக வலைப்பின்னல் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இந்நிறுவனம் மேற்கொண்டுவரும் முன் முயற்சிகளை அடுத்த மட்டத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

உண்மையாகக் கூறினால், அது இன்னுமொரு படி முன்னோக்கிச் சென்று தமது இரசிகர்களுக்கு ஒரு கிரமமான அடிப்படையில் விஷேட பரிசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெகுமதியாக அளிக்கின்றது.

www.lassanaflora.com என்ற இணையத்தளத்தின் ஊடாகவும், அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான உடனடி தொடர்பிலக்கமான 0112 001122 ஊடாகவும், இந்த மனமகிழ்ச்சியைத் தரும் அனைத்து வெகுமதிகள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger