500 ஆண்டுகளாக
அழுகாத உடல்கள் மூன்று சிலி
நாட்டின் அருகே உள்ள லுலைலாக்கோ
மலையிலிருந்து 1999 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன.
அக்கால
இன்கா அரசவம்ச ஆட்சியின் போது,
மத வேண்டுதல் காரணமாக ஒரு வேலைக்காரி,
ஒரு இளம் பெண் மற்றும்
ஒரு சிறுவன் ஆகியோர் உயிரோடு
புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
22 ஆயிரம்
அடி உயர உறைபனி மலையில்
புதைக்கப்பட்டதால், இந்த உடல்களில் இன்னும்
இரத்தம் உறையாமல் இருக்கிறதாம். முகம், தோல், முடி,
இதயம், நுரையீரல் ஆகியவையும் இன்னும் சிதையாமல் இருக்கிறது.
ஆர்ஜென்டினாவில்
உள்ள சால்ட்டா நகர ஆய்வுக்கூடத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ள இந்த உடல்கள் 0 டிகிரி
வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment