பல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண் - Tamil News பல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » பல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்

பல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்

Written By Tamil News on Friday, March 8, 2013 | 4:33 AM


கேரளாவை சேர்ந்த வலசம்மா மாத்தாய் (49) என்ற பெண்ணை கடந்த 5 1/2 வருடங்களுக்கு அமெரிக்கா நியூயார்க்கை சேர்ந்த அன்னீ ஜார்ஜ் (40)என்ற பெண் விலைக்கு வாங்கியிருக்கிறார்.

பின்னர் தனது வீட்டிலேயே அடைத்து வைத்து ஒரு கைதியை போல வேலைவாங்கி வந்திருக்கிறார். மூடப்பட்ட வீட்டிற்குள்ளே தூங்க வைக்கப்பட்டிருக்கிறார். ஓய்வில்லாமல் தொடர்ந்து 18 மணி நேரம் வரை வேலையும் வாங்கி வந்திருக்கிறார்.


இந்நிலையில் மாத்தாயியின் மகன், தேசிய மனித விற்பனை வள மையம் உதவியை நாடியுள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதியப்பட்டு அங்கு விசாரணை நடந்து வருகிறது


இதுகுறித்து நடந்த விசாரணையில், அன்னீ ஜார்ஜ், வலசம்மா மாத்தாய் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்தவர் என்று எனக்கு தெரியாது. மேலும், 20,000 சதுர அடிகொண்ட எனது வீட்டில், 5 1/2 வருடங்களாக வேலை பார்த்துவரும், வலசம்மாவை நான் தொந்தரவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

 பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் சட்டவிரோதமாக பெண்ணை அடைத்து வைத்து வேலைபார்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் அன்னீஸ் ஜார்ஜுக்கு10 வருடம் வரை சிறையும், 2 50,000 டாலர் அபராதமும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger