March 2013 - Tamil News March 2013 - Tamil News
Headlines News :

Hottest List

உங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

Written By Tamil News on Wednesday, March 27, 2013 | 8:49 AM

ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளம் உள்ள இணைய முகவரி http://world-english.org முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.
நீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்டுமா?

Written By Tamil News on Tuesday, March 26, 2013 | 4:48 PMகணனி, கைபேசி என்று அனைத்து தொழில் நுட்ப சாதனங்கள் வழியாகவும் இணையதளம் பயன்படுத்தும் அனேகம் பேர் செல்லும் முதல்தளம் கூகுள் தான்.

நாம் தினம் பயன்படுத்தும் இந்த கூகுள் தேடுபொறியில் உங்களுக்குப்பிடித்த புகைப்படத்தை நிறுவலாம். இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலாவியை (Browser) பயன்படுத்தவேண்டும்.


இதனால் கூகுள் ஹோம் பேஜின் பின்புறத்திலுள்ள திரையை மாற்றி உங்களுக்குப் பிடித்தமான அழகிய படத்தை வைக்கமுடியும்.

முதலில் கூகுள் குரோம் நீட்சியை உங்களுடைய கணனியின் உலவியில்(Browser) நிறுவவேண்டும். இதை நிறுவ கூகுள் குரோம் நீட்சி பக்கத்திற்கு சென்று அதை இன்ஸ்டால் செய்யவும்

அறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்


இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவமானது Sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய வசதிகளை உள்ளடக்கிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
Sprint ZTE Quantum எனும் பெயருடன் அறிமுகமாகும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினைக் உள்ளடக்கியுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டாகவும் காணப்படுகின்றது.


மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொகபிக்சல் உடைய பிரான கமெரா, 0.9 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றது. இக்கைப்பேசியின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா?


இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும்.
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது.


தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டன், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம், மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.

இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஓக்ஸிஜனை உபயோகிப்பது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை.

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, , ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும் பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.

ஆனால் அவர்களில் பி6, பி12, ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பிவைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. வெண்டைக்காயும் ஞாபகசக்தி பெரிதும் பயன்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

மாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - சிறுவர் கதை

Written By Tamil News on Friday, March 8, 2013 | 8:17 AM


வழிகள் இரண்டு! முடிவு ஒன்று!
இரண்டு நரிகள் ஒரு கோழிப் பண்ணைக்குள் நுழைந்தன. அங்கே ஏராளமான கோழிகள் இருந்தன. இரண்டும் கோழிகளைக் கொன்று தின்னத் தொடங்கின.

! எவ்வளவு நல்ல வாய்ப்பு! நாம் எவ்வளவு கோழிகளைத் தின்ன முடியுமோ வயிறு முட்ட அவ்வளவையும் தின்றுவிட வேண்டும்என்றது ஒரு நரி.

நாளைக்கும் இங்கு வந்து தின்னலாம். சில கோழிகளை விட்டு விட்டுச் செல்வோம்என்றது இன்னொரு நரி.

ஒரு வாரத்திற்குப் போதுமானதைத் தின்னாமல் இங்கிருந்து போக மாட்டேன். மீண்டும் இங்கு வரும் போது நாம் காவல்காரர்களிடம் சிக்கிக்கொண்டால் என்ன செய்வதுஎன்ற அது, விருப்பம் போல வயிறு முட்ட உண்டது.

இன்னொரு நரியோ போதுமான அளவு உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டது.

வயிறு முட்ட உண்ட நரியோ தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தது. அப்படியே கீழே விழுந்து செத்தது.

இன்னொரு நரியோ மறு நாள் மீண்டும் அந்தக் கோழிப் பண்ணைக்குள் நுழைந்தது. எப்படியும் நரி வரும் என்று காத்திருந்த காவல்காரன் அதை அடித்துக் கொன்றான்.

ஒன்று அதிகம் உண்டதால் இறந்தது. இன்னொன்று பேராசையில் மாண்டது.

நன்னீர் வளம் அதிகரித்துள்ளது

உலகில் நன்னீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க வெவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து தேவையான அளவு உரமிடுதலாகும்.

மீன் குளத்தில் உணவு சுழற்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள் ஆகும். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகின்றன. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

தழைச் சத்து மனிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு தாமிரம், துத்தநாகம், மற்றும் மாங்கனீசு சத்துக்களே இவையாகும். மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனுக்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொறுத்தே குளத்தில் உள்ள மீன்களுக்கு இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கின்றன.

குளத்தில் மீன் உற்பத்திக்கு கார, அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன தாக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் கார அமிலத்தன்மை (7 மற்றும் அதற்கு மேல்) உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ள சத்துக்களை குறைத்துவிடும்.

பக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகின்றன. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5% க்கு குறைவாக இருக்கக் கூடாது 0.5 – 1.5% மற்றும் 1.5 – 2.5% நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5% க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.

கரிமம், நைட்ரஜன் விகிதம்

மண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம் நைட்ரஜன் விகிதம் தேவைப்படுகிறது. கரிமம், நைட்ரஜன் விகிதம் உடையும் அளவு அதிவேகமாக, நடுநிலை, குறைவாக இருக்க வேண்டும். பொதுவாக கரிமம்: நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15 க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.

மீன் குளங்களில் பொஸ்பேற் உரத்திற்கு சுப்பர் பொஸ்பேட்டை பயன்படுத்தலாம்.

இன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பொஸ்பேட் உரம் அளிக்க வேண்டும். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் ஆகிய இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள்.

குளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும். இதன் முலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம். குறைந்த உரங்களே தேவைப்படும்.

இயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும்போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.

பெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன?


பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:

நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.

எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.

இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.

Source : http://yarlosai.com

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger