இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்! - Tamil News இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்! - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்!

இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்!

Written By Tamil News on Saturday, February 2, 2013 | 4:42 PM


தங்களை ஓழித்துக் கட்டுவதற்காக மேர்வின் சில்வாவால் 35 இலட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
களனியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

தனிப்பட்ட விரோதத்துக்காக அனைத்து உறுப்பினர்களையும் கொலைசெய்யவேண்டிய அவசியமில்லை.

எனவே தெளிவாகப் புரிகிறது - மேவின் சில்வாவின் ஆலோசனைப்படி 35 இலட்சம் ரூபா பணத்துக்காக அனைவரையும் கொலை செய்யத் திட்டமிடப்பப்பட்டிருந்தது.

ஹசித மடவளவின் கொலைக்குப் பின்னர் இன்றுவரைக்கும் எந்தவொரு ஒன்று கூடலையோ பொதுக் கூட்டத்தையோ நாம் நடத்தவில்லை. அனைவரும் அச்சத்துடனேயே உள்ளார்கள்.

தனக்குத் தற்போது பாதுகாப்பு உள்ளதாவும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும் உரியவர் இன்னும் வெளியே இருப்பதாவும் அவரைக் கைது செய்யும் வரை எமது உயிருக்கு எந்நேரமும் அச்சுறுத்தல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைவரும் ஒருமித்து களனி பிரதேச சபையில் எப்போதும் சுதந்திரக் கட்சியின் கொடியைப் பறக்கவிட வேண்டும். அதற்காக மேர்வின் சில்வாவைத் தவிற ஏனைய எந்தவொரு அமைப்பாளருடனும் வேலை செய்ய நாம் தயார் என்று களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger