மின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம் - Tamil News மின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » மின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்

மின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்

Written By Tamil News on Saturday, February 23, 2013 | 6:46 PMஇயற்கையில் பல சக்திகள் உள்ளன. சூரியசக்தி, காற்றுச்சக்தி, அணுசக்தி, மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன.. அவற்றில் மிகப்பெரிய அளவால் பயன்படுவது மின்சக்தியாகும். மின்சாரம் அல்லது மின் சக்தியைக் கண்ணால் காண இயலாது. அதன் செயலைப் பார்க்க முடியும். மின்சாரம் மின் விளக்குகளில் பாய்ந்து ஒளியைத் தருகிறது. மின் விசிறிகளை இயக்கிக் காற்றை வீசுகிறது. மின் அடுப்புகளின் மூலம் சமைக்க உதவுகிறது. மின் இயந்திரங்களை இயக்கச் செய்கிறது. ஒலிப்பதிவு நாடா, ஒலி, ஒளி நாடா, வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பான், ஒளி நகல் கருவி, ஆகிய கருவிகளை இயக்க மின்சாரம் உதவுகிறது. போக்குவரத்துத் துறையில் தொடர் வண்டிகளை இயக்குகின்றது.

மருத்துவத் துறையில் நோயை கண்டறியவும், அறுவைச் சிகிச்சை செய்யவும் மின்சாரம் பயன்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவுகிறது. மின்சாரத்தை நீர், அனல், அணு, சூரிய ஒளி, காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சக்தியைக் கொண்டு அது நீர் மின்சாரம், அணு மின்சாரம் எனப் பெயரிடப்படுகின்றது. மின்சாரத்தை முதன் முதலில் கண்டு பிடித்தவர் கால்வின் ஆவார். மாணவர்களான வோல்டா, மைக்கேல் பாரமே ஆகியோரின் முயற்சியே மின்சாரத்தின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமாகும். மின்சாரத்தை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையேல் மின்சாரம் தாக்கி உயிர் இழக்க நேரிடும். மக்கள் உயர்வுக்கும், நாட்டு முன்னேற்றத்துக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger