உயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள் - Tamil News உயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » உயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள்

உயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள்

Written By Tamil News on Saturday, February 23, 2013 | 7:17 PMஇலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவிரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான புதிய சட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மருத்துவ துறை, பொறியியல் துறை, கணக்கியல்துறை, உள்ளிட்ட வேறு உயர்கல்வியில் மேலதி கமாக கல்வியைத் தொடருவதற்கு தேவையான பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொடுக்கவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

மனிதவள அபிவிருத்தி முதலீட்டு நிதிய சட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் தொடர்பாக சட்டவரைபு சட்டவரைஞர் திணைக்களத்திலிருந்து கிடைத்தவுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வியிணிதி, வியிணி, திவிவிதி மற்றும், இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளில் கல்வி கற்க மேலதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில், இக்கடன் வசதிகளின் ஊடாக கல்வியை தொடர முடியும்.

வர்த்தக வங்கிகளின் ஊடாக இக்கடன் வசதிகள் பெற்றுக் கொடுப்பதுடன் கடனை மீள செலுத்துவதற்கு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

உயர் கல்வியை முடித்தபின்னர் அவர் வெளிநாடு செல்வதாயின் கடனை மீளச் செலுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டும். வெளிநாடு செல்லாமல் இலங்கையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொண்டால் தொழில் வழங்குநர் அவரது கொடுப்பனவுகளிலிருந்து கடனை மீளச் செலுத்துவதற்குப் பொறுப்பேற்பவராக இருப்பாரென்றும் அமைச்சர் எஸ்.பி. தெரிவித்தார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger