இனிய தமிழில் இஸ்லாம் - கவிதை - Tamil News இனிய தமிழில் இஸ்லாம் - கவிதை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இனிய தமிழில் இஸ்லாம் - கவிதை

இனிய தமிழில் இஸ்லாம் - கவிதை

Written By Tamil News on Saturday, February 23, 2013 | 7:05 PM


இனிய தமிழில் இஸ்லாம்
வையத் துயிலெழுப்பு வைகறையில் கண்மலர்ந்து
துய்யோன் துதிபாடத் தூக்கமற - மெய்யகத்துச்
செய்ய செயற்கரிய செய்தொழிலும் சீர்பெருக
உய்ய உதவுமறை இஸ்லாம்

வல்லான் துணையும் வான்மறையும் வள்ளலருள்
நல்ல நிறை வாழவும் நயந்தூற - உள்ளளவும்
இல்லற மும்சிறக்க இகபரமும் ஈய்ந்தூற
எல்லாம் நிறைந்த மறை இஸ்லாம்

வள்ளலருள் மொழியால் வளம்பெருகி வையகமே
உள்ளளவும் அய்யம் அருகிடவே - எள்ளளவும்
கள்ளம் கபடமற கற்பனைகள் மறைந்தாங்கே
தெள்ளத் தெளிவருளும் இஸ்லாம்

எட்டுத் திசையும் இறையருளின் புகழ்பாட
திட்டமுடன் நல்லாட்சி சீர்பெறவே - நட்டமிலா
இட்டவரும் இடாதவரும் இதயம் கனிந்துருக
கொட்டியருளும் மறை இஸ்லாம்

ஆதிமுதல் நாதர் ஆதமுட னேவாள்
சோதிவளர் மதியாம் தூதர்நபி - மேதினியில்
நீதிநிறை அறமும் நித்தியமாம் நெடுவாழ்வும்
ஓதி உயர்ந்த மறை இஸ்லாம்

சுத்தம் சுகம் காண நித்தம் துதிபாட
சித்தம் செயல் வலிமை சீருறவே - உத்தமமாய்
தத்தம் தலைநிமிர்ந்து தார்மீகம் தழைத்தோங்க
புத்தம் புதுமறையாம் இஸ்லாம்

-. சீ. எம். இப்றாஹீம்
கிண்ணியா - 04.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger