நீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடியுமா? - Tamil News நீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடியுமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » நீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடியுமா?

நீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடியுமா?

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 5:28 AMபுதிய பரிசோதனையின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முறையை பயன்படுத்துவதன் ஊடாக மனித உடலில் இரத்தம் எடுத்து அதனை பரிசோதிக்க வேண்டிய தேவையில்லை.

நாளாந்தம் நாம் உண்ணும் உணவிலுள்ள குளுகோஸை கிரகித்து உடலின் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது இன்சுலின். இந்த இன்சுலின் குறைவாக இருந்தால் குளுகோஸ் சத்து முழுவதும் உறிஞ்சப்படாமல் போய்விடுகிறது. அதிகமாகச் சுரந்தால் அளவுக்கு அதிகமாக குளுகோஸ் சத்து உறிஞ்சப்பட்டு சட்டென உடலில் குளுகோஸ் அளவு குறைந்துவிடும்.

சிலர் நீரிழிவு நோய்க்காக பையில் எப்போதும் மாத்திரைகள் அல்லது ஊசி வைத்திருப்பார்கள். சிலர் சர்க்கரை நோய்க்கு மருந்தாக இனிப்பை வைத்திருப்பார்கள்.

இந்த நோயாளிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை மருத்துவப் பரிசோதனைகள் தான். அடிக்கடி கையில் ஊசி குத்தி இரத்தம் எடுத்தே அவர்கள் அலுத்துப் போய் விடுவார்கள்.

இந்த அவஸ்தையை காலம் முழுவதும் பல்லைக்கடித்துக் கொண்டு சமாளிக்க வேண்டுமே எனும் கவலை அவர்களுக்கு உண்டு.

அப்படிப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதலளிக்கும் செய்தி வந்துள்ளது. தற்போது ஒரு புதிய கருவி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது ஒரு அரிசியின் பாதியளவே உள்ள கருவி. இந்தக் கருவியை கண்ணின் ஓரத்தில் வைத்துவிட வேண்டும். இந்த கருவி புற ஊதாக் கதிர்களை வெளியிடக் கூடிய கருவி. அதாவது உடலில் குளுக்கோஸ்அளவு அதிகரித்தால் இந்த கருவியிலிருந்து வெளிவரும் கதிர்கள் அதிகமாக இருக்கும்.

இந்த வெளிச்சத்தை சாதாரண கண்களால் பார்க்க முடியாது. அதன் அளவை அறிய ஒரு சிறு தீப்பெட்டி அளவே உள்ள ஒரு சிறு கருவியை (புளூரோ போட்டோ மீட்டர்) கண்ணின் முன்னால் ஒரு இருபது வினாடிகள் காட்ட வேண்டும். அவ்வளவு தான், சோதனை முடிந்தது. அந்த சிறு கருவி சொல்லிவிடும் உங்கள் உடலிலுள்ள சீனியின் அளவை. அதாவது கண்ணில் ஒரு சிறு கருவி.... அதிலிருந்து வெளிவரும் கதிர்களை ஆராய ஒரு சிறு கருவி. அவ்வளவு தான்.

எத்தனை முறை வேண்டுமானாலும் உடலிலுள்ள சீனியின் அளவைச் சோதித்துக் கொள்ளலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியதும் இல்லை. ஊசி குத்தும் அவஸ்தையும் இல்லை.

இந்தக் கருவியின் வரவு பல்வேறு நாடுகளிலுமுள்ள மருத்துவர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஐசென்ஸ் எனும் ஜெர்மன்நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த கருவி மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ஜெம்மா எட்வர்ட்ஸ் எனும் மருத்துவர் இது குறித்து விளக்குகையில், இங்கிலாந்தில் உள்ள சுமார் இருபத்தைந்து இலட்சம் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல வரப்பிரசாதம் என்றார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger