எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு - Tamil News எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு

எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு

Written By Tamil News on Friday, January 11, 2013 | 5:39 AMஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு
எகிப்து புதிய அரசியலமைப்பின் ஒரு சில பகுதியை மக்கள் விவாதத்திற்காக அரசியல் அமைப்புக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. எனினும் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டு ள்ளன.

எகிப்து மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்து அரசியல் அமைப்பு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சிமாற் றத்தின் முக்கிய அங்கமான புதிய அரசியல் அமை ப்பு 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவினால் வரையப்பட்டு வருகிறது.

 இந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதி நேற்று முன்தினம் அரசியல் அமைப்புக் குழுவின் தலைவர் மொஹமட் அல்பெல்டஜி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு முன் வெளியிட்டார். மக்களின் கருத்துகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே இந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதி வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து எகிப்திய ர்களும் வெளியிடப் பட்டுள்ள அரசியல மைப்பின் பிரதியை பெற்று, இந்தக் கட்டுரை சரி, இது தவறு, இது நன்றாக இருக்கும் என்று கனித்துக் கொள்ளுங்கள்என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த பெல்டஜி குறிப்பிட்டார். இதில் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஆட்சியை நடத்திவந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி இரு தவணைக்காலங்களே ஆட்சி செய்ய முடியும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 அதேபோன்று பிரதமர் பாராளுமன் றத்தின் பெரும்பான்மை ஆதரவுடனேயே தேர்வுசெய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் எகிப்தின் முக்கிய நிறுவனமான இராணுவத்தின் அதிகாரங்கள் குறித்து வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இதில் பிராந்திய நிர்வாக அதிகாரம், பொது ஒழுங்கு, இராணுத்தின் அதிகாரங்கள் குறித்த அத்தியாயங்கள் இன்னும் ஒருவாரத்தில் வரையப்படவுள்ளதாக எகிப்து அரச ஊடகமான மனா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் ஷரத்து 5 சித்திரவதைகளை தடைசெய்ய தவறியுள்ளதோடு, ஷரத்து 36 ஆண், பெண் சம உரிமைக்கு அச்சுறுத்தல் என்றும், ஷரத்து 9 கருத்துச் சுதந்திரத்தை உறுதிப் படுத்தவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான தலைவர் நிதிம் ஹரூன் விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவில் இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம் செலுத்திவருவதாக மிதவாதிகள் மற்றும் மதசார்பற்றோர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எகிப்து புதிய அரசியல் அமைப்பு வரைபு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதோடு இதன் அனைத்து கட்டுரைகளும் அரசியல் அமைப்பு குழுவின் குறைந்தது 57 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவேண்டும்.

இதனைத் தொடர்ந்து இது மக்கள் கருத்த கணிப்புக்கு விடப்படும்.

எனினும் 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழு சட்ட ரீதியானதா என்பது குறித்து நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger