புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை தினகரனில் பிரசுரிக்க வேண்டுமா? - Tamil News புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை தினகரனில் பிரசுரிக்க வேண்டுமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை தினகரனில் பிரசுரிக்க வேண்டுமா?

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை தினகரனில் பிரசுரிக்க வேண்டுமா?

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 3:41 AM


புலமைப் பரிசில் பெறுபேறுகள் இம்முறை வண்ணப்புகைப்படத்துடன்
தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர், விபரங்களை புகைப்படத்துடன் இவ்வருடமும் தினகரனில் பிரசுரிக்கப் போகிறோமென்ற மகிழ்ச்சியான செய்தியை மாணவர்களுக்குத் தெரிவிப்பதில் பெருமையடைகிறோம்.

கடந்த வருடங்கள் போலன்றி இம்முறை மாணவரின் பெறுபேறு விபரங்களை வண்ணப் புகைப்படத்துடன் தினகரனில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இச்செய்தியானது இரட்டிப்பு மகிழ்ச்சி தருமென்பதில் சந்தேகமில்லை.

மாணவர் விபரம் தனித்தனியாக அனுப்பப்படலாகாது. குறித்த பாடசாலையில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களினதும் பெயர் விபரங்கள் புகைப்படத்துடன் ஒன்றாக எமக்கு அனுப்பப்பட வேண்டும்.

அதிபரின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதம் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். மாணவர்களின் புகைப்படங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் அம்மாணவரின் பெயர் எழுதப்படுவது முக்கியம். இப்பிரசுரம் இலவசமானது, எவருக்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

புகைப்படங்கள் மற்றும் விபரங்களைத் தயார் செய்து எமக்கு நேரில் அனுப்பி வைக்கலாம். இல்லையேல் எமது பிரதேச நிருபர் ஊடாகவும் அனுப்பி வைக்க முடியும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில்தரம் – 5 புலமைப் பரிசில் பெறுவேறுஎனக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Chief Editor, Thinakaran, Lake House, P.O. Box : 245, Colombo – 10.

நன்றி  தினகரன்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger