கொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்தேகம்! - Tamil News கொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்தேகம்! - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்தேகம்!

கொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்தேகம்!

Written By Tamil News on Friday, January 4, 2013 | 1:47 AM


கொழும்பில் உள்ள சிங்களவர்களின் மொத்த வீதம் 36.8 என இலங்கை புள்ளிவிபரத்திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பு நகரில் வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள், சிங்களவர்கள் என்ற போதிலும் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே தற்போது வசிப்பதாக வெளியான செய்திகளை தாம் மறுத்துள்ளதாக இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் முன்னர் சிங்களவர்களின் வீதம் 24 எனக் கூறப்பட்டதில் உண்மையில்லை. எனினும் 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் கணக்கெடுப்பிற்கு அமைய கொழும்பில் 36. 8 வீதமான சிங்களவர்களும், இலங்கை, இந்திய தமிழர்கள் என 31.8 வீதமானவர்களும், 29 வீதமானவர்கள் முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர்.

கொழும்பு நகரம் என்பது , கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.இதேவேளை கொழும்பில் வாழும் மக்களில் 24 வீதமான சிங்களவர்களும், 33 வீதமான தமிழர்களும், 40 வீதமான முஸ்லிம்களும் வசித்து வருவதாக முன்னர் தவறான செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அது 1971 ஆம் மற்றும் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அமைவாக வெளியிடப்பட்ட தகவல் என்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- தகவல் உதயன்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger