உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ஆணைக்குழு நியமனம் - Tamil News உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ஆணைக்குழு நியமனம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ஆணைக்குழு நியமனம்

உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ஆணைக்குழு நியமனம்

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 3:40 PMஇலங்கையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்த வகையில் நிர்வாக ரீதியாக பல்வேறு செயற்பாடுகளை விஷ்தரிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை எல்லோருக்குமுள்ளது. இந்த வகையில் இலங்கை அரசாங்கம் தனது நிர்வாக கட்டமைப்பு எல்லை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன.

மேலும், உள்ளுராட்சி மன்ற எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான அறிக்கை 27.12.2012 இல்  வெளியான விடிவெள்ளி பத்திரிகையில் வெளிவந்துள்ளது. நாட்டிலுள்ள  பிரதேசத்தின் முக்கிய பிரச்சினையாகவுள்ள எல்லை நிர்ணயம் இதனூடாக தீர்க்கப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இதற்கு அரச அரசசார்பற்ற சமூக சேவை அமைப்புக்கள், நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து அறிக்கை தயாரித்து எதிர்வரும் 31.01.2013ம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும் என  அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

எதிர்வரும் தேர்தல்களில் விருப்புவாக்கு முறை நீக்கப்பட்டு தேர்தல் தொகுதிமுறை உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார முறைமையும் விகிதாசார முறையும் கலந்த முறையை அமுல்ப்படுத்த அரசு தீர்மாணித்து இது தொடர்பாக பாராளுமன்றத்தில் திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது இச்சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்ய தேசிய மாவட்ட ஆணைக்குழுக்களை மாகாண உள்ளுராட்சி அமைச்சு நியமித்துள்ளது.

இவ்ஆணைக்குழு பின்வரும் விடயங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும்.

1. தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாநகர, நகர, பிரதேச சபைகளை வட்டாரங்கள் ரீதியாக பிரித்தல்.
2. குறித்த வட்டாரங்களின் எல்லைகளை தெளிவாக குறித்து நிர்ணயம் செய்தல்

3. மேற்குறித்த விடயம் தொடர்பாக தனிநபர்கள் மக்கள் பிரதிநிதிகள், அரச சார் அமைப்புக்கள் மூலமாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல்

4. குறித்த வட்டாரங்களுக்கு இலக்கம் மற்றும் பெயர்கள் இடல்.

தேசிய மட்ட ஆணைக்குழுவின் தலைவராக ஐயலத் ஆர் வி திசானாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய அங்கத்தவர்களாக பி.எச்..பிரேமசிர, விமல் ரூபசிங்க, .எம் நஹியா, தேவராஐ, ஆதவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

மாவட்ட குழுவில் மாவட்ட செயலாளர் தலைவராக செயற்படுவார். ஏனைய அங்கத்தவர்களாக தேர்தல் திணைக்கள பிரதிதிநிதி மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் நியமிக்கப்படும் பிரதிநிதி. நில அளவைத்திணைக்கள பிரதிநிதி, குடிசன மதிப்பீட்டுத்திணைக்கள பிரதிநிதி, மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் நியமிக்கப்படும் அரச ஊழியர் ஆகியோர் நியமிக்கப்படுவர்.

அறிக்கைகள் 31.01.2013 இற்கு முன் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அல்லது செயலாளர், உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழு, இல.51, கெப்பிட்டிபொல மாவத்தை, கொழும்பு-05 எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும் அனுப்பி வைக்கப்படும் அறிக்கைகளில் சனத்தொகை, குடிப்பரம்பல், இனவிகிதாசாரம், புவியியற் காரணிகள், பௌதீக காரணிகள் , பொருளாதார விருத்தி என்பன கவனத்திற்கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

எமது சமூகம் இது தொடர்பாக கவனத்திற்கொண்டு சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அறிக்கைகளை தயாரித்து முழுமைபெற்ற அறிக்கைகளாக அனுப்பி வைப்பது சாலச் சிறந்தது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger