ஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ லங்கா - Tamil News ஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ லங்கா - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ லங்கா

ஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ லங்கா

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 3:34 AM

கொழும்பில் நடைபெற்ற இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் வழங்கல் நிகழ்வின் போது எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களான எக்ஸ்போ லங்கா பிரைவேற் லிமிடெட், எக்ஸ்போ லங்கா ஃபிரயிட் (ரிபிழி) மற்றும் ஹெலோகோர்ப் பிரைவேற் லிமிடெட் போன்றன, 2011 ஆம் ஆண்டுக்காக 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் சிறப்பு விருதையும் வென்றிருந்தன.

ஏற்றுமதி துறையில் முன்னோடியாக திகழும் எக்ஸ்போ லங்கா லிமிடெட் நிறுவனம், இலங்கையின் முதல்தர பழ வகைகள், மரக்கறிகள் போன்றவற்றை 1978 ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம், பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய தெங்கு சார் உற்பத்திகளுக்கான மிகப்பெரும் பிரிவில் தங்க விருதையும், பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய பொருட்களின் அதிசிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்க விருதையும் வென்றிருந்தது.

எக்ஸ்போலங்கா பிரைவேற் லிமிடெட் நிறுவனம், மத்திய கிழக்கு, மத்தியதரைக் கடல் நாடுகள், ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பை கொண்டுள்ளது. அத்துடன், கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இது போன்ற உற்பத்திகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது.

இந்த விருதுகள் குறித்து எக்ஸ்போலங்கா லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அன்னாம் கருத்து தெரிவிக்கையில், “நாம் இந்த விருதுகளை பெற்றுக்கொள்வதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். உள்நாட்டு உற்பத்தி துறைகளை அபிவிருத்தி செய்து, எமது தயாரிப்புகளை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் எமது நாட்டின் பெருமையையும் உலகளாவிய ரீதியில் பரவச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த விருதுகள் எமது அர்ப்பணிப்பான நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளனஎன்றார்.

மிகப்பெரிய சேவை வழங்குநர் பிரிவில் எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (ரிபிழி) நிறுவனம் வெள்ளி விருதை வென்றிருந்தது. இவ்வாண்டு, இந்த பிரிவில் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட ஒரே கம்பனியாக எக்ஸ்போலங்கா ஃபிரயிட் நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெண்கல விருதை எக்ஸ்போலங்கா ஃபிரயிட் நிறுவனம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட எக்ஸ்போலங்கா ஃபிரயிட் நிறுவனம், ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் திகழும் பிரபல்யம் பெற்ற யிதிஹிதி முகவராக திகழ்கிறது. இந்நிறுவனம் 1200க்கும் அதிகமான ஊழியர்கள் 16 நாடுகளைச் சேர்ந்த 45 நகரங்களில் கொண்டு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருது குறித்து எக்ஸ்போலங்கா ஃபிரயிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜகத் பத்திரன கருத்துத் தெரிவிக்கையில்: “சரக்கு மற்றும் பொருட்கள் போக்குவரத்து துறையில் எளிமையான எமது ஆரம்பத்தை தொடர்ந்து, இன்று உலகளாவிய ரீதியில் சுமார் 16 நாடுகளில் எமது சேவைகள் வழங்கப்படுகின்றமை குறித்து நாம் பெருமையடைகிறோம்.

எனவே எமது ஏற்றுமதி சேவைகளை வெளிநாடுகளுக்கு வழங்கி பெறுமதியான அந்நியச் செலாவணியை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நிறுவனமாக நாம் திகழ்கின்றமை பெருமையாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த துறையில் எமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்த பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்என்றார்.

ஹெலோகோர்ப் பிரைவேற் லிமிடெட் நிறுவனம், இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியை பெற்ற முதலாவது வர்த்தக வெளிக்கள செயற்பாடுகளை (கிஜிலி) மேற்கொள்ளும் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை கெளரவிக்கும் வகையில், சிறியளவிலான வர்த்தக மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு விருது வழங்கப்பட்டிருந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம் ஸ்ரீலங்கன் விமான சேவையின் சர்வதேச தொடர்பாடல் நிலையத்தின் செயற்பாடுகளை கையாள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹெலோகோர்ப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி ரவீந்திரன் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் செயற்படும் முன்னணி வர்த்தக வெளிக்கள செயற்பாடுகளை (கிஜிலி) மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஒன்றாக நாம் இந்த விருதை வென்றுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் விருதை பெற்றுள்ளமையானது, எதிர்வரும் காலங்களில் எம்மை உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும்என்றார்.

எக்ஸ்போலங்கா (பிரைவேற்) லிமிடெட் நிறுவனம் ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் மிகப்பெரிய பிரிவில் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய பொருட்களுக்கான தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளன தங்க விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனம் சிறந்த அர்ப்பணிப்புடைய ஏற்றுமதி நிறுவனம் எனும் மதிப்பையும் பெற்றுள்ளது.

விசேடமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகள், மூலோபாய அடைவு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றை கொண்டமைந்த போக்குவரத்து சார் தீர்வுகள் போன்றன, எக்ஸ்போ லங்கா ஃபிரயிட் நிறுவனத்தை பிராந்தியத்தின் மிகப்பெரிய ஆகாய மார்க்க மற்றும் கடல் மார்க்க சரக்கு போக்குவரத்து நிறுவனமாக திகழச் செய்துள்ளன. விரைவில் பழுதடையும் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், தொலைத்தொடர்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள், சரக்குத்திட்டம், இயந்திரங்கள் மற்றும் மருந்துகள் போக்குவரத்தை உடனுக்குடன் கையாளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஆடைத்தொழில்துறை மற்றும் அழகுசாதனப் பொருட்களின் போக்குவரத்து நிபுணராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி நிறுவனத்தை பற்றி:

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. 1978 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்பதுடன், சரக்கு மற்றும் பொருட்கள் போக்குவரத்து, சர்வதேச வியாபாரம் மற்றும் உற்பத்தி, பிரயாணம் மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் ஷி>லீடுகள் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் தனது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எக்ஸ்போலங்கா குழுமம் சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த 45 நகரங்களில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நன்றி  தினகரன்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger