41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங்கா அறியப்படுத்தியுள்ளது. - Tamil News 41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங்கா அறியப்படுத்தியுள்ளது. - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » 41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங்கா அறியப்படுத்தியுள்ளது.

41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங்கா அறியப்படுத்தியுள்ளது.

Written By Tamil News on Friday, January 11, 2013 | 5:56 AM


எயார்டெல் லங்கா அறிமுகப்படுத்தும் 41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன்
செலுத்திய பணத்தை மீளப்பெறும்கிளிக் செய்யுங்கள் வெல்லுங்கள்என்ற போட்டி: மூன்று வாடிக்கையா ளர்களுக்கு தலா ஒவ்வொரு  Nokia 808 Pure View ஸ்மார்ட்போனை வெல்லக்கூடிய வாய்ப்பு

ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் 20 நாடுகளில் இயங்கி வரும் உலகின் முன்னணி தொலைத்தொடர்பாடல் கம்பனியான பார்த்தி எயார்டெல் 41 MP sensor உடன் கூடிய புதிய Nokia 808 Pure View ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது. Carl Zeiss வில்லைகள், Dolby வசதியுடனான ஹெட்போன்கள், Dolby Digital Plus தொழில்நுட்பம் போன்றவை உள்ளங்கியிருக்கின்றன. இதன் அறிமுகத்தோடு விசேட போட்டியும் நடத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள எயார்டெல் விற்பனை நிலையம் அல்லது அங்கீகாரம் பெற்ற Softlogic விநியோகத்தரிடம் இருந்து புதிய ஸ்மார்ட் போனை கொள்வனவு செய்யும் சகல Airtel Lanka வாடிக்கையாளர்களும் போட்டியில் பங்கேற்கலாம்.

இடமிருந்து வலமாக பார்த்தி எயார்டெல் லங்காவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ஷரன் ஷெட்டி, Airtel Lanka வின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சுரேன் குணவர்த்தன Softlogic Communications நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுஜீவ கருணாசேகர, Bharti Airtel இன் வாடிக்கையாளர் வர்த்தகத் தலைவர் கே. ஸ்ரீனிவாஸ், நொக்கியாவின் இலங்கைக்கான வர்த்தக முகாமையாளர் iஷ் கோலி Softlogic Communications இன் விற்பனைப் பொது முகாமையாளர் ரஜீவ் குணரட்ன ஆகியோரை காண்க.

இதன் கீழ் Airtel Lanka நிறுவனமானது, ஸ்மார்ட் போனுடன் இலவச குரல், SMS தரவுகள் ஆகியவை அடங்கிய விசேட முன்/பின் கொடுப்பனவுத் தொடர்புடன் கூடிய பொதியையும் வழங்கும். இந்தப் பொதியைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் இயல்பாகவே போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதன் மூலம், கையடக்கத் தொலைபேசி கொள்வனவுக் கட்டணம் முற்றாக நீக்கப்படும்.

இந்தப் போட்டியின் பெயர்கிளிக் செய்யுங்கள், வெல்லுங்கள்என்பதாகும். இதில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் 2012 ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் புதிய  Nokia 808 Pure View ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு ஸ்தலத்தையோ, காட்சியையோ படம்பிடித்து, அந்தப் படத்தை Airtel Lanka வின் Facebook பக்கத்தில் தரவேற்ற வேண்டும். ஒரு புகைப்பட நிபுணர் சிறந்த மூன்று புகைப்படங்களைத் தெரிவு செய்வார். வெற்றியாளர்கள்  Nokia 808 Pure View ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்வதற்கு செலுத்திய பணத்தை மீளப் பெறுவார்கள்.

Airtel Lanka வின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சுரேன் குணவர்த்தன கருத்து வெளியிடுகையில், “Airtel Lanka நிறுவனத்தைச் சேர்ந்த நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு பிந்திய தொழில்நுட்பம், உற்பத்திகள், சேவைகள் போன்றவற்றையும் அதன் பின்புலத்தில் மிகச் சிறந்த விற்பனைக்குப் பிந்திய சேவைகளையும், நாடெங்கிலும் உள்ள கிளைகளில் மூலம் பரந்த வாடிக்கையாளர் சேவைகளையும் வழங்கி தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த முனைகிறோம்என்றார். “தற்போதைய தருணத்தில் நாம் வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேற்றகரமான ஸ்மார்ட்போனை வழங்குவது மாத்திரமன்றி, மிகவும் எளிமையான போட்டியொன்றின் மூலம் இந்தக் கையடக்கத் தொலைபேசிகளை இலவசமாகப் பெறக்கூடிய வாய்ப்பை மூன்று அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.”

இலங்கைக்கான நொக்கியா வர்த்தக முகாமையாளர் iஸ் கோலி கருத்து வெளியிடுகையில், Airtel Lanka வுடன் சேர்ந்து புதிய உற்பத்தியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்என்றார். “இந்த முக்கியமான கைகோர்பின் மூலம் நாம் முதற் தடவையாக ஸ்மார்ட்போன் சந்தையில் கால்பதிக்கிறோம். Airtel Lanka உடன் கைகோர்ப்பதில் பெருமையடைகிறோம். நொக்கியாவின் புகைப்படக் கருவி வசதிகள் சகலரும் அறிந்தவை. இந்தத் துறையின் புதுமைகளை உள்ளடக்கியதாக  Nokia 808 Pure View முன்னிலையில் திகழ்கிறது. இந்தக் கருவி நொக்கியாவின் உயர்மட்ட ஸ்மார்ட் போன் புகைப்பட அனுபவங்களை பிரதிபலிப்பதாகவும், Dolby இன் ஒலியூடாக அனுபவங்களுடன் கரம் கோர்த்ததாகவும் இருப்பதால் இது மொபைல் தொழில்நுட்பத்தில் புதிய நியமங்களைப் பதிவு செய்த கருவியாகக் காணப்படுகிறது. இந்த ஸ்மாட் போனை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.”

499 ரூபா ஸ்மார்ட் போன் பிற்கொடுப்பனவுத் திட்டமானது மாதமொன்றிற்கு எயர்டெல்லில் இருந்து எயார்டெல்லுக்கு 75 நிமிடங்கள் எயர்டெல்லில் இருந்து ஏனைய தொலைபேசிகளுக்கு 75 நிமிடங்கள்,100 SMS குறுந்தகவல்கள், 2 மிகி தரவுகள் போன்றவை ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். முற்கொடுப்பனவுத் திட்டமானது, மாதந்தோறும் எயார்டெல்லில் இருந்து எயார்டெல்லிற்கு 1000 SMS குறுந்தகவல்கள், எந்தவொரு வலைப்பின்னலுக்கும் 100 ரூபா பெறுமதியான அழைப்புகள், 2 GB தரவுகள் ஆகியவை இலவசமாகும். இந்த வசதிகளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் மாதந்தோறும் 500 ரூபாவிற்கு ரீ-சார்ஜ் செய்ய வேண்டும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger