January 2013 - Tamil News January 2013 - Tamil News
Headlines News :

Hottest List

396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்

Written By Tamil News on Thursday, January 24, 2013 | 10:02 PM


எங்களை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரமாண்டமான கப்பல் ஒன்று அதிகமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு பிரிட்டனை நோக்கி உலகின் மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்துகொண்டிருக்கின்றது. இந்த சரக்கு கப்பலின் பெயர் Marco Polo என்பது ஆகும். இந்த சரக்கு கப்பல், உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380ஐவிட ஐந்து மடங்கு பெரியது. ஒரு பெரிய கால்பந்து மைதானத்தை விட நான்கு மடங்கு பெரியது. சுனாமி போன்ற மிகப்பெரிய அலைகளையும் தாங்கக்கூடிய சக்தியை உடைய இந்த கப்பலில், 16,000 கண்டெய்னர்களை சுமந்து செல்லும்.



இந்தக் கப்பல் 396 மீட்டர் நீளமுடைய இந்த கப்பல், பிரிட்டன் மக்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று, லண்டன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. பிரிட்டனுக்கு தேவையான பொருட்களை இறக்கி முடித்தவுடன், அடுத்த இந்த பிரமாண்டமான கப்பல் ஜெர்மனியை நோக்கி செல்ல இருக்கின்றது.



ராட்சத  கப்பலை உருவாக்கிய CMA CGM Group நிறுவனத்தின் vice-president of Asia-Europe Lines, Nicolas Sartini, அவர்கள் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, இந்த மிகப்பெரிய கப்பலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் எங்கள் நிறுவனம் பெருமைப்படுகிறது என்று கூறினார்.

மலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்!


உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்களில் இந்தப் பிரச்சினை பாரிய குடும்பப்பிரச்சினையாகக் காணப்படுகின்றது.  இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற,  வமதிக்கிறசின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல்  பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்!

நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.

நீங்கள் அணிகிற உடைக்கும், உங்கள் கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? ‘கூபகப் பகுதிஎனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற  நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும்.

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும். மழலையை ‘செல்வம்’ என்றுதான் சொல்கிறோம். மெனக்கெடாமல் எந்தச் செல்வமும் சும்மா வந்துவிடுமா? மெனக்கெட்டுத்தான் பாருங்களேன்!

வுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா?


                                                 
இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் Rs.120.00 இல் இருந்து Rs.40.00 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி Rs.180.00 என்று விலையை உயர்த்தி , பிறகு  Rs.120.00 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரைஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger