ஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன் விருது - Tamil News ஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன் விருது - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன் விருது

ஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன் விருது

Written By Tamil News on Saturday, December 8, 2012 | 10:34 PM


உலக இணைய பாதுகாப்புப் போட்டியில் ஆசிய பசுபிக் சம்பியன் விருதினை இலங்கை குழு பெற்றுள்ளது. 'வைற் ஹற்' என்னும் பெயரைக் கொண்ட இலங்கை குழுவுக்கே இம்மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இக்குழு இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் அமுலாக்கல் நிறுவன மாக தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் நேரடி உத்திகளின் கீழ் பயிற்றுவிக்கப்பட்டது. தகவல் தொடர்பாடல் மற்றும் பாதுகாப்புத் துறையில் இத்தகைய பிராந்திய மட்ட விருது கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும். இலங்கையின் கணனிப் பாதுகாப்புத் துறை சார்ந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக இவ்வெற்றி அமைந்திருக்கிறது.
 இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி விஷான் தேவபுர.
 'வைட் ஹெட்' குழு குலோபல்லிம்பிக்ஸின் கடினமான மூன்றாம் சுற்றின் போது தாங்கள் நன்று சம்பாதித்த ஒரு ஆய்வை அனுபவிக்கிறது.
இலங்கை ஆசிய பசிபிக் சாம் பியனாக தெரிவு செய்யப்பட்டு உலக இறுதிப் போட்டியில் போட் டியிடும் தகைமையைப் பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரொஷான் தேவபுர, இத் தகைய உயர்மட்ட வெற்றி தகவல் தொடர்பாடல் துறையிலும் இல ங்கையின் பெயரை முன்னிறுத்தியுள்ளது என்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இறுதியாக இடம்பெறவுள்ள உலக அளவிலான போட்டியில் இலங்கைக்கு ஒரு கவனத்துக்குரிய வெற்றியை ஈட்டுமென நான் நம்புகிறேன். நாட்டினுள் கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டில் ஒரு பெரும் விழிப்பினை இவ்வெற்றி ஏற்படுத்தும் என்றார்.

தகவல் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு என்பன இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அவதானத்தைப் பெற்றுவரும் துறைகளாகும். தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு பற்றி அரசாங்கம் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அதிகரித்துவரும் கணனிப் பாவனை மற்றும் தொலைபேசிப் பாவனை என்பனவற்றுக்குள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதை கருத்திற்கொண்டே இத்தகைய குழுவொன்றினை இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் பயிற்றுவித்துவந்தது.

கணனி பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்கும் ஆற்றல் மிக்க குழுவொன்று இலங்கையில் உள்ளது என்பதையே இவ்வெறி உறுதிப்படுத்துகின்றது. அதிகரித்து வரும் தொலைபேசி மற்றும் கணனி மையக் கொடுக்கல்வாங்கல், கல்வி சமூகம் தொடர்பாடல் என்பனவற்றின் போது பரிமாறப்படும் தகவல்களை பாதுகாப்பது ஆகியவை பெரும் சவாலாகவே இருந்தன. குறிப்பாக கணனி மையக் கொடுக்கல் வாங்கல்களின் பாதுகாப்பை பேணுவது முக்கிய தேவையாக இருந்துவந்தது. தகவல் புலன்வாய்வு, கணனி மையக் குற்றவியல் மற்றும் இணையத்தளத்தை மையமாகக் கொண்டு இடம்பெறும் மாறாட்டங்கள் என்பனவற்றை கண்காணிக்க அரசாங்கம் தகவல் தொடர்பாடல் முகவர் நிலையத்தின் கீழ் தனியானதொரு பிரிவையே ஆரம்பித்தது. இத்தகைய பின்னணியில் இலங்கைக் குழுவுக்குக் கிடைத்துள்ள வெற்றி காலகட்டத்தின் முக்கிய தேவையாகும்.

ஆசிய பசுபிக் இணையப் பாதுகாப்புப் போட்டிகள் மூன்று சுற்றுக்களாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்றன. இத்தகைய பூர்வ இறுதிப் போட்டிகள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் ஆகிய பகதிகளிலும் நடத்தப்படுவதுண்டு.

இலங்கையணி பெற்றுக்கொண்ட வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா பிராந்தியத்தில் இடம்பெறவுள்ள உலக இறுதிப் போட்டியில் போட்டியிட இலங்கைக் குழு தகுதிபெற்றுள்ளது. இதற்காக இலங்கை அணி மியாமி நகரத்துக்கு விஜயம் செய்யும்.
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் ஓர் உப நிறுவனமாகிய இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைத்தல் மையம் 'குலோபல் சைபர்ரிம்பிக்ஸ்' தொடர்பாக உள்நாட்டு தகவல் பாதுகாப்பு திறமைகளை அடையாளங்காணுவதில் ஈடுபட்டது. அத்துடன் போட்டியில் பங்குபற்றுவதற்காக 'வைட் ஹெற்' என்னும் குழுவைத் தெரிந்தெடுத்தது.

'குலோபல் பைர்லிம்பிக்ஸ்' போட்டியிடும் 'வைட் ஹெற்' என்னும் இலங்கை குழுவிற்கு இலங்கை தொகைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அனுசரணை வழங்குகிறது. மேலும் அந்த ஆணைக்குழு குலோபர் லிம்பிக்ஸில் பங்குபற்றுவதற்குத் தேவையான இணைப்பு உட்கட்டமைப்பை வழங்கி இலங்கை குழுவின் வெற்றிக்கு வெகுவாகப் பங்களித்தது.

இலங்கைக்கு முதற் தடவையாக இவ்வாறான மதிப்பினை கொணர்ந்த இப் போட்டியின் உறுப்பினர்களின் அரிய பள்ளிப்பைப் பற்றி கருத்துத் தெரிவித்த இலங்கை கணனி அவசர தயார் நிலை குழு இலங்கைக் குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியது.

இறுதிப் போட்டிக்காக வாய்ப்புக் கிடைக்க முன்னர் நடந்த மூன்று போட்டிகளும் மிகவும் கடுமையானவையாக இருந்தன. இதற்கு முன்னைய கட்டங்களில் நடைபெற்ற மூன்று போட்டிகளும் குற்றங்கள் தொடர்பான ஆய்வுத்துறை, ஊடுருவல் சோதனை மற்றும் கணனி வலையமைப்பு காதுகாப்பு  ஆகிய விடயங்களை மையமாகக் கொண்டிருந்த என்றும் அக்குழு தெரிவித்தது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger