பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்? பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது - Tamil News பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்? பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்? பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது

பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்? பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது

Written By Tamil News on Wednesday, December 12, 2012 | 5:41 PM


அமெரிக்காவின் தனிநபர் எதிரியான அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக் கொண்ட இடத்தை இணையதளம் ஒன்று அம்பலப்படு த்தியுள்ளது. இந்த இடம் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் இருக்கும் கட்டிடம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.


இவர் மீதான நேவி சீல்ட் கடற்படை தாக்குதலில் ஈடுபட்ட மெட் பிஸ்ஸொனெட் என்பவர் எழுதிய “நோ ஈசி டே” என்ற புத்தகத்தின் தகவலுக்கமையவே இந்த பயிற்சி வளாகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. வின் பாதுகாப்பு செயற்பாட்டு தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த செய்தியை செய்மதி புகைப்படம் ஊடாக கிரிப்டொம். ஒர்க் என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.  எனினும் இந்த வளாகம் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger