விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா? விக்கிலிக்ஸ் - Tamil News விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா? விக்கிலிக்ஸ் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா? விக்கிலிக்ஸ்

விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா? விக்கிலிக்ஸ்

Written By Tamil News on Wednesday, December 26, 2012 | 10:40 PMகடந்த 1987ஆம் ஆண்டு இலங்கை- இந்தியா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஏற்படும் மாதாந்த வரி வருமானத்துக்காக நட்டஈட்டை தருவதற்கு அப்போதைய இந்திய பிரதமா ராஜீவ் காந்தி இணங்கினார்.

இந்த தகவலை இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் வாசிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை இலங்கைக்கான அப்போதைய உயர்ஸ்தானிகர் கே என் திக்சித் மற்றும் இந்திய பிரதமரின் பேச்சாளர் ஆகியோர் லண்டன் ஒப்சேவருக்கு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து லண்டன் ஒப்சேவரை கோடிட்டு இலங்கையின் பத்திரிகைகளும் இந்த இரகசிய உடன்படிக்கை செய்தியை பெரிதாக பிரசுரித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி இந்த தகவல் கொழும்பு அமரிக்கா தூதரகததினால் ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலின்படி ராஜீவ் காந்தி மாதம் ஒன்றுக்கு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நட்டஈடாக இந்திய ரூபாய்களில் 5 மில்லியன்களை வழங்க இணக்கம் வெளியிட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger