தெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி - Tamil News தெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி - Tamil News
Headlines News :

Hottest List

Home » » தெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி

தெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி

Written By Tamil News on Wednesday, December 12, 2012 | 7:06 PMநிஹால் சோமவீர
செயலாளர், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு


அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தென்னங்கன்றுகளை தெங்குச்செய்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறார்.
சர்வதேச தெங்கு தினம் 1998ம் ஆண்டில் நடைபெற்ற ஆசியபசுபிக் தெங்கு சமூகத்தின் (APCC) 25 ஆவது அமைச்சரவை மட்டத்திலான கூட்டத்தில் பிரகடனம் செய்யப்பட்டது.

இது 1969ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சர்வ அரசாங்கங்க ளின் ஓர் அமைப்பாகும். ஆசிய- பசுபிக் தெங்கு சமூகத்தில் 17 நாடுகள் அங் கத்துவம் வகிக்கின்றன. இலங்கை இதன் முன்னோடி அங்கத்துவ நாடாக விளங்குகின்றது. இதற்கமைய சர்வதேச தெங்கு தினம் செப்டம்பர் மாதம் 2ம் திகதியன்று அனுஷ்டிக்கப்படு மென்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தெங்கு உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி 5 நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது. இந்நாடுகள் எந்தளவு தெங்குப் பொருட்களை உற் பத்தி செய்கின்றது என்பது பற்றியும் அவை எந்தளவு நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றது என்பதற்கான அட்டவணையை கீழே தருகின்றோம். அவை சுமார் 394,836 ஹெக்டேயர்களாகும்.

அட்டவணை-1


தகவல்- FAO STAT date2012

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தில் உள்ளூர் கைத்தொழிலுக்கு கைகொடுத்து உதவக்கூடிய செயற்பாடு களின் ஊடாக 2011ம் ஆண்டு மே மாதத்தில் ஜனாதிபதி அவர்கள் உரப் பசளைக்கான மானியத்தை குறிப்பிடத்த க்க அளவு அதிகரித்து தென்னை செய் கையை மேலும் விஸ்தரித்ததன் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2011ம் ஆண்டு முதல் 2016 வரையிலான தேசிய தெங்குத் துறை உற்பத்தி திட்டத்தின் கீழ் வருடாந்த தேங்காய் உற்பத்தி உள்ளூர் பாவனைக்கும் கைத்தொழில் செயற்பாடுகளுக்கும் ஏறத்தாழ 3650 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. (அட்டவணை பார்க்க) உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தேங்காயில் 80 சதவீதம் உள்ளூர் பாவனைக்கும், எஞ்சிய 20 சதவீதமே தெங்குப் பொருள் அடிப்படையிலான கைத் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படு கின்றன.

அட்டவணை- 1

தகவல்: CDA

இலங்கையில் தெங்கு கைத்தொழில் துறையே மிகப் பெரியது. இது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சம்பிரதாயபூர்வமான மற்றும் சம்பிரதாயபூர்வமற்றது. சம்பிரதாயபூர்வமான பிரிவின் கீழ் தெங்கு பொருளை அடிப்படையாக வைத்து பொருட்கள் ஏற்றுமதி சந்தைக்கு தயாரிக்கப்படுகின்றன. சம்பிரதாயபூர்வமற்ற துறையின் கீழ் குடிசைக் கைத்தொழில் மட்டத்திலான சிறிய உற்பத்தி அலகுகள் உள்ளூர் சந்தைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொள்கின்றன.

தெங்கு அபிவிருத்தி செயற்திறன் திட்டத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டளவில் 3650 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சிகரமான காலநிலையிலும் பிரதான தெங்கு உற்பத்தி மாவட்டங்களான குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் பின்வரும் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் 3650 மில்லியன் தேங்காய்களை பெறும் இலக்கை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

i) 2010ல் தென்னந்தோட்டங்களுக்கு உரப் பசளை மானியத்தை விஸ்தரித்தது. இந்த மானியத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் உரத்தின் விலையின் 2/3 பங்கை பொறுப்பேற்கிறது. தென்னை மரங்களுக்கு உரத்தைப் போடும் செயற்பாட்டுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் தேங்காய் உற்பத்தியை வருடாந்தம் 10 சதவீதம் அதிகரிக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ii) ஏற்கனவே உள்ள தென்னந்தோட்ட ங்களில் பூமியின் ஈரலிப்புத் தன்மையை பாதுகாக்கக்கூடிய வகையில் மழை நீரை தேக்கி வைத்தல் மூலம் நீர்ப் பாசன வசதிகளை செய்து கொடுப் பதால் மிகவும் குறைந்த செலவிலான தென்னந்தோட்ட புனரமைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் தேங்காய் உற்பத்தியை 15 சதவீதம் அதிகரிக்க முடியும்.

இவற்றுடன் இலவசமாக தென்னம் பிள்ளைகளை இரண்டரை ஏக்கர் காணியைக் கொண்ட சிறிய தென்னந்தோட்ட &:v(8கி!மிw8வீlழி பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திற்கும் திவிநெகும திட்டத்தின் கீழ் இரண்டு தென்னம் பிள்ளைகளை பெற்றுக்கொடுப்பதனால் நீண்டகால அடிப்படையில் தேங்காய் உற்பத் தியை அதிகரித்து அதன் மூலம் தெங்கு உற்பத்தி பொருட்கள் அடிப்படையிலான கைத்தொழில் துறையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும். வட பகுதியில் தென்னை உற்பத்தி செய்யும் மாவட்டங்களின் ஊடாக அங்குள்ள தென்னந் தோட்டங்களின் பரப்பளவும் நாட்டின் தற்போதைய ஒரு மில்லியன் தென்னந் தோட்டங்களின் அளவுடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேற்படி தெங்கு விஸ்தரிப்பு திட்டத்திற்கு தேவையான தென்னம் பிள்ளைகளை பெற்றுக் கொடுப்பதற்கான இன்னுமொரு திட்டத்தின் கீழ் 32 மில்லியன் தென்னம் பிள்ளைகள் சமூக மட்டத்தில் 2016ம் ஆண்டில் விநியோகிக்கப்படும். இதன் மூலம் கப்றுக புறவற திட்டத்தை கடைப்பிடிப்பதற்கு சமூகத்திற்கு உதவியாக அடையும்.

இன்று இலங்கையில் சமாதானம் நிலைகொண்டிருப்பதனால் தெங்கு கைத்தொழில் துறையின் அபிவிருத்தி சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. உள்ளூர் கைத்தொழில் துறைக்கு ஏற்புடைய நட்புறவுடனான கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிப்பதனாலும் அரசாங்கம் பசளைக்கு மானியத் திட்டத்தை அமுலாக்கியதனாலும் தெங்கு கைத்தொழில் துறை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றது. எனவே, இந்த நல்ல செய்தியை நாம் தெங்கு கைத்தொழில் துறையில் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் எடுத்துரைப்பது அவசியமாகும்.

 இதற்கென 2012ம் ஆண்டு ஒக்டோபர் 12ம் திகதியான இன்று தேசிய நிகழ்வொன்று சர்வதேச தெங்கு தினத்துடன் இணைந்து நடைபெறுகிறது. இது தெங்கு அபிவிருத்தி துறையின் முன்னேற்றத்திற்கு ஓர் உந்து சக்தியாக அமையும். எனவே, தேசிய நிகழ்வாக சர்வதேச தெங்கு தினத்தை நாம் கடைப்பிடிப்பது எங்கள் நாட்டின் மேம்பாட்டுக்கு பேருதவியாக அமையும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger